மலையில் இறங்கும் போது லோடு லாரில பிரேக் பிடிக்க மாட்டாங்க ஆனா வண்டி எப்படி ஸ்லோ ஆகும் தெரியுமா?
வாகனங்களில் பயணிக்கும் பலர் தைரியமாக வேகமாக பயணிக்கிறோம் என்றால் அதற்கு வாகனத்தின் இன்ஜின் சிறப்பாக இருக்கிறது, வாகனத்தின் திறன் சிறப்பாக இருக்கிறது, என்பது மட்டும் காரணம் அல்ல. வாகனத்தின் பிரேக்கும் சிறப்பாக இருக்கிறது. என்பதுதான் ஒரு வாகனத்தின் பிரேக் சிறப்பாக இல்லை என தெரிந்து விட்டால் ஒருவரால் வாகனத்தில் அமர்ந்து வேகமாக ஓட்ட முடியாது. அப்படி பார்த்தால் வாகனத்தின் பிரேக் தான் நமது வேகத்தை முடிவு செய்கிறது.
வாகனத்தில் வேகமாக செல்ல வேண்டும் திடீரென வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்றால் பிரேக் பிடிக்க வேண்டும் என்றுதான் நாம் எல்லோருக்கும் இது நாள் வரை தெரிந்த விஷயமாக இருக்கிறது. இப்படித்தான் நாம் இன்றளவும் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாதாரணமாக பைக், கார் ஓட்டும் நபர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. அதன் பெயர்தான் இன்ஜின் பிரேக்கிங்.

ஒரு கனரக வாகனம் இருக்கிறது என்றால் அதில் அதிகமான லோடு இருக்கும்போது அந்த வாகனம் வேகமாக சென்றால் அதை பிரேக் மூலம் கண்ட்ரோல் செய்வது என்பது முட்டாள்தனம். பிரேக் என்பது வாகனத்தின் வீலுவுடன் பிரேக் பேட் உரசி அதன் வேகத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமாகும். அதிக லோடுடன் இருக்கும் வாகனத்தில் டயரில் அதிக லோடு இருக்கும் வகையில் அந்த வீலின் டார்க் இருக்கும்.
இப்படியான அதிக நேரத்தில் அதிகமாக பிரேக் அழுத்தும் போது பிரேக் பேட் வீலுடன் உரசும்போது அதிக அளவிலான உராய்வு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் பிரேக் ஃபெயிலியர் கூட ஏற்படலாம். பொதுவாக பிரேக் பேட் வீலுடன் உரசும்போது அதிகமான வெப்பம் வெளியேறும். அதே நேரம் அதிக எடை கொண்ட வாகனத்தில் இப்படியாக பிரேக்குடன் அதிக வெப்பம் வெளியேறும் வகையில் பிரேக் பேட் இருந்தால் பிரேக் ஃபெயிலியர் நிச்சயம் ஏற்பட்டு விடும்.

இப்படியான நேரங்களில் நிச்சயம் கனரக வாகனங்களில் பிரேக் மூலம் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவது என்பது முட்டாள்தனம். இப்படி செய்தால் வாகனம் பிரேக் ஃபெயிலியர் ஆகி விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. சரி அப்படி என்றால் அதிக எடை கொண்ட வாகனங்கள் வேகமாக செல்லக்கூடாதா என நீங்கள் கேட்கலாம்.
வல்லுநர்கள் கொடுக்கும் அட்வைஸ் என்னவென்றால் கனரக வாகனங்கள் முடிந்த அளவு வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரு இறக்கமான பகுதியில் அதிக லோடுடன் ஒரு வாகனம் வரும்போது தானாக அதன் வேகம் அதிகரித்து விடும். இந்த மாதிரியான நேரங்களில் எப்படி அதன் வேகத்தை கட்டுப்படுத்துவது? பிரேக் பிடிக்காமல் எப்படி வாகன வேகத்தை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என்று பலரும் குழம்பி போய் இருப்பார்கள்.

இதற்கு தான் கனராக வாகனங்களில் தற்போது இன்ஜின் பிரேக்கிங் என்ற சிஸ்டம் இருக்கிறது. இந்த சிஸ்டத்தை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் பிரேக்கை பிடிக்காமலேயே அதன் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். இதனால் பிரேக் ஆயுள் குறைவது தவிர்க்கப்படும் அதே நேரம் இன்ஜின் பிரேக் பிடிப்பதால் இன்ஜின் ஆயுளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இன்றளவும் இந்த பிரேக் எப்படி செயல்படுகிறது என பலருக்கும் தெரியவில்லை.
இன்ஜின் பிரேக்கிங் என்பது மூன்று விதமான தொழில்நுட்பங்களில் இயங்குகிறது. பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை ஏர் இன் டேக் பகுதியில் பட்டர்பிளை நியாபகம் வைத்திருப்பார்கள். இது வாகனம் கியரில் இருக்கும் போது டிரைவர் ஆக்சிலரேட்டரை முழுமையாக விட்டு விட்டால் இது ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகிவிடும். இதனால் இன்ஜின் உள்ளே காற்று பயணிக்க முடியாது. அதனால் ஏற்படும் வெற்றிடம் காரணமாக கம்போஷன் அளவு குறைக்கப்பட்டு பவர் குறையும் இதனால் இன்ஜினின் வேகம் குறையும்.
அடுத்ததாக டீசல் தொழில்நுட்பத்தை பொறுத்த வரை இதே பட்டர்பிளை நாம்பை எக்ஸாஸ்ட் பகுதிக்கு புகையை அனுப்பும் இடத்தில் பொருத்தி இருப்பார்கள். டிரைவர் நேரில் இருக்கும் போது ஆக்சிலேட்டரை முழுமையாக விட்டவுடன். இந்த நாப் லாக் ஆனதும் கம்பேஷனான காற்று முழுமையாக வெளியேறாமல் உள்ளே ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் அதனால் அடுத்த கம்போஷன் பெரிய அளவுக்கு பவர்ஃபுல்லாக இல்லாமல் அதன் வேகம் குறையும். இதன் மூலம் இன்ஜின் பிரேக்கிங் நடைபெறும்.
கடைசி ஆப்ஷனை ஜாக் பிரேக் என்றும் சொல்வார்கள். இதை பொறுத்தவரை டீசல் இன்ஜினில் இன்டைக் கம்பஷன் பவர் மற்றும் எக்ஸாஸ்ட் என நான்கு படிநிலைகளில் செயல்படும். இதில் பவர் படிநிலை ஏற்படும் போது எக்ஸாக்ட் சற்று கீழே விலகி பவர் முழுமையாக கிராண்ட் சாப்ட்ருக்கு செல்லாமல் வெளியேற்றப்படும் இதன் மூலம் பவர் குறைவாகி இன்ஜின் பிரேக் ஏற்படும். இந்த மூன்று விதமான இன்ஜின் பிரேக்கிங் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கனரக வாகனங்கள் அதிக லோடு உடன் மலைப்பகுதியில் பயணம் செய்வதை பார்த்தால் உடனடியாக அந்த வாகனத்திற்கு வழி விடுங்கள். முக்கியமாக அந்த வாகனம் கீழே இறங்கி கொண்டிருக்கும்போது அதிக எடை இருப்பதால் வாய்ப்புள்ளது. இதனால் இந்த நேரத்தில் அவர்கள் இன்ஜின் பேக்கை பயன்படுத்தி வருவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









