கார் ஷோரூம்ல கூட இந்த விஷயத்தை சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ரகசியம் இது!
புதிதாக கார் வாங்கும் பலர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து தனக்கு ஏற்ற கார் எது என தேர்வு செய்து வாங்குவார்கள். இப்படியாக தேர்வு செய்வதற்காக காரில் உள்ள அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள் இந்த அம்சங்களில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் குறிப்பிடாத ஒரு விஷயம் இருக்கிறது. இது மிக முக்கியமான விஷயமாகும் இதைப் பற்றி தான் நாம் இங்கே காணப் போகிறோம்.
புதிதாக கார் வாங்கும் பலர் தான் வாங்க போகும் கார் எந்த அளவுக்கு சிறப்பாக பெர்ஃபார்ம் செய்யும் என்பதை அறிந்து கொள்வதற்காக காரின் இஞ்சின் பவர் எவ்வளவு என சோதனை செய்தார்கள் பெரும்பாலான கார் நிறுவனங்கள் தங்கள் கார்களில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் எவ்வளவு பவரை வெளிப்படுத்தும் என்பதை குறிப்பிட்டு இருப்பார்கள். ஒரு காரின் இன்ஜின் பவர் என்பது குதிரை திறனுடன் ஒப்பிடப்படுகிறது.

அதாவது அந்த காரின் இன்ஜின் எத்தனை குதிரைகள் சேர்ந்து இழுத்தால் ஒரு பவர் கிடைக்குமோ அத்தனை குதிரைகள் பவர் என்பதை குறிக்கும் வகையில் இந்த இன்ஜினின் பவரை பிஎச்பி என எழுதி இருப்பார்கள். சில நிறுவனங்கள் இன்ஜின் திறனை பிஎஸ் எனவும் குறிப்பிட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இப்படியாக காரின் இன்ஜின் திறன் கார் தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்படும்.
கார் இன்ஜினில் இருந்து வெளியாகும் இதே பவர் காரின் வீல்களுக்கும் செல்லுமா என்றால் அதைப் பற்றி தான் நாம் முதலில் சிந்திக்க வேண்டும். இதைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு நாம் வீல் ஹார்ஸ் பவர் என்றால் என்ன என தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி இன்ஜினுக்கு குதிரை திறன் என்ற ஒரு விஷயம் இருப்பது போல வீல்களுக்கும் தனித்தனியாக குதிரை திறன் என்ற ஒரு விஷயம் இருக்கிறது.

ஒரு வாகனத்தின் இன்ஜினில் இருந்து வெளிப்படும் பவர் என்பது கியர் பாக்ஸ், கிளட்ச் வழியாக பயணித்து விலை சென்றடைகிறது. அதேநேரம் ஒரே இன்ஜின் தான் அது இணைக்கப்பட்டிருக்கும் அத்தனை வீலுக்கும் பவரை செலுத்துகிறது. இதனால் ஒரு வீலுக்கான குதிரை திறன் என்பது இன்ஜினின் குதிரை திறனை விட குறைவாக தான் இருக்கும். பலருக்கும் இந்த விஷயம் தெரிவதில்லை.
இதனால் நீங்கள் புதிதாக கார் வாங்கும் போது அதன் இன்ஜின் பவரை பார்த்து அதே பவரில் தான் கார் பயணிக்கும் என தவறாக நினைத்து விட வேண்டாம். இன்ஜின் பவரை விட குறைவான பவர் தான் வீலுக்கு வரும் அதனால் அதைவிட குறைவான பவர்கள் தான் இந்த கார் பயணம் செய்யும். இருந்தாலும் மூலாதாரமாக இருப்பது இன்ஜின் தான் என்பதால் இன்ஜின் பவரை குறிப்பிடுகிறார்கள்.

இன்ஜினில் இருந்து கியர் பாக்ஸ் கிளட்ச் எல்லாம் பல்வேறு லிவர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. என்பதால் அதற்கு தனியாக பவர் தேவைப்படும் அந்த பவர் எல்லாம் போக மீதம் உள்ள பவர் தான் நேரடியாக வீலுக்கு வரும் இதுபோக காரின் எடையும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. காரின் எடை குறைவாக இருந்தால் அதிக பவர் கிடைக்கும் அதிக எடை இருந்தால் குறைவான பவர் தான் கிடைக்கும்.
இதனால் புதிதாக கார் வாங்கும் போது அதன் வீல் குதிரை திறன் எவ்வளவு என நீங்கள் வல்லுனர்களிடம் விசாரித்து அதை வாங்குவது சிறந்தது. உங்களுக்கு காரின் பவர் தான் முக்கியம் என்றால் இது மிக முக்கியமான விஷயம். இந்த விஷயத்தை வாகன தயாரிப்பு நிறுவனங்களே பொதுவெளியில் வெளியிடுவதில்லை. ஆனால் அவர்கள் இதை தனியாக கணக்கிட்டு அவர்களது ஆய்வு பயன்பாட்டிற்காக வைத்திருப்பார்கள்.
பலரும் இப்படியாக இன்ஜின் திறந்தால் வாகனம் பயணிக்கும் திறன் என தவறான புரிதலில் இருக்கிறார்கள். வாகனம் பயணிக்கும் திறன் இன்ஜின் திறனைவிட நிச்சயம் குறைவாக தான் இருக்கும். அதிகபட்ச திறனாகவே இன்ஜின் திறன் தான் இருக்கும் என்பதால் தான் இன்ஜின் திறனை குறிப்பிடுகிறார்கள். குறிப்பிட்ட பவர் கொண்ட இன்ஜின் வேறு வேறு வாகனங்களில் பொருத்தப்படும் போது அதன் வீல் குதிரை திறன் மார்வாடி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வாங்கும் பலர் அதன் இன்ஜின் பவரை பார்த்து வாங்குகிறார்கள். ஆனால் அதன் இன்ஜின் பவர் முழுமையாக அதன் வீலுக்கு செல்லாது என்ற விவரம் தெரியாமல் வாங்குகிறார்கள். இதை கார் வாங்கும் முன் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு இந்த விஷயம் தெரிவதில்லை. கார் தயாரிப்பு நிறுவனங்களே இந்த விஷயத்தை பெரிய அளவில் வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications









