உங்க கார்ல இந்த பட்டன் இருக்குதா? அசால்டா நினைச்சிடாதீங்க! இதை கரெக்டா யூஸ் பண்ணா லட்சகணக்குல சேமிக்கலாம்

உங்க கார்ல இப்படி ஒரு பட்டன் இருந்தால் அதை அசால்டாக நினைக்க வேண்டாம். இந்த பட்டனை சரியாக பயன்படுத்துவதன் மூலம் உங்கள் காருக்கு ஆகும் செலவில் லட்சக்கணக்கான பணத்தை குறைக்க முடியும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? இந்த பட்டன் எப்படி வேலை செய்யும்? உள்ளிட்ட விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் இன்ஜின் ஐடியல் ஸ்டார்/ஸ்டாப் அம்சம் என்பது இருக்கிறது. இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்யவும் டிஆக்டிவேட் செய்யவும் டிரைவர் சீட்டுக்கு அருகிலேயே பட்டன் ஒன்றும் இருக்கிறது. இந்த பட்டனை ஆன் செய்தால் இன்ஜின் ஸ்டார்ட் அம்சம் ஆக்டிவேட் ஆகும். இந்த பட்டனை ஆப் செய்தால் டிஆக்டிவேட் இருக்கும்.

engine idle start/stop button

இன்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் அம்சம் என்பது கார் ஓட்டாமல் தனியாக நிற்கும்போது இன்ஜின் தேவை இல்லாமல் செயல்பட்டால் அதை ஆப் செய்து விடும். மீண்டும் வேண்டுமென்ற நேரத்திற்கு இதை ஒரு நொடியில் ஆன் செய்து கொள்ளலாம். இந்த அம்சத்திற்கு தான் இன்ஜின் ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் என பெயர் வைத்துள்ளனர்.

இந்த அம்சம் நீங்கள் டிராபிக்கில் செல்லும் போது டிராபிக் சிக்னலில் காரை நிறுத்தினால் காரை ஆப் செய்ய வேண்டிய தேவை இல்லை கார் தனியாக சில நொடிகள் எந்த அசைவும் என்று நின்றாலே இன்ஜின் தானாக ஸ்டாப் ஆகிவிடும். அதன் பின்பு நீங்கள் சிக்னல் விழுந்த பின்பு நகர லேசாக பிரேக்கை அழுத்தினால் போதும் இன்ஜின் மீண்டும் ஸ்டார்ட் ஆகி பயணத்திற்கு தயாராகிவிடும்.

engine idle start/stop button

இந்த அம்சம் தேவையில்லாமல் டிராபிக் சிக்னல் போன்ற இடங்களில் கார் தனியாக நிற்கும்போது இன்ஜின் செயல்பட்டு அதற்காக எரிபொருள் செலவாவதை குறைக்கிறது. இதனால் காரின் மைலேஜ் அதிகரிக்கும் அதே நேரம் பெட்ரோல் செலவு குறையும். உங்கள் பணமும் பெரிய அளவில் மிச்சமாகும்.

இந்த தொழில்நுட்பத்தால் காருக்கு தேவைப்படும் பெட்ரோலின் அளவு குறையும். கார் சிக்னலில் நிற்கும் போது தேவையில்லாமல் ஆன் நிலையில் இன்ஜின் இருந்தால் அதிகமாக பெட்ரோல் செலவாகும். இந்த தொழிற்நுட்பம் மூலம் இன்ஜின் ஆஃப் ஆனால் பெட்ரோல் செலவாவது ஜீரோ சதவீதமாக மாறிவிடும். சிட்டி பயன்பாட்டிற்கு இந்த தொழில்நுட்பம் மிகச்சிறந்த பயனைத் தரும்.

வெறும் பெட்ரோல் செலவு மட்டும் இல்ல இந்த பெட்ரோலால் ஏற்படும் மாசுவையும் இந்த தொழிற்நுட்பம் குறைக்கிறது. தேவை இல்லாமல் சிக்னலில் நிற்கும்போது காற்று மாசு ஏற்படும் விதமாக காரிலிருந்து எரியும் பெட்ரோலின் கழிவுகள் வெளியாகிறது. ஆனால் இந்த தொழிற்நுட்பம் இன்ஜினை ஆப் செய்து விடுவதால் இதிலிருந்து மாசு வெளியாகாது இதனால் சுற்றுச்சூழலுக்கும் இது நன்மை பயக்கிறது ‌.

இந்த வசதி கொண்ட பெரும்பாலான கார்களில் இந்த அம்சத்தை ஆன் செய்யவும் ஆஃப் செய்யவும் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டன் ஆனில் இருந்தால் மட்டுமே இந்த அம்சம் செயல்படும். இந்த பட்டன் ஆஃப் செய்யப்பட்டிருந்தால் இந்த அம்சம் செயல்படாது. இதனால் இதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் எந்த மாதிரியான சாலைகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து ஆன்/ஆஃப் செய்து கொள்ள முடியும்.

குறிப்பாக சிட்டி மற்றும் அதிக டிராபிக் நிறைந்த பகுதிகளில் நின்று நின்று செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ள இடங்களில் பயணிக்கிறீர்கள் என்றால் இதை ஆன் செய்து கொள்ளலாம். ஆனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது இதை ஆப் செய்வது தான் சிறந்தது. டோல்கேட்டுகளில் நீங்கள் சிறிது நிமிடங்கள் நிற்க வேண்டியது இருக்கும். ஆனால் அவ்வப்போது நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த நேரத்தில் கார் இன்ஜினை ஆப் செய்ய வேண்டிய தேவை இருக்காது. அடிக்கடி ஆஃப் செய்து ஆன் செய்வதாலும் பிரச்சனை ஏற்படும்.

இதனால் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது இந்த அம்சத்தை ஆஃப் செய்தும் சிட்டிக்குள் பயணிக்கும் போது இந்த அம்சத்தை ஆன் செய்தும் பயணித்தால் உங்களுக்கு பெட்ரோல் செலவு குறையும். இதை கணக்கிட்டுப் பார்த்தால் உங்கள் வாழ்நாளில் லட்சக்கணக்கான பணத்தை இந்த அம்சம் மூலம் சேமிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வைத்திருக்கும் பலருக்கும் இப்படியான பட்டன் இருப்பது ஏன் என்றே தெரியாது பலர் இதை மைலேஜ் பட்டன் என தவறாக புரிந்து கொள்கிறார்கள் இதை சரியான விதத்தில் கையாண்டால் மட்டுமே உங்கள் காரின் மைலேஜ் சிறப்பாக இருக்கும். அடுத்த முறை நீங்கள் இந்த வசதி கொண்ட காரில் பயணிக்கும் போது இது சரியாக பயன்படுத்துங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 2, 2023, 13:28 [IST]
English summary
Engine idle start stop used for fuel saving and increase mileage
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+