காரை கழுவும் போது இந்த விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க அப்புறம் எல்லாம் நாஸ்தியாகிடும்!

நீங்கள் உங்கள் காரை வீட்டில் கழுவினாலும் சரி அல்லது வெளியில் கழுவினாலும் சரி, இந்த நான்கு விஷயங்களை மறந்துவிடாதீர்கள். காரை கழுவும் போது இந்த 4 விஷயங்களை கவனத்தில் கொண்டால், உங்கள் காரின் செயல்திறனும் மேம்படும். காரின் செயல்திறனை அதிகரிக்கவும், கார் பளபளப்பாகவும் இருக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள டிரிக்குகளை பின்பற்றவும்.

காரின் இன்ஜினை ஹார்டான நீரில் சுத்தம் செய்யுங்கள், இது உங்கள் இன்ஜினை நன்கு சுத்தம் செய்யும். எந்த தூசி அல்லது எந்த வகையான அழுக்கு இருந்தாலும், அது சுத்தம் செய்யப்படுகிறது, இது காரின் செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறது. அதிகமாக அழுக்கு இருந்தால் காரின் செயல்திறன் குறையும்.

பேட்டரியில் தண்ணீர்? காரைக் கழுவும் போது அதிக அழுத்தத்துடன் கன்டென்சரில் தண்ணீர் ஊற்றினால், அதிக வெப்பம் பிரச்னை குறையும். இது உங்கள் ஏசிக்கு குளிர்ச்சியான காற்றைக் கொடுக்கும். இதனால் அவ்வப்போது இதை சுத்தமாக வைத்திருங்கள் இது உங்களுக்கு நல்ல டிரைவிங் அனுபவத்தை வழங்கும்.

மேலும் இதை முற்றிலுமாக துடைக்க வேண்டும் இல்லை என்றால் சிறிது நேரம் கழித்து காரின் ஓரங்களில் தண்ணீர் படிந்து விடும், இதன் காரணமாக துருப்பிடிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். இதனால் தண்ணீரில் கழுவிய பின்பு அவற்றை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.

காரின் டயர்களை உள்ளே இருந்து சுத்தம் செய்வது முக்கியம். இதில் துருப்பிடிக்கும் வாய்ப்புகளும் மிக அதிகம். அதானல் தண்ணீரால் சுத்தம் செய்த பின்பு அந்த தண்ணீரை முற்றிலுமாக துடைத்துவிடவேண்டும். இல்லை என்றால் அதில் பிரச்சனை ஏற்படும். தண்ணீர் தேங்கி நின்றாலே காரில் துரு பிடிக்கும் தன்மை அதிகமாகிவிடும்.

இதைத் தவிர மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். காரை வெயிலில் கழுவ வேண்டாம், வெயிலில் காரைக் கழுவினால் தண்ணீர் விரைவில் காய்ந்து, தண்ணீர் தடம் காரில் பதிந்துவிடும் ஈரமாக இருக்கும் போதே ஒரு துணியை வைத்து துடைத்துவிடுவது தான் நல்லது.

.

உங்கள் காரை மாதம் ஒரு முறையாவது கழுவுங்கள், உங்கள் கார் தூசி நிறைந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால், மாதத்திற்கு ஒரு முறையாவது கழுவ வேண்டியது அவசியம். இல்லை என்றால் அந்த தூசிகளே மிகப்பெரிய அளவில் உங்கள் காருக்கு சேதத்தை ஏற்படுத்திவிடும். பின்னர் அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும்.

காரை வெளியில் இருந்தும் உள்ளே இருந்தும் சுத்தம் செய்ய வேண்டும். பல நேரங்களில், காரின் உட்புறத்தை சுத்தம் செய்யாததால், காரில் துர்நாற்றம் ஏற்பட்டு, சிறிது நேரம் கழித்து காரில் பயணிக்க முடியாமல் போகும். இது உங்களுக்கு மோசமான டிரைவிங் அனுபவத்தை பெற காரணமாக மாறிவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் இன்ஜினை அடிக்கடி சுத்தம் செய்வது காரின் செயல்திறனை பாதிக்கிறது. இது தேவையான நேரங்களில் மட்டும் சுத்தம் செய்வது காரின் ஆயுளை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட காலம் உங்களால் காரை பயன்படுத்த முடியும். இந்த டிப்ஸ்களை பின்பற்றி உங்கள் காரை சுத்தமாக வைத்திருங்கள்

More from DriveSpark

Article Published On: Sunday, August 4, 2024, 20:00 [IST]
English summary
Regular and strategic car washing not only improves the vehicle's appearance but also its performance. From engine cleaning to tire maintenance, learn the essential tips for effective car care.
மேலும்... #auto tips #car tips #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X