கோடை வெயிலை சமாளிக்க காரில் இந்த ஆக்ஸசரீஸ் இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க! 1000 ரூபா செலவு பண்ணாலே போதும்!

கோடைக்காலம் தமிழ்நாட்டில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலையில் நடந்து செல்வது மட்டுமின்றி, காரில் செல்வது கூட சிரமமானதாக மாறியுள்ளது. இருப்பினும், காரில் சில ஆக்ஸசரீகள் (Accessories) இருந்தால் கோடை வெப்பத்தை சமாளிக்கலாம். அவ்வாறு, ஆக்ஸசரீஸ் கடையில் இருந்து வாங்கி காரில் பொருத்திக் கொள்ளக்கூடிய சில ஆக்சரீஸை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சன்ஷேட்ஸ் (Sun shades): சூரிய ஒளி நுழைவதை தடுத்து, காருக்குள் நிழலை ஏற்படுத்துவதினாலேயே இதன் பெயர் சன்ஷேட் என அழைக்கப்படுகிறது. காரை நீண்ட நேரத்திற்கு சூரிய ஒளியின் கீழ் நிறுத்தி வைத்திருந்தால் காரை சுற்றிலும் வழங்கப்படும் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் விண்ட்ஷீல்டுகள் வாயிலாக வெப்பம் காருக்குள் கடத்தப்படும்.

essential summer car accessories

இதனால், காருக்குள் நுழையும்போது வெளியே இருப்பதை காட்டிலும் அதிக வெப்பத்தை காருக்குள் உணர நேரிடும். இதனை தவிர்க்க, சன்ஷேட்களை பயன்படுத்தலாம். காந்தம் மூலமாக ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டக்கூடிய சன்ஷேட்கள் மொத்தம் நான்கு ஜன்னல் கண்ணாடிகளுக்கும் சேர்த்து ரூ.1,000க்குள் கிடைக்கின்றன. அல்லது திரைச்சீலைகள் போலவும் சன்ஷேட்கள் கிடைக்கின்றன.

ஜன்னல் கண்ணாடிகளுக்கு மட்டுமின்றி, முன்பக்க மற்றும் பின்பக்க விண்ட்ஷீல்டுகளுக்கும் வெவ்வேறான வடிவங்களில் சன்ஷேட்கள் கிடைக்கின்றன. பல நாட்களுக்கு காரை சூரிய ஒளிக்கு கீழ் நிறுத்தி வைக்க போகிறீர்கள் என்றாலோ மற்றும் சூரிய வெப்பத்தால் காரின் வெளிப்பக்க பெயிண்ட் பாதிக்கப்பட கூடாது என நினைத்தாலோ முழுவதும் காரை மறைத்தப்படி கார் கவரை பயன்படுத்தலாம்.

essential summer car accessories

கூலிங் ஆக்ஸசரீஸ் (Cooling Accessories): கோடை காலத்தில் சூரிய வெப்பத்தில் இருந்தும், குளிர் காலத்தில் அதீத குளிரில் இருந்தும் முன் இருக்கை பயணிகளை பாதுகாப்பதற்காக இன்றைய கால மாடர்ன் கார்கள் பலவற்றில் வெண்டிலேட்டட் (Ventilated) இருக்கைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், உங்கள் காரில் அத்தகைய வசதி இல்லையென்றாலும் அதனை நீங்களாகவே ஏற்படுத்திக் கொள்லலாம்.

இதற்காக வெண்டிலேட்டட் சீட் குஷின்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை காருக்குள் வழங்கப்படும் மின்விசிறியின் காற்றை பயன்படுத்தி முன் இருக்கைகளில் அமர்பவர்களின் முதுகிற்கு குளிர்ந்த காற்றை வழங்கும். இது போதாது என நினைப்பவர்கள் கூடுதலாக ஒரு மின்விசிறியை வாங்கி காருக்குள் பயன்படுத்தலாம். அளவில் சிறியதாக கிடைக்கும் இந்த காருக்கான மின்விசிறிகள் எளிதில் காரில் இருந்து தனியாக வெளியே எடுக்கக் கூடியவைகளாக கிடைக்கின்றன.

இதர சவுகரிய வசதிகள்: மேற்கூறப்பட்ட ஆக்ஸசரீகள் மட்டுமின்றி, கோடைக்காலத்தில் காருக்குள் பயன்படுத்துவதற்காக என்றே பிரத்யேகமாக சில ஆக்ஸசரீகளும் கார் ஸ்பேர் பார்ட்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அந்த வகையில், காருக்குள் தண்ணீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க மினி-குளிர்சாதன பெட்டி அல்லது கூலரை வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.

முன்பக்க விண்ட்ஷீல்டின் வழியாக காருக்குள் வரும் வெப்பத்தினால் டாஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் சக்கரம் பாதிக்கப்படாமல் இருக்க அதற்கென்றே பிரத்யேகமாக கவர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், கோடைக்காலத்தில் சாலையின் வெப்பத்தால் டயர்களில் சற்று விரைவாகவே காற்றழுத்தம் குறைய நேரிடும். ஆகையால், காற்று நிரப்பியை எப்போதும் காரில் வைத்திருப்பது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள ஆக்ஸசரீகளில் பெரும்பாலானவை ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கக் கூடியவைகளாக உள்ளன. இருக்கைகளுக்கான வெண்டிலேஷன் குஷின் போன்ற சில ஆக்ஸசரீஸ்-க்கு மட்டுமே ரூ.5,000- 7,000 அளவிற்கு செலவழிக்க வேண்டியிருக்கும். இருப்பினும், இவற்றை வாங்கிப் போட்டால் இந்த கோடைக்காலத்திற்கு மட்டுமின்றி, வரும் வருடங்களிலும் பயன்படுத்த முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 8, 2026, 18:09 [IST]
English summary
Essential summer accessories to beat the indian heat in your car check all details here
மேலும்... #car tips #car accessories #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+