மத்திய அரசு இதை செய்தால் மட்டுமே அமெரிக்கா & சீனாவுக்கு சமமாக முடியும்!! இவி விற்பனையும் சூடுப்பிடிக்கும்...
எலக்ட்ரிக் வாகனங்களில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேகமாக முன்னேறி போகின்றன. ஆனால் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நாம் இன்னமும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தான் நின்று கொண்டு இருக்கிறோம். மிகவும் சிலர் மட்டுமே வித்தியாசமாக யோசித்து எலக்ட்ரிக் கார்களை வாங்க முயற்சிக்கின்றனர்.
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் காரான டாடா நெக்ஸான் இவி -இன் விற்பனை எண்ணிக்கை தான் இதற்கு சாட்சி. எலக்ட்ரிக் வாகனங்களில் பிரச்சனை என்னவென்றால், அவற்றை சார்ஜ் செய்வதுதான். பெட்ரோல், டீசலை போல் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை உடனடியாக சார்ஜ் செய்ய முடிவதில்லை.

சில வினாடிகளிலேயே சார்ஜ் செய்துவிடக்கூடிய பேட்டரி & சார்ஜரை உருவாக்குவது ஒன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கடினமான விஷயம் அல்ல. ஆனால் அவ்வாற்றை மக்கள் வாங்குவதற்கு ஏற்ற விலையில் கொடுக்க முடியாது. அதிலிலும் குறிப்பாக, பட்ஜெட் விலையில் கார்கள் வாங்குபவர்கள் அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளில் அத்தகையை பேட்டரி & சார்ஜர்கள் சாத்தியமற்றது.
இதனால்தான் மாற்று வழியை இந்தியா அடையாளம் காண வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த வகையில் சிறந்த மாற்று வழியாக பலர் கூறுவது பேட்டரி சுழற்சி முறையை ஆகும். வீட்டிற்கு நாம் அவ்வப்போது புக் செய்து வாங்கும் சமையல் சிலிண்டரை போன்றதுதான் இவி பேட்டரி சுழற்சி முறையாகும். ஒவ்வொரு எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களும் தங்களது எலக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேகமாக ஓர் பேட்டரி மாற்றும் நிலையங்களை உருவாக்கலாம்.

அல்லது டீலர்ஷிப் மையத்தை போல், ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் ஓர் டீலருடன் கூட்டணி சேர்ந்து பேட்டரி மாற்றும் நிலையங்களை ஏற்படுத்தி கொள்ளலாம். இந்த நிலையங்களில் எலக்ட்ரிக் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் சார்ஜ் தீர்ந்து போன பேட்டரியை கொடுத்து சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்று கொண்டு செல்லலாம். இதற்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக விதிக்கப்படலாம். இதன் மூலமாக சில நிமிடங்களில் நின்று போன எலக்ட்ரிக் வாகனத்தை உயிர்பிக்க முடியும்.
வீட்டிற்கு குறைந்தது ஓர் வாகனத்தை கூட வைத்து இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ந்தே இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. அதாவது, எதிர்காலத்தில் எல்லாரும் எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். அப்படியென்றால், பேட்டரி சுழற்சி முறையை மத்திய அரசே கையாள முயற்சிக்கலாம். இதன் மூலமாக, தாம் தினந்தோறும் செலவழிக்கும் பணம் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் செலவாகிறது என்கிற நிம்மதி மக்களுக்கு கிடைக்கும்.

மத்திய அரசும் இந்த திட்டத்தில் இருப்பது போன்ற அறிகுறிகள் தான் தெரிகிறது. ஏனெனில் சமீபத்தில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அவற்றின் சார்ஜர்களுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை அவர்களிடமே தயாரிப்பு நிறுவனங்கள் திருப்பி கொடுக்க மத்திய அரசு ஆணையிட்டு இருந்தது. இதனால் அரசாங்கமே சார்ஜர்களை உருவாக்கி வழங்கலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மத்திய அரசு பேட்டரி சுழற்சி முறையை நிர்வகிக்குமா? அல்லது இல்லையா? என்பது தெரியாது. ஆனால் எதிர்கால எலக்ட்ரிக் போக்குவரத்தை விரைவாக பெற பேட்டரி சுழற்சி முறையே நம் இந்தியா போன்ற நாட்டிற்கு ஏற்றது. இல்லையென்றால் நீண்ட காலத்திற்கு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications









