வாகனம் ஓட்டுவதற்கு போதிய கண் பார்வை உள்ளதா? கண்டுபிடிக்கும் வழி

மேலும், தற்போது நீரழிவு உள்ளிட்ட நோய்களால் பலருக்கு கண் பார்வை வாகனங்களை இயக்குவதற்கு போதிய சரியான அளவில் இருப்பதில்லை. இதுபோன்றவர்கள் மருத்துவரிடம் சென்று கண் பார்வையை அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது நல்லது. மேலும், அவர் தரும் ஆலோசனையின் பேரில் கார்களை ஓட்டுவது நல்லது.
கண் பார்வை சரியில்லாதவர்கள் இரவில் கார் ஓட்டுவதை அறவே தவிர்க்க வேண்டியது அவசியம். இந்தநிலையில், கண் பார்வை சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.
எதிரில் வரும் வாகனத்தின் பதிவு எண் பலகையில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களை 20.5 மீட்டர் (67 அடி) தூரத்தில் இருந்து படிக்க முடிந்தால் உங்களுடைய கண் பார்வை சரியாக இருக்கிறது என்று அர்த்தம். இல்லையென்றால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம்.


Click it and Unblock the Notifications








