தந்தையர் தினம் ஸ்பெஷல்!! உங்கள் தந்தை பைக் & காரை விரும்பக்கூடியவரா? இதில் ஒரு கிஃப்ட் கொடுத்து அசத்திடுங்க...
தந்தையர் தினம் (Father's Day) இந்த ஜூன் 18இல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உங்களது தந்தை ஆட்டோமொபைல் வாகனங்களை மிகவும் விரும்பக்கூடியவர் என்றால் இந்த தந்தையர் தினத்தில் அவருக்கு பரிசளிக்க ஏற்ற ஆட்டோமொபைல் சார்ந்த சில பரிசுகளை இனி பார்க்கலாம்.
1. சன் கிளாஸஸ்: ஸ்டைலாக இருக்கும் அதேநேரத்தில், பைக் பயணத்தின் போது தேவைப்படக்கூடிய ஒன்று. குறிப்பாக, வெயிலில் பைக் ரைடு செய்யும்போதும், மண்/ தூசி மிகுந்த பகுதிகளில் பைக்கை ஓட்டும்போதும் மூக்கு கண்ணாடிகள் அவசியமானவை. கண்ணை குளிர்ச்சியாக்கக்கூடிய சன் கிளாஸாக அது இருந்தால் இன்னும் சிறந்தது. எந்தவொரு ஆணும் சன் கிளாஸை விரும்புவர் என நம்புகிறோம்.

2. கார் வாக்யூம் க்ளீனர்: சிலருக்கு தங்களது காரை தாங்களே சுத்தம் செய்வது பிடித்திருக்கும். அத்தகையவர்களுள் ஒருவரா உங்களது தந்தை? ஆம் என்றால் கார் வாக்யூம் க்ளீனரை வாங்கி கொடுக்கலாம். கார் வாக்யூம் க்ளீனர்கள் கோர்டட் & கோர்ட்லெஸ் என 2 விதமாக கிடைக்கின்றன. உங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப ஒன்றை தேர்வு செய்யவும்.
3. கார் வாசனை திரவியம்: உங்களது தந்தைக்கு பிடித்த/ அவர் விரும்பக்கூடிய வாசனையில் கார் வாசனை திரவியத்தை பரிசாக வழங்கலாம். இதில், வாசனை அவருக்கு பிடித்திருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். ஏனெனில் சில வாசனைகள் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தக்கூடியவை. உங்களிடம் பட்ஜெட் அதிகமாக இருப்பின், பல வாசனைகள் அடங்கிய திரவியங்கள் தொகுப்பை பரிசாக வழங்கலாம்.

4. ஏர் கம்பிரஷர்: காரின் டயர்களில் எவ்வளவு அழுத்தத்தில் காற்று உள்ளது என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியது அவசியமான ஒன்று. இளம் வயதினர் பெரும்பாலும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் குடும்பத்தையே சுமக்கும் தந்தையர்கள் இந்த விஷயத்தையும் தங்களது தலையில் ஏற்றிக்கொண்டு அவ்வப்போது டயர்களில் காற்றழுத்ததை கண்காணிப்பர். அவர்களது சுமையை குறைக்கும் விதமாக ஏர் கம்பிரஷரை பரிசளிக்கலாம்.
5. அலங்கார பொருட்கள்: காரில் நாம் அலங்கார பொருட்களை அவ்வப்போது மாற்றுவது இல்லை. இதனால் காருக்குள் இருக்கும் பொம்மைகளும், ஸ்டிக்கர்களும் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன. இதேபோன்று, உங்களது தந்தையின் மனதிலும் சில கார் அலங்கார பொருட்கள் பதிந்து இருக்கலாம். அவை உங்களது தந்தை அவரது இளம் வயதில் காரில் வைத்திருந்தவையாக இருக்கலாம். அந்த அலங்கார பொருட்கள் என்ன என்பதை அறிந்து, அவற்றையே பரிசாக அளிப்பது இன்னும் சிறந்தது.

6. தொப்பிகள்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கார் பிராண்ட்களை பிடித்திருக்கும். அவ்வாறு உங்களது தந்தைக்கும் ஓர் கார் பிராண்ட் பிடித்திருக்கலாம். அதனை அறிந்து, அந்த கார் பிராண்டின் லோகோ பொறிக்கப்பட்ட தொப்பியை இந்த தந்தையர் தினத்தில் உங்களது தந்தைக்கு பரிசாக வழங்கலாம். சில டிசைன் தொப்பிகள் உங்களது தந்தையின் உடலமைப்பிற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஆதலால் தொப்பியின் டிசைனை கவனத்துடன் தேர்வு செய்யுங்கள்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பார்க்கும் ஒவ்வொரு நேரமும் இந்த பரிசு பொருட்கள் எல்லாம் உங்களை உங்களது தந்தையுடன் நெருக்கப்படுத்தும். இந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுப்பது மட்டுமின்றி, இந்த தந்தையர் தினத்தில் பைக் அல்லது காரில் உங்களது தந்தை உடன் ஓர் சிறிய ட்ரிப் சென்றுவர முயற்சியுங்கள். அதாவது, சில மணிநேரங்களையாவது உங்கள் தந்தையுடன் செலவிடுங்கள்.


Click it and Unblock the Notifications









