அப்படியா... மோட்டார் வாகனச் சட்டப்படி இதெல்லாம் தப்புதானாம்!

சில சமயங்களில் நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்து கொண்டிருப்போம். அது நம் கண்களுக்கு சரியாக தெரிந்தாலும் அது சட்டப்படி தப்பாக இருக்கும்.

அதுபோன்றே, கார் ஓட்டும்போதும் நாம் செய்யும் சில செயல்கள் மோட்டார் வாகனச் சட்டப்படி தப்பு என்கிறது. இதெல்லாமா தப்பு என்று நம்மை வியக்கவைக்கும் அந்த தப்புகள் என்னென்ன என்பதனை ஸ்லடைரில் ஒவ்வொன்றாக காணலாம்.

 பாட்டு போட்டால் தப்பா

பாட்டு போட்டால் தப்பா

கார் ஓடிக் கொண்டிருக்கும்போது மியூசிக் பிளேயரை ஆன் செய்து பாட்டுக் கேட்டுச் செல்வதும் மோட்டார் வாகனச் சட்டம் 177/102ம் விதிப்படி தப்புதானாம். அபராதம் ரூ.100 விதிக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமுண்டு.

ஹை பீம்

ஹை பீம்

காரில் ஹை பீம் எனப்படும் பிரகாசமான ஹெட்லைட்டுகளை ஒளிரவிட்டு செல்வதும் தவறுதான். குறிப்பாக, நகர்ப்புறங்களில் ஹை பீம் பயன்படுத்துவது தவறு. சரியான காரணமின்றி ஹை பீம் ஒளிர விட்டு சென்றால் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 177/112(G)ன் படி தவறு. இதற்கும் ரூ.100 அபாரதம் விதிக்க வழிவகை இருக்கிறது.

ஹாரன் இல்லைன்னாலும்

ஹாரன் இல்லைன்னாலும்

வீட்டை விட்டு கிளம்பும்போதே ஹாரன் நன்றாக அடிக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஹாரன் இல்லாமல் சென்றாலோ, ஹாரன் இருந்தும் வேலை செய்யவில்லை என்றாலும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு177/5,7ன் கீழ் குற்றமாக கருதப்பட்டு ரூ.100 அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.

புகையை கக்கினால்

புகையை கக்கினால்

கொசு மருந்து அடிப்பது போன்று புகையை வெளியிடும் வாகனங்களுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 177/139(1)ன் கீழ் தவறு. இதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

தாத்தா வீட்டு ரோடு

தாத்தா வீட்டு ரோடு

எங்க தாத்தா வீட்டு ரோடு என்ற நினைப்பிலோ அல்லது சிக்னல் நெரிசலிலோ நடைபாதையில் வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டம் RRR 177 கீழ் தவறு. இதற்கு ரூ.100 அபாரதம் கட்ட வேண்டி வரும்.

For Regn

For Regn

புதிய வாகனம் வாங்கியுடன் பதிவு செய்யவில்லை என்றால் For Regn அல்லது TC என்று நம்பர் பிளேட்டில் எழுதியிருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், தற்காலிக பதிவு எண்ணை எழுதி ஒட்டியிருக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல் சாலையில் ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் 39/192ன் கீழ் ரூ.4,500 வரை அபாரதம் விதிக்கப்படும்.

 செல்லமெல்லாம் வீட்டோட

செல்லமெல்லாம் வீட்டோட

வளர்ப்பு பிராணிகளை காரில் செல்லும்போது அவை பிற வாகன ஓட்டிகளுக்கோ அல்லது டிரைவருக்கோ அச்சத்தை கொடுக்கும் வகையில் இருந்தால் மோட்டார் வாகனச் சட்டம் 177/80 ன் கீழ் அவை தவறு. இதற்கு ரூ.100 அபராதம் விதிக்கலாம்.

 இங்கே சிறுநீர் கழிக்காதீர்

இங்கே சிறுநீர் கழிக்காதீர்

இங்கே எச்சில் துப்பாதீர், சிறுநீர் கழிக்காதீர், நோட்டீஸ் ஒட்டாதீர் என்ற இடத்தில்தான் அவற்றை செய்யும் பழக்கம் இருக்கிறது. இதேபோன்று, ஒலிப்பானுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் ஹாரன் அடித்தால் மோட்டார் வாகனச் சட்டம் 177/96(1) தவறு. இதற்கு ரூ.100 அபராதம் விதிக்க முடியும்.

 மியூசிக் ஹாரன்

மியூசிக் ஹாரன்

அனுமதிக்கப்பட்ட ஒலிப்பான்களை தவிர, கட் அவுட்டர் போட்ட ஹாரன்களை பயன்படுத்துவதும் தவறு. மோட்டார் வாகனச் சட்டம் 177/21.4ன் படி ரூ.100 அபராதம் விதிக்கலாம்.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ஹெட்லைட்டில் விதவிமான வண்ணம் கொண்ட பல்புகளை ஒளிரவிட்டுச் செல்வதும் தவறு. மோட்டார் வாகனச் சட்டம் 177/7(2) ன் படி ரூ.100 அபராதம் விதிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2013, 16:52 [IST]
English summary
Drivespark lists few traffic offences that you might not have heard of. We suggest that you be extra careful the next time you drive out.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+