ஒவ்வொரு முறையும் E பக்கத்துல முள் வரும் போதுதான் பெட்ரோல் போடுறீங்களா? பெரிய ஆபத்து வரப்போகுது!

இன்று வாகனங்களை பயன்படுத்தும் பலருக்கும் வாகனங்களில் எப்படியாக பெட்ரோல் போடவேண்டும் என்ற புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். வாகனங்களில் எந்த நேரத்தில் பெட்ரோல் போட வேண்டும்? எவ்வளவு பெட்ரோல் குறைந்த பட்சம் டேங்கில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

இன்று வாகனம் இல்லாமல் மனிதர்கள் வாழவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது. வீட்டிற்கு வீடு குறைந்தபட்சம் ஒரு டூவீலராவது இருக்கிறது. ஒரு காலத்தில் ஊரிலேயே ஒரு சில வீடுகளில் கார் இருந்த நிலையில் தற்போது ஊரில் உள்ள ஒரு சில வீடுகளில் மட்டுமே கார் இல்லாமல் இருக்கிறது. அந்த அளவிற்கு வாகனங்களின் தேவை மனிதர்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டது.

Fuel Level In Car

இப்படியாக வாகனம் பயன்படுத்தும் பலருக்கு வாகனங்களில் பெட்ரோல் போடும் முறையில் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையிலான எரிபொருள் நிரப்பும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சிலர் ஒவ்வொரு முறை பயணத்தை துவங்கும் போது பயணத்திற்கு ஏற்ற எரிபொருளை கணக்கிட்டு எரிபொருளை நிரப்பி செல்வார்கள்.

சிலர் ஒவ்வொரு முறை எரிபொருள் நிரப்பும் போதும் முழு டேங்க் எரிபொருளை நிரப்புவார்கள். ஒவ்வொரு முறையும் சிலர் குறிப்பிட்ட தொகைக்கு மட்டும் எரிபொருள் நிரப்புவார்கள். இதில் எது சரியான முறை என்ற தகவல் பலருக்கும் தெரியவதில்லை. இதற்கு பின்னால் சில தொழிற்நுட்ப காரணங்கள் இருக்கிறது.

Fuel Level In Car

வாகனத்தில் உள்ள எரிபொருள் டேங்கில் எவ்வளவு எரிபொருள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என்ற ஒரு விதிமுறைகள் உள்ளது. இது ஒவ்வொரு வாகனத்தை பொருத்தும் மாறுபடும். ஒவ்வொரு ஓட்டுனரின் ஸ்டைலை பொருத்தும் எரிபொருள் செலவு என்பது மாறுபடும். நீங்கள் சிட்டியில் அதிகம் பயணம் செய்கிறீர்கள் என்றால் ஹைவேயில் பயணம் செய்வதை விட அதிகம் எரிபொருள் செலவிட வேண்டும்.

டேங்கில் எவ்வளவு எரிபொருள் இருக்க வேண்டும் என கேட்டால் குறைந்த பட்சம் உங்கள் டேங்கின் கொள்ளளவில் கால் பங்கு அளவு தான் குறைந்தபட்ச எரிபொருளாக இருக்க வேண்டும். உதாரணமாக உங்கள் வாகனத்தில் 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் இருக்கிறது என்றால் குறைந்த பட்சம் 8-10 லிட்டர் எரிபொருள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்.

Fuel Level In Car

அதை விட குறைவாக இருந்தால் அது உங்கள் வாகனத்தின் இன்ஜின் மற்றம் ஃப்யூயல் பம்ப் ஆகியவைற்றை பாதிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. டேங்க் கொள்ளளவில் பாதி எரிபொருள் எப்பொழுதும் இருந்தால் அது நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்கிறது. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யப்போகிறீர்கள் என்றால் முக்கால் டேங்க் எரிபொருள் இருந்தால் சிறப்பு.

நீங்கள் குறைவான எரிபொருளுடன் வாகனத்தில் பயணிக்கும் போது உங்கள் டேஷ் போர்டில் எரிபொருள் குறைவாக இருப்பது எச்சரிக்கை விளக்கு மூலம் எச்சரிக்கும். இப்படி லைட் எரிந்தால் முடிந்தளவிற்கு சிக்கிரமே நீங்கள் எரிபொருளை நிரப்பிக்கொள்வது நல்லது. குறைவான எரிபொருள் வைத்து நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டும்.

Fuel Level In Car

இன்று விற்பனையாகும் பல வாகனங்களில் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது டேங்கில் உள்ள எரிபொருளை இன்ஜினிற்குள் எடுத்து செல்ல உதவுகிறது. குறைவான எரிபொருள் இருந்தால் இது நேரடியாக அந்த ஃப்யூயல் இன்ஜெக்ஷன் கருவியை பாதிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இப்படியாக ஃப்யூயல் இன்ஜெக்ஷன் கருவி பாதிக்கப்பட்டால் அதை சரி செய்வதற்கோ அல்லது மாற்றுவதற்கோ அதிகமாக செலவாகும். இதனால் நீங்கள் எப்பொழுதும் மேலே சொன்ன அளவில் எரிபொருளை டேங்கில் வைத்துக்கொள்வது தான் நல்லது. குறைவான எரிபொருள் வைத்திருப்பது வாகனத்திற்கு பல்வேறு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்த முறையில் டேங்கில் எரிபொருளை நிரப்ப வேண்டும் என கேட்டால் நீங்கள் விரும்பும் முறையில் நிரப்பலாம். ஆனால் குறைந்த பட்சம் வாகனத்தில் கால் பகுதி டேங்கிற்கு கீழ் எரிபொருள் அளவு செல்லும் போது கட்டாயம் எரிபொருளை நிரப்பிவிடுங்கள். இல்லை என்றால் பின்னர் பெரிய செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2024, 11:16 [IST]
English summary
Fuel level in car what is the minimum amount of petrol to keep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X