பெட்ரோல் கொஞ்சமாதான் குடிக்கும்! ஆனா ரொம்ப தூரம் போகலாம், நெடுஞ்சாலையில் அதிக மைலேஜ் பெற பெஸ்ட் டிப்ஸ்!

இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும். சரியான வழிமுறைகள் மூலம், எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கவும் அதிகமான பணத்தை சேமிக்கவும் முடியும். உங்கள் எரிபொருளை அதிகம் பயன்படுத்தி குறைவான எரிபொருள் செலவிலேயே அதிக தூரம் பயணிக்க ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. இவைகளில் உங்களுக்கு உதவும் சில நடைமுறைகளை தான் டிப்ஸ்களாக இங்கே வழங்கியுள்ளோம்.

மைலேஜை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று நிலையான வேகத்தை பராமரிப்பதாகும். அடிக்கடி ஆக்ஸிலரேஷன் மற்றும் பிரேக்கிங் ஆகியவற்றை பயன்படுத்துவதால் அதிக எரிபொருளை செலவழிக்கிறது. உங்கள் காரில் க்ரூஸ் கன்ட்ரோலைப் பயன்படுத்தவும். இதனால் மூலம் குறைவான எரிபொருள் செலவில் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

Highway Mileage Tips

குறைந்த பிரஷர் டயர்கள் ரோலிங் செய்வதில் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன., இதனால் டயர் ரோலிங்கிற்கு அதிக இன்ஜின் திறன் தேவைப்படுகிறது. இதற்கு அதிக எரிபொருள் செலவாகிறது. இதனால் எரிபொருள் செயல்திறன் குறைகிறது. டயர் பிரஷரை தவறாமல் சரிபார்த்து, பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் அவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் வாகனத்தில் தேவையற்ற அதிக எடையை எடுத்துச் செல்வது எரிபொருள் செயல்திறனைக் குறைக்கும். உங்கள் பயணத்திற்குத் தேவையில்லாத கனமான பொருட்களை உங்கள் காரில் இருந்து அகற்றவும். வாகனத்தின் எடை அதிகரிக்கும் போது அதை சுமந்து செல்ல இன்ஜின் திறன் அதிகம் தேவைப்படும். இதற்கு ஆகும் எரிபொருள் செலவை தடுக்க வேண்டும்.

Highway Mileage Tips

ஐட்லிங் காரை நகர்த்தாமல் இருந்தாலும் எரிபொருளைப் பயன்படுத்துகிறது. ஒரு நிமிடத்திற்கு மேல் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எரிபொருளைச் சேமிக்க இன்ஜினை ஆஃப் செய்ய வேண்டும். சிக்னல்களில் நாம் நிற்கும் போது இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். இதற்கான சந்தர்ப்பம் தேசிய நெடுஞ்சாலைகளில் குறைவு தான்.

வெளிப்புற காற்றும் வாகனம் குறைவான வேகத்தில் செல்லும் போது மைலேஜ் திறனைக் குறைக்கும், குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டும்போது நீங்கள் எரிபொருள் சிக்கனத்தை கையாள வேண்டும் என்றால் காரின் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். இதன் மூலம் காற்று காரணமாக வாகனத்தின் திறன் குறைவது தவிர்க்கப்படும்.

Highway Mileage Tips

நீங்கள் பயணிக்ககூடிய பாதையை முன்கூட்டியே திட்டமிடுவது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பயண நேரத்தைக் குறைக்கவும் செய்யும், இந்த செயல்பாட்டால் எரிபொருளைச் சேமிக்கவும் முடியும். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்லும் வழியைக் கண்டறிய மார்கெட்டில் உள்ள GPS ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டும்.

நன்கு பராமரிக்கப்பட்ட கார் மிகவும் திறமையாக இயங்கும். உங்கள் வாகனத்தை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யவும், ஆயிலை அவ்வப்போது மாற்றவும் மற்றும் நல்ல செயல்திறனை உறுதிசெய்ய தேவையான நேரத்தில் ஏர்ஃபில்டர்களை மாற்றவும். திடீரென ஸ்டார்ட் செய்வது மற்றும் ஸ்டாப் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த ஓட்டும் பாணி எரிபொருளைச் சேமிக்க உதவுகிறது.

ஜன்னல்களை திறந்து வைத்திருப்பது அதிக டிராக்குகள உருவாக்குகின்றன, இது அதிக வேகத்தில் எரிபொருள் செயல்திறனைக் குறைக்கிறது. ஏரோடைனமிக்ஸை மேம்படுத்த வேகமாக வாகனம் ஓட்டும்போது ஜன்னல்களை மூடி வைக்கவும். இதன் மூலம் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும். அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கிறது. சிறந்த மைலேஜ் மற்றும் பாதுகாப்பிற்காக வேக வரம்பை கடைபிடிக்கவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டிப்ஸ்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் நெடுஞ்சாலை பயணங்களை சிக்கனமாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் மாற்றலாம். இதை தொடர்ந்து பின்பற்றினால் உங்களின் எரிபொருள் செலவு கணிசமான வகையில் குறைய வாய்ப்புகள் உள்ளது. மறக்காமல் அடுத்த முறை நெடுஞ்சாலை பயணம் செய்யும் போது இதை பின்பற்றுங்கள்!

More from DriveSpark

Article Published On: Tuesday, June 25, 2024, 21:52 [IST]
English summary
Driving on Indian highways can be made more fuel-efficient with practical tips like maintaining a steady speed, checking tyre pressure, reducing weight, and avoiding idling among others.
மேலும்... #auto tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X