பயோமெட்ரிக் எல்லாம் வந்துடுச்சுனா வேற லெவல்ல இருக்கும்!! ஒரு டைம்ல கார் டோர் ஹேண்டில்ஸ் எப்படி இருந்துச்சு!
இந்தியாவில் வாகனத் தொழில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், கார் கதவு கைப்பிடிகள் போன்ற சிறிய விவரங்கள் கூட பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன.
மாறிவரும் நுகர்வோர் விருப்பங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கார் கதவு கைப்பிடிகளின் அழகியல் மற்றும் செயல்பாடுகளை வாகன உற்பத்தியாளர்கள் மறுவரையறை செய்து வருகின்றனர். கார் கதவு கைப்பிடி வடிவமைப்பு ஆனது ஆரம்ப காலக்கட்டத்தில் எளிமையாக இழுத்தல் மற்றும் தள்ளும் விதமாக இருந்தது. ஆனால் இன்றோ அதிநவீன, கீலெஸ் மற்றும் சென்சார் அடிப்படையிலான அமைப்புகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

புதுமையான வடிவமைப்புகளாவன ரிமோட் கீலெஸ் எண்ட்ரீ, பயோமெட்ரிக். இதனால், பழைய காலத்தில் இருந்த சாவியை நுழைக்க வேண்டிய தேவை நீங்கியுள்ளது. இதன் விளைவாக காருக்குள் நுழைவதும் வெளியேறுவதும் எளிதாக்கியுள்ளன என்பது மட்டுமின்றி, வாகனம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
டெஸ்லா மற்றும் ரேஞ்ச் ரோவர் போன்ற உயர்தர கார் பிராண்ட்களால் பிரபலப்படுத்தப்பட்ட ஃப்ளஷ் ஹேண்டில் வடிவமைப்புகளின் அறிமுகம் இந்திய சந்தையில் மற்றொரு குறிப்பிடத்தக்க டிரெண்டை உருவாக்கியது. இந்த கைப்பிடிகள் காரின் உடலுடன் தடையின்றி ஒன்றிணைந்து, காரின் ஏரோடைனமிக் திறனை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்தமாக கார் பார்ப்பதற்கும் அழகாக உள்ளது.

கார் கதவு கைப்பிடி வடிவமைப்புகளை புதுமைப் படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, சில சொகுசு கார் பிராண்டுகள் ஒளிரும் கதவு கைப்பிடி டிசைன்களை கண்டுப்பிடித்துள்ளன. இது காரின் அழகியலை மெருகேற்றுவது மட்டுமில்லாமல், ஒளி குறைவான இடங்களில் பார்வையை மேம்படுத்துகிறது.
குரோம், உலோகம் மற்றும் அதிக வலிமை கொண்ட பிளாஸ்டிக் போன்ற கதவுக் கைப்பிடிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களின் முன்னேற்றங்கள், இன்றைய கால கார் கைப்பிடிகளின் நீடித்த தன்மை மற்றும் அழகியல் கவர்ச்சிக்கு பங்களிக்கின்றன. மிக சமீபத்தில், டச் மூலம் செயல்படக்கூடிய கதவு கைப்பிடிகள் சந்தையில் நுழைந்துள்ளன. இது கார் கதவு கைப்பிடிகளின் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லை குறிக்கிறது. கார் கதவு கைப்பிடி வடிவமைப்பு பிரிவில் புதுமைக்கான சாத்தியக்கூறுகள் நிறைந்துள்ளன.

கார் நிறுவனங்களின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு (R&D) மையத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் உடன், கார் கதவு கைப்பிடிகள் செயல்படும் விதத்தில் மட்டுமின்றி, அதன் அழகை டிசைன் செய்வதிலும் மேம்பாடுகளைக் காணலாம். கோவிட்-19க்குப் பிந்தைய உலகில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், டச்-இல்லா செயல்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் டிசைன்கள் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது.
கனெக்டட்-கார் தொழில்நுட்பங்கள் மூலமாக கார் மார்க்கெட் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர்ந்து வருவதால், காரின் டிஜிட்டல் அமைப்பில் கதவு கைப்பிடிகளும் அங்கமாக இருக்கலாம். கார் கதவு கைப்பிடி வடிவமைப்புகள் ஆனது புதுமையான, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அழகியல் கவர்ச்சிகரமான வாகனங்களை வழங்கும் நோக்கத்தில் வாகன உற்பத்தியாளர்கள் எடுக்கும் முழுமையான அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை எல்லாம் வைத்து பார்க்கும்போது, எதிர்கால வாடிக்கையாளர்களின் கருத்துகள் மற்றும் நவநாகரீக வடிவமைப்புகளின் தோற்றத்துடன், கார் கதவு கைப்பிடிகள் வாகனத்தை அணுக அனுமதிக்கும் ஒரு துணைப் பொருளாக மட்டும் இல்லாமல், நடை, வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் தொகுப்பாகவும் மாறி வருகின்றன. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் கதவு கைப்பிடி வடிவமைப்புகளில் எதிர்காலத்தில் முன்னேற்றங்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதை காண்பது இனி உண்மையில் சுவாரஸ்யமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









