இந்த 5 ரகசிய அம்சங்கள் பற்றி யாருக்குமே தெரியாது! கூகுள் மேப்பை இப்படியும் யூஸ் பண்ணலாமா?

இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பலர் அன்றாடம் பல்வேறு ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியாக நாம் தினந்தோறும் வாழ்வதற்கு தேவையான பல ஆப்ஸ்கள் வந்துவிட்டது. அதில் முக்கியமானது கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ் ஆப் ஆகும். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் முன்பு ரோட்டில் செல்பவர்களிடம் வழி கேட்ட நிலையில் இன்று கூகுள் மேப் நமக்கு உதவுகிறது.

நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி மட்டும் அல்லாமல் அருகில் உள்ள இடங்களை தெரிந்து கொள்வது மற்றும் நாம் இருக்கும் பகுதியைப் பற்றி புரிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு இந்த மேப் பயன்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த மேப்களில் பல்வேறு புதிய அம்சங்கள் இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு இதை பயன்படுத்துபவர்கள் மத்தியில் இல்லை. இந்த புதிய அம்சங்களை பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கை இன்னும் எளிதாகும்.

google map tips

எலெக்ட்ரிக் வாகன செட்டிங்ஸ்: நீங்கள் ஒரு எலக்ட்ரிக் வாகன பயனாளராக இருந்தால் நீங்கள் உங்கள் கூகுள் மேப்பில் "Electric Charging Stations Near Me" என தேடுவதன் மூலம் அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷனுக்கு கண்டுபிடித்து விட முடியும். இதற்கு நீங்கள் உங்கள் வாகனத்தின் சார்ஜர் டைப்பை கூகுளில் உள்ளீடு செய்ய வேண்டும் டூவீலர், 3 வீலர் மற்றும் கார் என அனைத்துக்கும் தனித்தனியான செட்டிங்குகள் வழங்கப்படுகிறது.

ஸ்ட்ரீட் வியூ டைம் டிராவல்: காலத்தை கடப்பது என்பது நிகழ்வு உலகில் சாத்தியமில்லை என்றாலும், கூகுள் மேப்பில் சாத்தியமாகிறது. நீங்கள் இருக்கும் இடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக கூகுளில் உள்ள ஸ்ட்ரீட் வியூ டைம் டிராவல் என்ற அம்சம் பயன்படுகிறது. இதனால் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அடையாளம் தெரியாமல் இருக்கிறீர்கள் என்றால் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

google map tips

இந்த அம்சத்தை பயன்படுத்தி இதற்கு முன்பு நீங்கள் வந்தபோது எப்படி இருந்தது? தற்போது என்னவெல்லாம் மாறி இருக்கிறது? என்பதை நீங்கள் கண்ணாரக் கண்டு உணர முடியும். இதன் மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நீங்கள் பார்க்க வேண்டிய விஷயத்தை துல்லியமாக மிகச் சரியாக பார்த்துவிட முடியும். இதற்காக யாருடைய உதவியையும் நாட வேண்டிய அவசியம் இல்லை.

லைவ் லொகேஷன் பகிர்வு: இன்று செல்போன்களில் நீங்கள் இருக்கும் இடத்தை லொகேஷன் பகிர்வு மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என அவர்களால் தெரிந்து கொள்ள முடியும் நீங்கள் தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும் போது உங்களை அவர்கள் கண்காணிக்க இது ஒரு உதவிகரமான அம்சமாக இருக்கும். குழந்தைகள் தொலைந்து போனாலும் இதன் மூலம் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளது.

google map tips

ஆஃப்லைன் மேப்: கூகுள் மேப்பில் பயன்படுத்த வேண்டும் என்றால் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும். ஆனால் இன்று சில இடங்களில் குறிப்பாக காட்டுப்பகுதிகளில் இன்டர்நெட் சிக்னல் இருக்காது என்பதால் அந்தப் பகுதிக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் முன்பே மேப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக டவுன்லோட் செய்தால் இன்டர்நெட் இல்லாமலேயே நீங்கள் மேப்பை பயன்படுத்த முடியும்.

செயற்கை நுண்ணறிவு வசதி: கூகுள் மேப் நிறுவனம் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட மேப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்த பயணங்கள் அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் மற்றும் விஷயங்களை கூகுள் மேப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் கேட்ட கேள்விக்கு ஏற்ப கூகுள் மேப் தனது செயற்கை நுண்ணறிவு மூலம் புரிந்து கொண்டு அதற்கான தக்க பதிலை அளிக்கும்.

இப்படியாக நீங்கள் பயணம் செய்யும்போது இந்த கூகுள் மேப்பை சரிவர பயன்படுத்தினீர்கள் என்றால் இதில் உள்ள பல்வேறு அம்சங்கள் உங்கள் வாழ்க்கையை எளிமையாக உதவியாக இருக்கும். பலருக்கு மேலே குறிப்பிட்ட சில அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த பதிவை உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கூகுள் நிறுவனம் தொடர்ந்து தனது மேப் வசதியை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறது. இதனால் கூகுள் மேப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மேப் மூலம் பயன் மக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தங்கள் வாழ்க்கை சுலபமாகிறது என மக்கள் கருதுகிறார்கள். கூகுள் மேப் சேவை நிச்சயம் அதன் பயனர்களால் பெரிய அளவில் வரவேற்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2024, 18:15 [IST]
English summary
Google map tips 5 secret features unaware
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X