புதுசா கார் வாங்கும் போது எதையெல்லாம் செக் செய்ய வேண்டும் தெரியுமா? முழு விபரம் இதோ
புதிய கார் வாங்குவது உங்களுக்கான குறிப்பிடத்தக்க முதலீடாக இருக்கிறது. இப்படியாக கார் வாங்கும் போது நமக்க்கு டெலிவரி செய்யப்படும் கார் சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். இங்கு நாம் வழங்கியுள்ள வழிகாட்டியை பின்பற்றுவது மூலம் இந்தியாவில் கார் வாங்குபவர்கள் தங்கள் புதிய காரை டெலிவரி எடுக்கும் போது முழுமையாகச் சரிபார்க்க முடியும். புதிய காரை வாங்கும் முன் இது எல்லாம் தெரியாமல் போகாதீர்கள்.
காரை டெலிவரி எடுக்கும் முன் சோதனையை வெளிப்புறத்துடன் தொடங்குங்கள். கீரல்கள், கோடுகள் மற்றும் கலர்களில் இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரிபார்க்கவும். பாடி பேனல்களை முழுவதுமாக ஆய்வு செய்யவும். அனைத்து லைட்டுகள் மற்றும் டர்ன் சிக்னல்கள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்யவும்.

இருக்கைகள் மற்றும் குஷன்களில் ஏதேனும் சேதம் அல்லது கறை உள்ளதா என உட்புறத்தையும் ஆய்வு செய்யவும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏர் கண்டிஷனிங் மற்றும் பவர் ஜன்னல்கள் போன்ற அனைத்து எலெக்ட்ரானிக் பாகங்களும் சரியாக வேலை செய்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இன்ஜின் பகுதியை ஆய்வு செய்ய பானட்டைத் திறந்து பார்க்க வேண்டும். கசிவுகள் அல்லது லூசான இணைப்புகள் ஏதேனும் உள்ளதா என சரி பார்க்கவும். ஆயில்கள், கூலெண்ட் மற்றும் பிரேக் லிக்யூட் உள்ளிட்ட திரவ அளவை சரிபார்க்கவும். இதில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.

டயர் திரெட்களின் ஆழத்தை ஆராய்ந்து, புதிய டயர் தானா அல்லது பட்டன் மாற்றப்பட்ட டயர்களா என அறிகுறிகளைக் கண்டறிந்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்து டயர்களும் பரிந்துரைக்கப்பட்ட பிரஷர் இருப்பதை உறுதி செய்யவும். காரின் ஒவ்வொரு மூலையிலும் அழுத்தி சஸ்பென்ஷனை சோதிக்கவும்.
காரை டெலிவரி எடுக்கும் முன்பு சோதனை ஓட்டம் அவசியம். இன்ஜின் அல்லது சஸ்பென்ஷனில் இருந்து அசாதாரணமான சத்தங்கள் எதுவும் வருகிறதா என்பதை கேளுங்கள். ஸ்டீயரிங் சிறப்பாக வேலை செய்கிறதா மற்றும் பிரேக்குகள் சீராக செயல்படுகிறதா என்பதையும் சரிபார்க்கவும். இதில் பிரச்சனையிருந்தால் காரை டெலிவரி எடுக்காதீர்கள்.

அனைத்து ஆவணங்களும் ஒழுங்காக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இதில் உரிமையாளரின் மெனுவல், வாரண்டி பேப்பர் மற்றும் சர்வீஸ் மேனுவல் ஆகியவற்றையும் சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும் . வாகன அடையாள எண் (VIN) ஆவணங்களில் உள்ளதுபடி முழுவதும் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
இறுதி செய்வதற்கு முன், டீலர் வாக்குறுதியளித்த அனைத்து உபகரணங்களையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். ஜாக் மற்றும் வீல் ஸ்பேனர் போன்ற கருவிகளுடன் அனைத்து டூல்களும் வழங்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும். இது தான் கார் நடுவழியில் பிரச்சனையில் சிக்கினால் உங்களுக்கு உதவும்.
இந்த முழுமையான ஆய்வு உங்கள் புதிய காரை நீங்கள் வீட்டிற்கு எடுத்து செல்வதற்கு முன் சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் டெலிவரி எடுத்தபின்பு இதில் பிரச்சனை இருப்பதை நீங்கள் அறிந்தால் கட்டாயம் இந்த வாகனத்தை மாற்றி தர மாட்டார்கள். அதனால் இந்த விபரங்களை எல்லாம் முன்பே சோதனை செய்து பின்னர் டெலிவரி ஆவணங்களில் கையெப்பம் இடுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக வாகனம் வாங்கும் பலர் வாகனம் வாங்கும் ஆர்வத்தில் இந்த சோதனைகளை பலர் செய்ய மறந்துவிடுகிறார்கள். வாகனம் வாங்கிய பின்பு இதை தெரிந்து கொண்டு பின்னர் ஷோரூம் சென்று கேட்கிறார்கள். முன்னரே சோதனை செய்யவில்லை என்றால் அதற்கு ஷோரூம் உரிமையாளர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications









