பைக் ஓட்டுற எல்லாருக்கும் இந்த விஷயம் கண்டிப்பா தெரியனும்! ஆனா பாதி பேருக்கு தப்பு தப்பா தான் தெரியும்.

சாலையில் நண்பர்களுடன் பைக் ரைடிங் செல்லும் போது முன்னாள் செல்லும் ரைடர் பின்னால் வரும் ரைடருக்கு கை மூலம் சில சிக்னல்களை தருவார்கள். இப்படியாக அவர் தரும் ஒவ்வொரு சிக்னலுக்கும் என்ன அர்த்தம் என்று இன்றும் பலருக்கு சரியாக தெரிவதில்லை. இந்த சிக்னல்கள் மூலம் பின்னால் வரும் ரயிலுக்கு எப்படி தகவல்களை தெரிவிக்கலாம் என்ற விரிவான விவரத்தை காணலாம் வாருங்கள்.

சாலையில் பைக் ரைடு செல்லும் போது நம்மில் பலர் கூட்டமாக நண்பர்கள் மற்றும் ஒரே எண்ணம் கொண்ட நபர்களுடன் பயணிப்போம். இப்படியாக பயணிக்கும் போது அதை முன்னாள் செல்லும் ரைடர் லீடு செய்வார்கள்0 அதைத் தொடர்ந்து பின்னால் வரும் ரைடர்கள் பின்பற்றி வாகனத்தை ஒட்டி வருவார்கள். குறிப்பாக வட இந்தியாவில் இப்படியான ரைடர்களை அதிகம் பார்க்க முடியும். சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் பலர் இப்படியாக பைக் ரைடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

hand signals in bike ride

இந்த ரைடர்கள் எல்லாம் தங்களுக்குள்ளே தகவல்களை பரிமாறிக் கொள்ள தற்போது டெலிகாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தாலும் கை மூலம் சிக்னல் செய்வதை மிக முக்கியமான ஒரு தகவல் பரிமாற்ற மொழியாக பின்பற்றி வருகின்றனர். நீண்ட காலமாக ரைடிங் செய்யும் நபர்கள் இதை இன்றும் பின்பற்றி வருகின்றனர். இப்படியான ரைடர்கள் பின்பற்றும் கை சிக்னல் மொழிகளை பற்றி காணலாம் வாருங்கள்

கை சிக்னல் மொழிகளில் இருக்கும் முக்கியமான விஷயம் இதில் வலது கை மற்றும் வலது கால்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது, பெரும்பாலான சிக்னல்கள் இடது கை மற்றும் இடது கால்களில் மூலமே கொடுக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் பைக்குகள் எல்லாம் வலது பக்கம் அதிக கண்ட்ரோலை கொண்ட பைக்குகளாக இருக்கும். அதனால் அந்தப் பக்க கை மற்றும் கால்களை பயன்படுத்தினால் பைக்கின் கண்ட்ரோலை நாம் இழந்து விடுவோம்.

hand signals in bike ride

அதற்கு பதிலாக இடது கை மற்றும் கால்களை பயன்படுத்தலாம். இப்படியாக நீங்கள் இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் உங்கள் இடது பக்க கையை வெளிப்புறமாக நீட்டி பின்பக்கம் வரும் ரயில்களுக்கு நீங்கள் இடது பக்கம் திரும்ப போகும் விஷயத்தை சொல்ல வேண்டும்.

அதே நேரம் வலது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் அதே இடது பக்க கையை நீட்டி அதன் முட்டியை வலது பக்கமாக மடக்கி கையை வலது பக்கம் அசைத்து காண்பித்து நீங்கள் வலது பக்கம் செல்ல போவதை குறிக்கும் வகையில் அசைவுகளை வெளிப்படுத்த வேண்டும்.

hand signals in bike ride

அதே நேரம் உங்கள் பயணத்திற்கு முன்பே ஏதாவது தடங்கள் இருந்தால் நீங்கள் சிறிது கவனத்துடன் செல்ல வேண்டும். அல்லது சிறிது நிறுத்தி கவனித்துச் செல்ல வேண்டும் என்பதை பின்னால் உள்ள ரைடருக்கு உணர்த்த வேண்டும் என்றால் உங்கள் இடது பக்க காலை ஃபுட் டிரஸ்டிலிருந்து கீழே தொங்கவிட வேண்டும் இதன் மூலம் பின்னால் வரும் ரைடருக்கு முன்பக்கம் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை தெரியவரும்.

அடுத்ததாக நீங்கள் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பின்னால் வரும் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் இடது கையை தூக்கி முட்டியை 90 டிகிரி வரை மடக்கி முன் பக்கமாக கையை அசைத்து உங்கள் கைப்பகுதியை கீழே கொண்டுவந்து மறுபடியும் மேலே கொண்டு போய் அசைப்பதன் மூலம் உங்க பின்னால் வரும் ரைடருக்கு வாகனத்தை மெதுவாக செல்ல சிக்னல் செய்கிறீர்கள் என அர்த்தம்.

hand signals in bike ride

பைக்கில் செல்லும்போது அடுத்து வரும் கடையிலோ ஸ்டாப்பிலோ வாகனத்தை நிறுத்த வேண்டும் என பின்னால் உள்ள ரைடருக்கு நீங்கள் சொல்ல விரும்பினால் உங்கள் இடது கையை அந்த கடை அல்லது ஸ்டாப்பை நோக்கி நீட்டி உங்கள் ஆள்காட்டி விரலை அதை குறிக்கும் வகையில் கையை நீட்டி பின்னால் வரும் ரைடருக்கு அதை குறிப்பிட்டு காண்பித்து நீங்கள் வாகனத்தை அந்த இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப் போகிறீர்கள் என சிக்னல் செய்யலாம்.

அடுத்ததாக நீங்கள் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தக்கூடிய சூழ்நிலை வந்தால் உடனடியாக உங்கள் கையை மேலே தூக்கி உங்கள் கையில் ஐந்து விரலையும் முழுவதுமாக மடக்கி காட்டுவதன் மூலம் நீங்கள் வாகனத்தை நிறுத்துகிறீர்கள் என பின்னால் வரும் ரயிலுக்கு சிக்னல் செய்கிறீர்கள் என அர்த்தம்.

hand signals in bike ride

அதேபோல பின்னால் வரும் ரைடர் உங்களை முந்தி சொல்ல வேண்டும் என்றால் உங்கள் கையை தூக்கி ஒரு விரலை மட்டும் நீட்டி அதை உங்கள் தலைக்கு பின்னால் கொண்டு சென்று பின்னால் உள்ள ரைடருக்கு காண்பிப்பதன் மூலம் அவர் உங்களை வலது பக்கமாக முந்திச் செல்ல சொல்கிறீர்கள் என அர்த்தம்.

அதே போல உங்களுக்கு எதிரில் போலீஸார்கள் வாகன சோதையில் ஈடுபடுவதை நீங்கள் பார்த்துவிட்டால் உடனடியாக உங்கள் இடது பக்க கையை தலையில் ஹெல்மெட் பகுதியில் தட்டுவதன் மூலம் எதிரே போலீசார் இருக்கிறார்கள், அல்லது வாகன சோதனை நடக்கிறது என நீங்கள் பின்னால் உள்ள ரைடருக்கு சிக்னல் செய்கிறீர்கள் என அர்த்தம்.

பைக் ரைடிங்கில் உங்கள் வாகனத்தில் உள்ள எரிபொருள் தீர்ந்து விட்டால் அதை பின்னால் உள்ள ரைடருக்கு சொல்ல வேண்டும் என்றால் உங்கள் இடது பக்க கையை மடக்கி பெட்ரோல் டேங்க்கை நோக்கி அதை காட்டிய வண்ணம் நீங்கள் சென்றால் உங்கள் வாகனத்தின் எரிபொருள் குறைந்துவிட்டது, அல்லது தீர போகிறது என்பதை பின்னால் உள்ள ரைடர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

அதேபோல உங்களுக்கு புத்துணர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாள் நீங்கள் உங்கள் இடது பக்க கையை தண்ணீர் குடிப்பது போல மடக்கி உங்கள் முகத்தை பக்கவாட்டில் திருப்பி தண்ணீர் குடிப்பது போல சிக்னல் செய்தால் நீங்கள் ரெஃப்ரெஷ் செய்ய விரும்புகிறீர்கள் என பின்னால் உள்ள ரைடருக்கு சிக்னல் செய்கிறீர்கள் என்ன அர்த்தம்.

அடுத்து முக்கியமானதாக இப்படியாக ரைட் செல்லும் பைக் ரைடர்கள் ஒருவர் பின் ஒருவராக செல்வார்கள் இது சிங்கிள் ஃபைல் எனவும், இரண்டு வரிசையில் சென்றால் டபுள் ஃபைல் எனவும் அர்த்தம் ஆகும். ஒரே ஃபைலில் செல்ல வேண்டுமா அல்லது டபுள் ஃபைல் செல்ல வேண்டுமா என்பதை பின்னால்ரைடருக்கு சொல்ல கையை தூக்கி ஒரு விரலை நீட்டினால் ஒரு ஃபைல், இரண்டு விரலை நீட்டினால் டபுள் ஃபைல் என்று அர்த்தம் ஆகும்.

இந்த சிக்னலிலேயே வலது கையை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரே சிக்னல் எதிரில் வரும் உங்கள் கையின் இரண்டு விரல்களை மட்டும் நீட்டி எதிரே வரும் ரைடரை சல்யூட் செய்ய வலது பக்க கையை கீழ்ப்பக்கமாக நீட்டினால் நீங்கள் அவரை சல்யூட் செய்கிறீர்கள் என அர்த்தம். இந்த ஒரு சிக்னலுக்காக மட்டுமே நீங்கள் வலது கையை பயன்படுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் பைக் ரைடு செய்யும் இளைஞர்கள் பலருக்கு இப்படியான கை சிக்னல் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் இல்லை. பலர் வலது கை பக்கம் திரும்ப வலது கையையே பயன்படுத்தி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது, வலது கையை வைத்து சிக்னல் காட்டுவது என்பது சிக்னல் விதியிலேயே இல்லாத ஒரு விஷயமாக இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வுடன் இனி நீங்கள் சாலையில் வாகனங்களை ஓட்டுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2023, 13:28 [IST]
English summary
Hand signals bike ride types meanings guide
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X