கார் ஹெட்லைட் புதுசா வாங்குனா மாதிரி பிரகாசமா இல்லையா? இதை பண்ணா "பளிச்"ன்னு ஆகிடுச்சு!

கார் பயன்படுத்தும் பலர் நீண்ட நாட்களாக கார் பயன்படுத்தினால் அவர்களது ஹெட்லைட் கார் வாங்கிய புதிதில் இருப்பதை விட பிரகாசம் குறைவான இருப்பதை உணர்ந்திருப்பார்கள். இதை பலர் ஹெல்லைட்டில் பவர் குறைந்துவிட்டதாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் ஹெட்லைன் முன்பு உள்ள கண்ணாடியில் ஏற்பட்ட பிரச்சனைகள் இப்படியான பிரகாசம் குறைவாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.

கார்களில் ஹெட்லைட்டை பாதுகாக்க அதற்கு முன்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கண்ணாடிகள் நேரடியாக காற்றுடன் தொடர்பில் இருக்கிறது. இதனால் மாசு, தூசு, வெப்பம் உள்ளிட்ட பல விஷயங்களில் நேரடியாக பாதிக்கப்படுகிறது. மேலும் ஹாலஜன் லைட் கொண்ட ஹெட்லைட்களில் நீண்ட நேரம் பயன்படுத்தும் போது அதிக வெப்பம் வெளியாகும்.

Headlight Cleaning Tips

இதனால் நேரடியாக அந்த கண்ணாடி பாதிக்கப்படும். இது நாளடைவில் கண்ணாடியை மங்கி போக வைக்கும். இது மட்டுமல்ல கண்ணாடியில் ஸ்கிராட்ச் மற்றும் உடைப்பை ஏற்படுத்தவும் வழி வகுக்கும். இதை தடுக்க வேண்டும் என்றால் நீங்கள் அவ்வப்போது கண்ணாடியை சுத்தம் செய்ய வேண்டும். தூசு கண்ணாடியின் மேல் பகுதியில் அதிகமாக இருக்கும் போது ஹெட்லைட்டை அதிகமாக பயன்படுத்தி வெப்பமானால் இதனால் அந்த தூசு கெமிக்கல் ரியாக்ஷனாகி கண்ணாடியை மங்க செய்கிறது.

இதனால் நீங்கள் ஹெட்லைட் கண்ணாடியை எப்பொழுதும் சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். இது மிகவும் எளிமையான விஷயம் தான். இந்த ஹெட்லைட் கண்ணாடிகள் எல்லாம் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனது. இதை எளிதாக சுத்தம் செய்ய பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட், ஸ்பிரே பாட்டில், தண்ணீர், துடைப்பதற்கு சாஃப்டான துணி, கார் வேக்ஸ் ஆகிய பொருட்களே பொதுமானது.

Headlight Cleaning Tips

முதலில் நீங்கள் ஹெட்லைட் கண்ணாடியை தண்ணீர் வைத்து குழுவ வேண்டும். இதற்காக மைல்டு சோப்புகளை பயன்படுத்தலாம். இது கண்ணாடியின் மேற்புறம் உள்ள தூசுகளை எடுத்துவிடும். இதன் பிறகு சோப்பு முழுமையாக நீக்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி பின்னர் துணியை வைத்து துடைக்க வேண்டும்.

இனி அதில் அங்கி போயிருந்தால் அதை சுத்தம் செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. இதற்கு நீங்கள் டூத் பேஸ்டை பயன்படுத்தி மெதுவாக ரப் செய்யலாம், இதற்கு சாஃப்பாடன கிளாத் அல்லது வெறும் விரலை கூட பயன்படுத்தினால் போதும். வட்டமாக தேய்தால் அதில் மங்கி போக செய்யும் அளவிற்கு அழுக்கு இருந்தால் அதுவும் நீங்கும்.

Headlight Cleaning Tips

இப்படி டூத் பேஸ்ட் போட்டும் மங்கி போக செய்யும் அழுக்கு போகவில்லை என்றால் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இதை தண்ணீரில் கலந்து பயன்படுத்தினால் வேகமாக அழுக்கு போகலாம். இதன் திறன் மேலும் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறையும் பயன்படுத்தலாம்.

அல்லாம் முடித்த பிறகு கண்ணாடி முழுமையாக சுத்தமாககிவிட்டால் நீங்கள் அதன் பிறகு கட்டாயம் கார்வேக்ஸ் பயன்படுத்த வேண்டும். கார் வேக்ஸ் பயன்படுத்தினால் கண்ணாடி அடுத்து மங்கு தன்மை குறையும். நீண்ட காலத்திற்கு பிரகாசமான ஹெட்லைட் உங்களுக்கு கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பலர் ஹெட்லைட் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாமல் இருக்கிறது. இதனால் பலர் மங்கிய நிலையில் ஹெட்லைட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த டிப்ஸ் இதற்கு பெறும் பலனாக இருக்கும் என எதிர்பார்க்லாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 20, 2025, 22:45 [IST]
English summary
Headlight cleaning tips how to brighten and clean headlights
மேலும்... #car tips #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X