இந்த ரகசியம் உங்களுக்கு தெரியாம பாத்துக்குவாங்க! ஹெல்மெட்ல இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
நான் புதிதாக ஒரு பொருளை வாங்கும் போது அதன் காலாவதி காலம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வோம். அந்த பொருளை எவ்வளவு காலத்திற்கு பயன்படுத்த முடியும் என்ற விபரங்களை தெரிந்து கொண்டுதான் புதிய பொருளை வாங்குவோம். இப்படியாக நாம் ஹெல்மெட் வாங்கும்போது அதற்கும் காலாவதி காலம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் மற்ற பொருட்களை போல ஹெல்மெட்டிற்கும் காலாவதி காலம் இருக்கிறது. இப்படியாக ஹெல்மெட் வாங்கும்போது நாம் என்னென்ன விஷயங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்ற முழுமையான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
நாம் உணவுப் பொருட்களை வாங்கும் போது அதன் காலாவதி காலத்தை பார்த்து வாங்குவோம். இப்படியாக அனைத்து பொருட்களுக்கும் காலாவதி காலம் இருக்கும்போது ஹெல்மெட்க்கும் காலாவதிகாலம் இருக்கிறது. நாம் ஹெல்மெட்டை வாங்கும் போது என்னென்ன விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும். ஹெல்மெட்டின் காலாவதி காலம் எப்படி இருக்கும்? எந்த நேரத்தில் ஹெல்மெட்டை மாற்ற வேண்டும் என்ற விரிவான விபரங்களை பார்ப்போம்.

நாம் ஹெல்மெட்டை வாங்கினால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியுமா? என்று கேட்டால் நிச்சயம் பயன்படுத்த முடியும் ஆனால் எந்தவித சேதமும் இல்லாமல் ஹெல்மெட்டை பயன்படுத்தினால் எவ்வளவு ஆண்டு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதே நேரம் ஹெல்மெட்டிற்கு சேதம் ஏற்படும் போது அதை மாற்ற வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. சேதம் அடைந்த ஹெல்மெட்டை பயன்படுத்துவதும் ஹெல்மெட்டை பயன்படுத்தாமல் இருப்பதும் ஒன்றுதான்.
நீங்கள் ஹெல்மெட்டை பயன்படுத்தும் போது சிறிய விபத்து ஏற்பட்டால் ஹெல்மெட் சேதமாக வாய்ப்பிருக்கிறது. வெளிப்பக்கம் சேதமாக விட்டாலும், உட்பக்கம் சேதமாக வாய்ப்பிருக்கிறது. இப்படியாக உட்பகுதியில் சேதம் ஏற்பட்டாலும் அந்த ஹெல்மெட்டை பயன்படுத்தக் கூடாது. சிலர் வெளிப்பகுதியில் ஏற்பட்ட சேதத்தை கூட டேப் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களைக் கொண்டு ஒட்ட வைத்து அதை பயன்படுத்தி வருகிறார்கள் இது முற்றிலும் தவறான விஷயமாகும்.

ஹெல்மெட்டிற்கு வைசர் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக இருக்கிறது. பலர் வைசர்களில் ஸ்கிராட்ச் மற்றும் சேதம் அடைந்தாலும் அதை பயன்படுத்தி வருகிறார்கள். இப்படியாக சேதம் அடைந்ததை பயன்படுத்தினால் உங்கள் விசிபிலிட்டி பாதிக்கப்படும். இதனால் நீங்கள் இரவு நேரங்களில் வாகனத்தில் பயணம் செய்யும்போது எதிரே வரும் வாகனத்தில் லைட்டு அதன் மீது பட்டு உங்கள் விசிபிலிட்டி குறைந்து விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது.
புதிதாக ஹெல்மெட் வாங்கும்போது நாம் நான்கு விஷயங்களை முக்கியமாக முக்கியமாக பார்க்க வேண்டும் முதல் விஷயம் ஹெல்மெட்டின் வெளிப்புற டிசைன் ஹெல்மெட் வெளிப்புறத்தில் எந்த விதத்திலும் சேதமாகி உள்ளதா என்பதை செக் செய்து கொள்ள வேண்டும். சேதமான ஹெல்மெட்டை எக்காரணத்தைக் கொண்டும் வாங்க கூடாது. இந்த சேதமும் இல்லை என்றால் வெளிப்புற அம்சங்கள் ஓகே.

அடுத்ததாக நாம் செக் செய்ய வேண்டியது சரியாக வேலை செய்கிறதா எந்த சேதமும் இல்லாமல் இருக்கிறதா என செக் செய்ய வேண்டும் சில வைத்தார்கள். சேதம் இல்லை என்றாலும் அதை மேலே தூக்கவோ கீழே இறக்கவோ பிரச்சனைகள் இருக்கலாம். இப்படியான ஹெல்மெட்டுகளையும் பயன்படுத்தக் கூடாது. வைசியர்களில் சேதம் அடைந்திருந்தாலும் அதையும் பயன்படுத்தக்கூடாது.
அடுத்ததாக ஹெல்மெட் ஸ்ட்ரிப்புகள் மற்றும் பக்கில்கள் சரியாக இருக்கிறதா என செக் செய்ய வேண்டும்0 சில தரமற்ற ஹெல்மெட்டுகளில் இந்த ஸ்டிரிப்புகள் தரம் இல்லாமல் வழங்கியிருப்பார்கள். இதனால் நீங்கள் உங்கள் தலையில் மாட்டும்போது ஸ்டிரிப்புகள் மற்றும் பக்கில்கள் சரியாக வேலை செய்கிறதா உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா வசதியாக இருக்கிறதா என்பதை செக் செய்து வாங்க வேண்டும்.
கடைசியாக ஹெல்மெட் உள்ளே இருக்கும் தெர்மாகோலுக்கு ஹெல்மெட்டின் உட்பகுதி வழியாக நீங்கள் தொட்டுப் பார்க்கும்போது ஹெல்மெட்டுக்குள் தெர்மாகோல் இருப்பது உங்களுக்கு நன்றாக தெரியும் போது உங்கள் கைவிரல் பதிய கூடாது. இப்படியாக பதிந்தால் தரம் மற்ற தெர்மாகோல் ஹெல்மெட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என அர்த்தம் வாங்க கூடாது.
பொதுவாக மார்க்கெட்டில் உள்ள கார்பன் ஃபைபர்கள் மட்டும்தான் குறைந்த எடை கொண்டதாகவும், அதிக உறுதித் தன்மை கொண்டதாகவும் இருக்கும். ஆனால் இந்த ஹெல்மெட்டுகள் எல்லாம் ரூபாய் 15,000 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது. இதனால் அனைவராலும் இந்த ஹெல்மெட்டுகளை எளிதாக வாங்கி விட முடியாது.
உதாரணமாக உங்களுக்கு 58 சென்டிமீட்டர் அளவுக்கு தலை சைஸ் இருந்தால் நீங்கள் 60 சென்டிமீட்டர் ஹெல்மெட்டை வாங்கினால் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். அடுத்ததாக மிக முக்கியமானது ஐஎஸ்ஐ தர சான்று தான். ஐஎஸ்ஐ தரச் சான்று பெற்ற ஹெல்மெட்டை மட்டுமே வாங்க வேண்டும். ஐஎஸ்ஐ தர சான்று இல்லாதவர்கள் மட்டும் வாங்க கூடாது, அப்படியான ஹெல்மெட்டை யாரும் இருப்பதாக இருந்தால் உடனடியாக அரசுக்கு தகவல் கொடுங்கள் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
இதன் காலாவதி காலத்தை பொருத்தவரை ஹெல்மெட் தயாரிக்கப்பட்ட தேதி அதில் பதியப்பட்டிருக்கும்.அந்த தேதியில் இருந்து 7 ஆண்டுகள் வரை அந்த ஹெல்மெட்டை பயன்படுத்தலாம். அல்லது நீங்கள் ஹெல்மெட் பயன்படுத்த துவங்கிய 5 ஆண்டுகள் வரை அதை பயன்படுத்தலாம். அதற்கு பிறகு அந்த ஹெல்மெட்டை மாற்றிவிடுவது சிறந்தது. அதுவரை சேதமாகாமல் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக அரசு ஐஎஸ்ஐ தர சான்று பெற்ற ஒரு நல்ல ஹெல்மெட்டை தயாரிக்க குறைந்தபட்சம் ரூபாய் 500 செலவாகும். இதனால் 500க்கும் குறைவான விலையில் ஹெல்மெட் விற்பனையானால் அந்த ஹெல்மெட்டுகளை வாங்குவது தவிர்க்க வேண்டும். இதனால் 500க்கு அதிகமாக இருக்கும் ஹெல்மெட்டுகளை தேர்வு செய்யலாம்


Click it and Unblock the Notifications









