முதல்ல கிராக் சின்னதா இருக்கும், வண்டி ஓடஓட விரிசல் விரிவடைஞ்சுட்டே வரும்! இதை மேலும் பரவாமல் தடுப்பது எப்படி!

நல்ல இருந்த விண்ட்ஷீல்டு (Windshield)-ல எப்போ விரிசல் (Crack) ஏற்பட்டுச்சுன்னே தெரியாது. ஆனா, திடீர்னு அதுல விரிசல் ஏற்பட்டு இருக்கும். அது, காரின் கண்ணாடியைத் துடைக்கப் போகும்போது அல்லது ஏதோ ஓர் வழியில் நீண்ட நாள் கழித்து நமக்கு அது தெரிய வரும்.

அதுமட்டுமில்லைங்க, இந்த மாதிரியான விரிசல்கள் ஆரம்பத்தில் மிகவும் சின்னதாகவே இருக்கும் நாட்கள் செல்ல செல்ல அது விரிவடைந்து காரின் விண்ட்ஷீல்டு முழுக்க பரவிவிடும். இது பரவுவதில் கொரோனா வைரஸைவிட அதிக வேகத்தில் செயல்படும். விண்ட்ஷீல்டு முழுவதுமாக பரவி அதை சற்றும் பயன்பாட்டிற்கு உகந்ததல்லாத ஒன்றாக மாற்றிவிடும்.

Windshield cracks

இதனால்தான் அதை அவ்வளவு சுலபமாக எண்ணி விடக் கூடாது என்கின்றனர் வாகனத்துறை வல்லுநர்கள். மேலும், ஆரம்பத்தில் சிறிய கிராக் இருக்கும் இது, விரைவில் பெரியதாக விரிவடைவதோடு, வெடித்து சிதறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். இதனால்தான் இந்த விஷயத்தில் அதிக கவனம் தேவை என்கின்றனர்.

இந்த சூழல்கள் அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, சிறிய விரிசல் மேலும் விரிவடையாமல் தடுப்பதற்கான டிப்ஸ்கள் சிலவற்றையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Windshield crack view from inside car

சூப்பர் க்ளூ (SupetGlue)-வை பயன்படுத்தலாம்: சூப்பர் க்ளூ தற்போது சந்தையில் பரவலாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. உடைந்த பொருட்களை விரைந்து ஒட்டச் செய்வதில் இந்த சூப்பர் க்ளூக்கள் கில்லாடிகள் ஆகும். இதனை விரிசல் ஏற்பட்ட விண்ட்ஷீல்டில் விடுவதனால் அந்த விரிசல் மேலும் விரிவடையாமல் தவிர்க்கப்படும்.

குறிப்பாக, இது ஓர் சீல் போல் செயல்படும். இதை விரிசல் விட்ட பகுதியில் விடுவதற்கு முன்னர் அந்த இடத்தை நன்கு சுத்தம் செய்தல் வேண்டும். ஆல்கஹால், கண்ணாடி கிளீனர்கள் அல்லது சோப்பு நீர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு நன்கு காய்ந்த பின்னர் போட வேண்டும்.

Windshield cracks in front side

இவ்வாறு செய்வதனால் சூப்பர் க்ளூ மிக சிறந்த சீலாக செயல்படும். அதாவது, அதன் லைஃப் டைமை அதிகரிக்கச் செய்ய முடியும். ஒரு வேளே கூடுதலாக சூப்பர் க்ளூக்களை ஊற்றிவிட்டீர்கள் என்றால் அதை மிகவும் லேசாக அகற்ற வேண்டும் அல்லது ஆல்கஹாலைக் கொண்டு துடைத்தல் செய்யலாம்.

நெயில் பாலிஷ் (Nail Polish)-ஐ பயன்படுத்தலாம்: சூப்பர் க்ளூவை போலவே செயல்படும் மற்றுமொரு மூலக் கூறாக நெயில் பாலிஷ்கள் இருக்கின்றன. இந்த நெயில் பாலிஷ்கள் வண்ணமற்ற தேர்விலும் கிடைக்கின்றன. அதை விண்டுஷீல்டின் விரிசல் விட்ட பகுதியில் அப்ளை செய்வதனால் விரிசல் விட்ட இடத்தில் ஓர் இணைப்பு ஏற்படும். இதுவும், விரிசல் மேலும் விரிவடைவதை தவிர்க்கச் செய்யும் என்பது கவனிக்கத்தகுந்தது.

விண்ட்ஷீல்டு ரிப்பேர் கிட்: சந்தையின் தேவையை உணர்ந்து இந்த கிட்டும் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றன. பஞ்சர் கிட்டைப் போலவே இதை பயன்படுத்துவதும் மிக சுலபம். மேலும், மலிவு விலை தொடங்கி அதிக விலையைக் கொண்ட விண்ட்ஷீல்டு ரிப்பேர் கிட்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மிக மிக குறைவான விலைக் கொண்ட கிட்டை வாங்குவதற்கு பதிலாக ஓர் நடுநிலையான கிட்டைப் பயன்படுத்துவதனால் நல்ல ரிசல்டை நம்மால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கிளாஸ் ரிப்பேர் ஸ்பெஷலிஸ்டுகளை அணுகவும்: இந்த வேலைகளை செய்வதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை. மேலும், இதை செய்யும் அளவிற்கு தைரியம் இல்லை என நினைப்பவர்கள் கிளாஸ் ரிப்பேர் ஸ்பெஷலிஸ்டுகளை தொடர்புக் கொள்ளலாம். இவர்கள் வேலை கணக்கச்சிதமாக செய்து முடிப்பார்கள். என்ன, இதற்கு வேலைக் கூலி மற்றும் பொருளுக்கான தொகை இரண்டையும் கொடுக்க வேண்டியிருக்கும். பைசாவை மிச்சப்படுத்த நினைத்தால் நீங்களே இது செய்து முடிப்பதுதான் நல்லது.

விண்ட்ஷீல்டில் விரிசல் விட்ட வாகனத்தை வெயிலில் நிறுத்த கூடாது: அதிக உஷ்னம் மேலும் விரிசலுக்கு வழிவகுக்கும் என்பதால் கட்டாயம் அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் வாகனத்தை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, முடிந்த அளவு உச்சி வெயில் நேர பயணங்களை தவிர்ப்பதும் மிக சிறந்தது என்கின்றனர் ஆட்டோமொபைல்ஸ் துறை வல்லுநர்கள்.

வாகனங்களை கவனமாக பயன்படுத்தவும்: விரிசல் விழுந்த விண்ட்ஷீல்டு கொண்ட வாகனத்தை அதிக வேகத்தில் இயக்குவது, அதிகம் பள்ளம் மற்றும் மேடுகள் நிறைந்த சாலையில் இயக்குவது என்பதும் ஆபத்தான சூழலையே உருவாக்கும். இதனால் விரிசல் மேலும் விரிவடையச் செய்யும். அதோடு அதிக அதிர்வுகள் விண்டுஷீல்டை முழுமையாக நொறுங்கவும் செய்லாம். எனவேதான் இந்த மாதிரியான வாகனத்தை அதிக கவனத்துடன் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த டிப்ஸ்கள் அனைத்தும் லேசான அல்லது குறைவான விரிசல்கள் மட்டுமே பொருந்தும். அதிக விரிசல் கொண்ட வாகனங்களை எப்படியாவது ஓட்டிவிடலாம் என நினைத்து இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்ய வேண்டும். அதிக விரிசல் கொண்ட விண்ட்ஷீல்டு எப்போது ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாது.

குறிப்பாக, அது முழுமையாக நொறுங்கும்போது சூழல் மிகுந்த ஆபத்தானதாக மாறும். மேலும், நீங்களாகவே விண்ட்ஷீல்டு கிராக்கை சரி செய்ய முயற்சிக்கும்போது அந்த இடத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். சுத்தம் கண்ணாடி கிளீனர்கள் அல்லது ஆல்கஹால் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம். இது சூப்பரான சுத்தத்திற்கு வழிவகுத்து, நல்ல இணைப்பை உறுதிச் செய்யும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 10, 2023, 5:00 [IST]
English summary
Here are tips to stop windshield cracks spread
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X