'ஹை ஹீல்ஸ்' காலணி அணிந்து கார் ஓட்டும் பெண்களால் அதிக விபத்து

பிரிட்டனை சேர்ந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அறக்கட்டளை ஒன்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், ஹை ஹீல்ஸ் போன்ற காலுக்கு பொருந்தாத காலணியை அணி்ந்து கார் ஓட்டும் பெண்களால்தான் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கோடி பெண்கள் இதுபோன்று பொருத்தமில்லாத காலனிகளை அணிந்து கொண்டு தங்களுக்கு தவிர அடுத்தவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வை நடத்திய அறக்கட்டளையின் துணைத் தலைமை செயல் அதிகாரி ஜூலி டவுன்சென்ட் கூறுகையில், ஹை ஹீல்ஸ் போன்ற பொருந்தாத காலனிகளை அணிந்து கார் ஓட்டும்போது பெண்களுக்கு சரியான கன்ட்ரோல் கிடைப்பதில்லை.
ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச் ஆகியவற்றிற்கு இடையில் காலை மாற்றும்போது, ஹை ஹீல்ஸ் காலணிகள் சிக்கி விபத்து ஏற்பட காரணமாகிறது. எனவே, பெண்களால் ஏற்படும் 40 சதவீத விபத்துக்களுக்கு பொருத்தமில்லாத காலனிகளும் ஒரு காரணம்," என்று கூறினார்.
இதேபோன்று, பிரிட்டனை சேர்ந்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ஒன்று 750 பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், கலந்து கொண்டு கருத்து தெரிவித்த 75 பெண்கள் தாங்கள் அணிந்து செல்லும் ஹை ஹீல்ஸ் காலணியால் கன்ட்ரோல் கிடைக்காமல் பல முறை விபத்து நேரிட்டதாகவும் அல்லது மயிரிழையில் தப்பியதாகவும் தெரிவித்தனர்.
மேலை நாடுகளில் மட்டுமல்லாது ஹை ஹீல்ஸ் காலணி கலாச்சாரம் நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. எனவே, பெண்கள் ஹை ஹீல்ஸ் காலணி அணிந்து கார் ஓட்டுவதை தவிர்த்தால் அவர்களுக்கு மட்டுமல்லாது நம்மை போன்று எதிரில் வரும் அப்பாவி வாகன ஓட்டிகளுக்கும் நல்லது..!!


Click it and Unblock the Notifications








