வாகனங்களுக்கான உயர் பாதுகாப்பு எண் பலகை - சிறப்பு தகவல்கள்

By Saravana

வாகனங்களுக்கான 'ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்' என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த நெத்தியடி உத்தரவுதான் முழு காரணம்.

கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதனை செயல்படுத்துவதில் பல தாமதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

போலிகளை ஒழிக்கும்

போலிகளை ஒழிக்கும்

வாகனங்களை போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதுதான் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்.

கண்டுபிடிப்பது எளிது

கண்டுபிடிப்பது எளிது

வாகனம் திருடு போகும்போதும், விபத்து ஏற்படும் நேரங்களிலும் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் விபரங்களை வைத்து உடனடியாக உரிமையாளர் பெயர் மற்றும் விபரங்களை கண்டு பிடிக்க முடியும்.

பக்கா பாதுகாப்பு

பக்கா பாதுகாப்பு

ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகளை அரசாங்கம் நியமிக்கும் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே வாகனங்களில் பொருத்தும். வாகனத்தில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்தியவுடன் அந்த நம்பர் பிளேட்டை கழற்றவோ அல்லது பிற வாகனங்களில் பொருத்தவும் முடியாது. அப்படியொரு பக்காவான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது.

 ஸ்நாப் லாக் வசதி

ஸ்நாப் லாக் வசதி

சமூக விரோதிகள் இதுபோன்று மாற்ற நினைத்து அகற்றினால், அந்த நம்பர் பிளேட் உடனடியாக அழிந்து விடும் வகையில், ஸ்நாப் லாக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. எனவேதான் இதற்கு ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் என்று குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம்.

ஹாலோகிராம் ஸ்டிக்கர்

ஹாலோகிராம் ஸ்டிக்கர்

இதைவிட இந்த நம்பர் பிளேட்டுகளில் ஓர் முக்கிய விஷயம், இதில் பதிக்கப்பட்டிருக்கும் குரோம் பூச்சுடன் கூடிய ஹாலோகிராம் ஸ்டிக்கர் மூலம், சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த விபரங்களை 200 மீட்டர் தொலைவிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

3 நம்பர் பிளேட்டுகள்

3 நம்பர் பிளேட்டுகள்

வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் தவிர, மூன்றாவதாக வாகனத்தில் முன்புற கண்ணாடியில் சிறிய நம்பர் பிளேட் ஒன்றும் பொருத்தப்படும். இதில், வாகன எஞ்சின் நம்பர், சேஸிஸ் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி, ஆர்டிஓ விபரங்களுடன் உரிமையாளர் பற்றிய ஏ டூ இசட் விபரங்கள் அடங்கிய சிப் ஒன்றும் அந்த நம்பர் பிளேட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.

தமிழகத்தின் நிலை

தமிழகத்தின் நிலை

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களையும் 6 மண்டலங்களாக பிரித்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

செலவு

செலவு

ஒரு நம்பர் பிளேட் பொருத்துவதற்கு ரூ.600 முதல் ரூ.1000 வரை செலவாகும் என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, October 4, 2013, 12:50 [IST]
English summary
One of the significant safety feature of the High Security License Plates is reflectivity. High Security License Plates will have a high quality retro reflective sheeting which is laminated and embossed. This sheeting provides excellent conspicuity during day time and offer high reflectivity in the night. By virtue of reflective sheeting the vehicle is visible from a minimum difference of 200 meters in night irrespective of the working of its tail lamps etc.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+