ஹோலி கொண்டாடி கார்ல வீசப்பட்ட கலர் கரையை நீக்குவது எப்படி?

இந்தியா முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையின் போது நாம் நமது கார் பைக் போன்ற வாகனங்களை பொது இடத்தில் நிறுத்தி இருந்தால் சிலர் ஹோலி பண்டிகையில் கலர் பூசி விளையாடும்போது நம் வாகனத்திலும் அந்த கலர் படிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது, இப்படியாக படிந்திருக்கும் கலர்களை எப்படி நீக்குவது என்பதை பற்றிய டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று இந்தியாவில் பல பகுதிகளில் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஹோலி பண்டிகையின் போது ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசி விளையாடுவது ஒரு வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

holi car cleaning tips

இந்த பண்டிகையின் போது கார் பைக் வைத்திருப்பவர்கள் அதை பொதுவெளியில் பார்க் செய்திருந்தால், ஹோலி பண்டிகை கொண்டாடுபவர்கள். அதையெல்லாம் கவனிக்காமல் உங்கள் கார், பைக் அருகே வண்ணங்களை வீசி விளையாடினால் அந்த வண்ணங்கள் உங்கள் கார்களின் மீது படிந்து இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இப்படியாக ஹோலி பண்டிகையின் போது பலரது கார்கள் வண்ணம் பூசப்பட்டு மீண்டும் அதை கழுவினால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சூழ்நிலைக்கு மாறிவிடும். இப்படியாக உங்கள் கார், பைக் ஸ்கூட்டர் என ஏதேனும் வாகனம் கலர் பொடியால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை எப்படி நீக்குவது? இதனால் காருக்கு என்ன பிரச்சனைகள் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.

holi car cleaning tips

ஹோலி பண்டிகை என்பது உங்கள் கார் பைக்குகளில் கலர் பொடிகள் தூவி அதனால் கார் வண்ணமயமாக மாறிவிட்டால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியான டெக்னிக்கை பயன்படுத்தினால் மட்டுமே வாகனத்தின் பெயிண்டிற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் அந்த ஹோலி கலர் பொடியின் நிறங்களை அகற்ற முடியும்.

ஹோலியின் போது கலர் பொடிகள் வீசப்பட்டு கார் பாதிக்கப்பட்டால் அந்த காரை கழுவும் போது ஹார்டான கெமிக்கல் பயன்படுத்தாமல் சாஃப்டான, அதே நேரம் மைல்டான சோப்புகளை பயன்படுத்தி காரை கழுவ வேண்டும். இதனால் காரின் பெயிண்ட் எந்த பிரச்சனையும் இல்லாமல் அதன் மேல் பூசப்பட்ட கலர் மட்டும் தனியாக பிரிந்து வரும்.

holi car cleaning tips

காரை கழுவும் முன்பு நேரடியாக சோப்பை பூசாமல் முதலில் ஒரு தண்ணீரை வைத்து சுத்தப்படுத்திவிட்டு பின்பு சோப்புகளை வைத்து காரை சுத்தப்படுத்தினால், காரின் பெயிண்டிற்கு எந்த விதமான பிரச்சினையும் வராது. இப்படியாக தண்ணீரை வைத்து கலர் பொடி முழுவதும் சுத்தப்படுத்திய பின்பு காரில் படிந்திருக்கும் தண்ணீரை சாஃப்டான துணியை வைத்து துடைக்க வேண்டும்.

ஸ்கிரப் மற்றும் பிரஷ்களை கொண்டு காரின் வெளிப்புறத்தை துடைக்க கூடாது. இதை செய்தால் காரில் ஸ்கிராட்சைகள் ஏற்படும் சாஃப்ட்டான துணியை மட்டுமே பயன்படுத்தி காரை முழுவதுமாக துடைக்க வேண்டும். உங்கள் காரில் ஹோலி கலர் பொடி வீசப்பட்டு காரில் உள்ள அந்த கரையை நீக்க முதலில் உங்களுக்கு பொறுமை வேண்டும். பல்வேறு முறைகள் காரை சுத்தப்படுத்தினால் மட்டுமே அந்த கரை என்பது முழுவதுமாக உங்கள் காரை விட்டு நீங்கும்.

இதனால் நீங்கள் அவசர அவசரமாக காரை கழுவாமல் பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு காரை கழுவினால் நிச்சயம் உங்கள் காரில் உள்ள கலர் நீங்குவதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இப்படியாக காரின் வெளிப்புறத்தில் வீசப்பட்ட ஹோலி கலர் பொடிகளை எல்லாம் நீக்க வேண்டும்.

பின்பு அதில் கலர் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு ஒரு முறை நீங்கள் காரை வேக்ஸ் செய்யவோ அல்லது பாலிஷ் செய்யவோ செய்துவிட்டால் கார் மீண்டும் அதன் பழைய பளபளப்பு தன்மையை பெற்றுவிடும். வேக்ஸிங் செய்வதால் இனி வரக்கூடிய பிரச்சினைகளும் தவிர்க்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோலி பண்டிகை என்பது மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் வட இந்தியாவில் அதிகமாக கொண்டாடப்பட்ட பண்டிகை தற்போது தென்னிந்தியாவிலும் மெல்ல மெல்ல பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் பல கோடி கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு இது நிச்சயம் நல்ல பலனுள்ள டிப்ஸ்களாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2024, 7:00 [IST]
English summary
Holi car cleaning tips remove colour stains
மேலும்... #எப்படி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X