எதிர்கால ஆட்டோ உலகை ஆளபோகும் பிரேக்கிங் தொழிற்நுட்பங்கள் இவைதான்….
வாகனங்களுக்கு பிரேக்கிங் எவ்வளவு முக்கியம் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும், கார்கள் எவ்வளவு வேகமாக போனாலும், வேகத்தை கட்டுப்படுத்தவும், வாகனத்தை நிறுத்தவும் பிரேக்கிங் மிகவும் அவசியம், ஆனால் அதில
வாகனங்களுக்கு பிரேக்கிங் எவ்வளவு முக்கியம் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும், கார்கள் எவ்வளவு வேகமாக போனாலும், வேகத்தை கட்டுப்படுத்தவும், வாகனத்தை நிறுத்தவும் பிரேக்கிங் மிகவும் அவசியம், ஆனால் அதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் விபத்துக்கள் நடக்கவும் இந்த பிரேக்கிங் சிஸ்டமும் ஒரு காரணம், ஆனால் இவ்வாறான விபத்துக்களை தவிர்க்க இன்று பல தொழிற்நுட்ப கருவிகள் வந்து விட்டன. அந்த கருவிகளை பற்றி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

ஏபிஎஸ்
ஏபிஎஸ் என்றால் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், நீங்கள் வேகமாக செல்லும் போது திடீர் என அதிக பிரஷரில் பிரேக் பிடித்தால் வீல் லாக் ஆகி வாகனம் ஸ்கிட் ஆகி விபத்திற்குள்ளாகும். அதை தடுத்து வீல் லாக்காவதை தடுப்பது தான் இந்த கருவியின் வேலை.

சிலர் பழைய காலங்களில் கார்களில் வேகமாக செல்லும் போது திடீர் என பிரேக் பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பிரேக்கை விட்டு விட்டு பிடிப்பார்கள், அப்படி செய்வதால் வீல் லாக் ஆகாமல் கார் விபத்திற்குள் சிக்காமல் சரியாக பிரேக் பிடிக்க உதவும், அதையே தான் இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் கருவி தானாக வேகமாக செய்கிறது.

ஒரு 4 சேனல் ஏபிஎஸ் கருவியில் எல்லா வீல்களுக்கான ஸ்பீடு சென்சார், பிரேக்களுடன் இணைக்கப்பட்ட கம்யூட்டர் கண்ட்ரோல் ஹைட்ராலிக் லைன் லீட்ஸ், ஹைட்ராலிக் பிரேக்கிங் பிரஷரை நிரப்பும் பம்ப்,ஓவர் சீயிங் எலெக்ட்ரானிக் பிரையின். ஆகிய கருவிகள் இருக்கும்.

நீங்கள் இப்பொழுது பிரேக் பிடிக்கிறீர்கள் என்றால் ஏபிஎஸ் முதலில் உங்கள் வீலின் வேகத்தையும், நீங்கள் பிரேக்கிற்கு கொடுக்கும் அளித்ததையும் கணக்கிட்டு வீலுக்கு தேவையான பிரேக்கை வழங்கும். இப்பொழுது பிரேக்கின் பிரஷர் அதிகமாக கார் வீல் லாக் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை தடுக்க பிரேக்கை தளர்த்தி, பின்பு மீட்டும் டைக்காக வைத்து வீல் லாக் ஆகாமல் தடுக்கும்.

இதன் மூலம் நீங்கள் பிரேக் பிடிப்பதால் கார் வீல் ஸ்கிட் ஆகி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும். இதனால் டிரைவருக்கும் சிறந்த ஸ்டியரிங் கண்ட்ரோல் கிடைக்கும்.

ஏபிஎஸ் என்பது அதிக பிரஷரில் பிரேக் பிடிக்கம் போது வீல் ஸ்கிட் ஆகாமல் ஸ்டியரிங் கண்ட்ரோல் கிடைக்கம். இதனால் வழக்கமான பிரேக்கில் வாகனம் நிற்கும் தூரத்தை விட குறைந்த தூரத்தில் வாகனம் நிற்கும் என கருத வேண்டாம். பலர் இவ்வாறாக தவறான தகவலை பரப்புகின்றனர். அவ்வாறான எந்த வேலையையும் ஏபிஎஸ் செய்வதில்லை.

இபிடி - எலெட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஸன்
ஏபிஎஸ் என்பது வீல் லாக் ஆகும் போது லாக்கில் இருந்து அதை காக்கும். இபிடி என்பது வீல் ஸ்லிப் ஆகும் போது அதில் இருந்து நம்மளை காக்கும்.

இந்த தொழிற்நுட்பம் என்பது காருக்கும் எல்லா நேரத்திலும் எல்லா வீலுக்கும் பிரேக் பிடிக்க ஒரே அளவிலான பிரஷர் தேவைப்படாது ஒவ்வொரு வீலும் வேலைசெய்யும் அளவிற்கு இந்த பிரஷரை கொடுக்கும். இது குறிப்பாக காரில் உள்ள வெயிட்டை சரியாக பேலன்ஸ் செய்து அதை கட்டுப்படுத்த உதவும்.

குறிப்பாக வாகனம் திரும்பும்போது வாகனத்தின் எடை ஒருபுறமாக இருக்கும் மறுபுறத்தில் எடை இருக்காது. அவ்வாறு சாதாரண வாகனத்தில் வேகமாக வந்து திரும்பும் போது பிரேக் பிடித்தால் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக பிரேக் அப்ளே ஆகி விபத்தை ஏற்படுத்தும்.

ஆனால் இந்த இபிடி பொருத்தப்பட்ட வாகனத்தின் திரும்பும் போது வாகனத்தின் எடையை கணக்கிட்டு விபத்து ஏற்படுத்தாத வண்ணம் பிரேக்கை அப்ளே செய்யும். இதனால் அவ்வாறான விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

இன்னும் சில மேம்படுத்தப்பட்ட மாடல்களில் காரில் பொருத்தப்பட்ட ரேடார் அல்லது கேமரா கைடு க்ராஷ் டிடெக்ஷன் சிஸ்டம் ஆகியவை மூலம் விபத்து அலாரம் வந்து பிரேக் பிடித்தால் முடிந்த அளவு விபத்து ஏற்படுத்தாத வண்ணம் சிறந்த பெர்பாமென்ஸ் உடன் பிரேக்கை பிடிக்கும்.

ஆட்டோனமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங்
இந்த ஆட்டோனமஸ் பிரேக்கிங் என்பது ஒரு படி மேலே சென்று டிரைவரின் செயல் எதுவும் இல்லாமல் தானாக பிரேக் பிடிப்பது அல்லது விபத்து நடக்கும் எச்சரிக்கையை டிரைவருக்கு விடுத்தும் அவர் செயல்படவில்லை என்றால் தானாக பிரேக் பிடிப்பது. தான் இந்த ஆட்டோனமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங்.

உதாரணமாக நீங்கள் உங்கள் காரை ரிவர்ஸ் எடுக்கிறீர்கள் எதேனும் இடத்தில் நீங்கள் இடிக்க போகிறீர்கள் என்றால் இந்த கார் தானாக பிரேக் பிடித்து காரை நிறுத்தி விடும். இதன் மூலம் நீங்கள் இந்த விபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

இது போன்ற ஒரு தொழிற்நுட்பத்தை தான் , வால்வோ நிறுவனம் பெடஸ்ட்ரியன் மற்றும் சைக்கிளிஸ்ட் டிடெக்ஸன் என்ற பெயரில் வடிவமைத்துள்ளனர். இது ரோட்டில் செல்லும் மற்ற வாகனங்களையும் மனிதர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது வாகனம் மோதாமல் இருக்க பிரேக்கை பயன்படுத்தும். இதுவும் ஆட்டோனமஸ் பிரேக்கிங் சிஸ்டம் தான்.

இதே போல மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், வால்வோ காரில் கோலிஷன் வார்னிங் ஆட்டோபிரேக், நிஸான் காரில் இன்பினிட்டி இன்டலிஜென்ஸ் பிரேக்கிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்நுட்பங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. டெஸ்லா காரிலும் இது போன்ற தொழிற்நுட்பம் தான் பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








