கம்மி விலையில் ரயில் டிக்கெட் புக் பண்ண இப்படி ஒரு ஐடியா இருக்கா? இவ்ளோ நாளா இதை மிஸ் பண்ணீட்டோமே!
ஐஆர்சிடிசி தளத்தில் இருக்கும் Auto Upgradation என்றால் என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? இதை எப்படி நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனக் காணலாம்.

நாம் எல்லோரும் ரயிலில் பயணித்திருப்போம். ரயில் பயணம் என்றும் இனிமையானது சுகமானது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரயில் என்ற ஒரு போக்குவரத்து தான் ஒரே வாகனத்தில் மிகக் குறைவான விலை டிக்கெட் பயணமும் மிக அதிகமான விலை டிக்கெட் பயணமும் சாத்தியமாகிறது. விமானத்தில் இந்த வேறு பாடு இருந்தாலும் ரயில் அளவிற்கு அதிகமான ஆப்ஷன்கள் விமானத்தில் இல்லை.

ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் மிகக் குறைவான விலையில் இருக்கிறது. முன்பதிவு செய்யப்பட்ட அமர்ந்து மட்டும் செல்லும் வசதி கொண்ட பெட்டிகள், முன்பதிவுடன் கூடிய பெர்த் வசதி கொண்ட பெட்டிகள், 3 டயர் ஏசி, 2 டயர் ஏசி, 1 டயர் ஏசி என ஏசி பெட்டிகளிலேயே தரம் பிரிக்கப்பட்ட வகுப்புகள் இப்படியாகப் பல விதமான டிக்கெட்கள் ஒரே ரயிலில் இணைக்கப்படுகிறது.

ஆனால் இதை விலையைப் பார்த்தால் முன்பதிவில்லாத பெட்டியில் வேறு எந்த வாகனத்திலும் இல்லாத அளவிற்குக் குறைந்த விலை பயணம் சாத்தியமாகிறது. அதே நேரத்தில் 1 ஏசியில் விமானத்தை விட அதிகமாக விலையில் டிக்கெட் விலை இருக்கிறது. இப்படியாகப் பல வசதிகளைக் கொண்ட இந்த ரயிலில் பலருக்கு முன்பதிவு செய்து செல்ல வேண்டும் எனக் கனவு, பலருக்கு ஏசி பெட்டியில் பயணிக்க வேண்டும் எனக் கனவு, பலருக்கு 1 வகுப்பு ஏசியில் பயணிக்க வேண்டும் எனக் கனவு.

ஆனால் பணம் காரணமாகப் பலரது கனவுகள் நிறைவேறாமல் போகிறது. ஆனால் இப்படியான கனவு உள்ளவர்கள் ரயில் முன்பதிவு செய்யும் போது குறைந்த விலையில் அதிக டிக்கெட் விலை கொண்ட ரயில் பெட்டியில் பயணிக்கும் வாய்ப்பு ஒன்று இருக்கிறது. இந்த தகவல் பலருக்குத் தெரிவதில்லை. இதைப் பற்றித் தான் முழுமையாகக் காணப்போகிறோம்.

இந்தியாவில் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளை ஐஆர்சிடிசி என்ற இணையதளம் கையாண்டு வருகிறது. இந்த தளத்தில் டிக்கெட்களை புக் செய்யும் போது அது பயணிகளுக்கு தங்கள் வகுப்பை அப்கிரேடு செய்யும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அந்த ஆப்ஷனிற்கு பெயர் Auto Upgradation. இதைப் பற்றித் தான் இங்குக் காணப்போகிறோம்.

தற்போது நாம் ஒரு வகுப்பில் டிக்கெட் புக் செய்யும் போது அந்த வகுப்பிற்கான டிக்கெட் முடிந்துவிட்டால் அடுத்தாக RAC,அதன் பின்னர் காத்திருப்பு பட்டியலில் டிக்கெட்கள் புக் ஆகும். இதில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை புக் செய்yவர்கள் கேன்சல் செய்தால் அந்த இந்த பட்டியலில் இருப்பவர்களுக்கு முதலில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சீட் வழங்கப்படும்.

இப்படியாக சிஸ்டத்தில் சில பிரச்சனைகள் வந்துள்ளது. அதாவது இரண்டாம் வகுப்பில் டிக்கெட் புக் செய்தவர்கள் டிக்கெட் நிரம்பி டிக்கெட் கிடைக்காமலிருந்துள்ளனர். ஆனால் ஏசி வகுப்பு டிக்கெட் புக் செய்ய ஆள் இல்லாமல் சில இருக்கைகள் காலியாகவே ரயில் பயணித்துள்ளது. இந்த இருக்கைகளையும் நிரப்பும் பட்சத்தில் இந்த இந்த Auto Upgradation சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டத்தின்படி இறுதியாக ஒரு ரயிலின் சார்ட் தயாரிக்கப்படும் போது முன்பதிவு செய்யாமல் இருக்கும் சீட்களுக்கு காத்திருப்பு பட்டியல் அல்லது ஆர்ஏசியில் உள்ள சீட்கள் ஒதுக்கப்படும். இது முறையாக முதலில் 1 ஏசியில் இருந்து நடைபெறும். அங்கு சீட்கள் முழுமையாக நிரம்பவில்லை என்றால் உடனடியாக 2வது ஏசியில் புக் செய்து காத்திருப்பு பட்டியல் அல்லது ஆர்ஏசியில் இருக்கும் நபர்களுக்கு இந்த சீட் ஒதுக்கப்படும்.

அதாவது அவர் 2வது வகுப்பு ஏசி கட்டணத்திலேயே முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்யலாம். அதே போல அடுத்தாக 2வது வகுப்பு நிரம்பத் துவங்கும். அதிலும் சீட் நிரம்பவில்லை என்றால் அடுத்தாக 3வது ஏசி காத்திருப்பு பட்டியல் அல்லது ஆர்ஏசியில் உள்ளவர்களுக்கு இந்த சீட் ஒதுக்கப்படும். அதிலும் சீட் மீதம் இருந்தால் இரண்டாம் வகுப்பு சாதாரண பெட்டிக்கான முன்பதிவு டிக்கெட்டில் காத்திருப்பு பட்டியல் அல்லது ஆர்சியில் உள்ளவர்களுக்கு இங்கு சீட் வழங்கப்படும்.

இப்படியாக அவர்கள் குறைந்த கட்டணத்திலேயே உயர் வகுப்பு பெட்டிகளில் பயணிக்க முடியும். ஆனால் இந்த மாற்றம் நடக்க வேண்டும் என்றால் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் போது Auto Upgradation ஆப்ஷனில் "ஆம்" எனத் தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்வு செய்தவர்கள் மட்டுமே மாற்றம் செய்யப்படுவார்கள். மற்றவர்களுக்கு உயர் வகுப்பு மாற வாய்ப்பு இருந்தாலும் அதைச் செய்யாமல் அவர்கள் புக் செய்த வகுப்பிலேயே தான் டிக்கெட் உறுதி செய்யப்படும்.

இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. தற்போது ஒரு டிக்கெட்டை அப்கிரேடு செய்ய முயற்சி செய்கிறது என்றால் அந்த டிக்கெட் புக் செய்யப்பட்ட பிஎன்ஆர் எண்ணில் உள்ள அத்தனை டிக்கெட்களையும் அப்கிரேடு செய்யும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே அந்த டிக்கெட் அப்கிரேவு செய்யப்படும். உதாரணமாக ஒரு பிஎன்ஆர் எண்ணில் 6 டிக்கெட்கள் புக் செய்யப்பட்டிருந்தால் அப்கிரேடிற்கு 3 டிக்கெட்களுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்தால் அந்த டிக்கெட் அப்கிரேடு செய்யப்படாமல் அடுத்த பிஎன்ஆர் எண்ணிற்குச் சென்றுவிடும்.

டிக்கெட் அப்கிரேடு ஆனவுடன் ஒருவர் அப்கிரேடு ஆன டிக்கெட்டை கேன்சல் செய்தால் அவர் புக் செய்த வகுப்பிற்கான கேன்சலேசன் கட்டணங்களே இதற்கும் இருக்கும். இந்த Auto upgradation வாய்ப்பு இரண்டாம் வகுப்பு சிலீப்பர் மற்றும் அனைத்து ஏசி சிலிப்பர் வசதி கொண்ட வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் சீட்டிங் வசதி மற்றும் கொண்ட வகுப்புகளுக்குப் பொருந்தாது. மேலும் இந்த மாற்றம் முதியோருக்கான சலுகை டிக்கெட் எடுத்தோருக்கு பொருந்தாது, பிஎன்ஆர் எண்ணில் ஒரு சலுகை டிக்கெட் இருந்தாலும் இந்த ஆட்டோ அப்கிரேடஷன் பொருந்தாது.

இப்படியாக ரயில்களில் குறைந்த விலை டிக்கெட்டிலேயே உயர்ந்த வகுப்பில் பயணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பலருக்கு இந்த வசதி இருப்பதே தெரியாது. இதனால் அடுத்த முறை நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போது இப்படியாக ஆட்டோ அப்கிரடேஷன் ஆப்ஷனை ஆம் எனத் தேர்வு செய்வது மூலம் குறைந்த விலையில் உயர் வகுப்பில் பயணம் செய்யலாம். இது போன்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்குத் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








