கார்ல ஏசி போட்டா மைலேஜ் குறையுமா? ஜன்னலை திறந்தா பெட்ரோலை சேமிக்க முடியுமா? தீராத குழப்பத்திற்கு தீர்வு!

இந்தியாவில் பல பகுதிகளில் தற்போது வெயில் சுட்டெரிக்கத் துவங்கிவிட்டது. தற்போதே பல இடங்களில் கோடைக் காலம் போல வெளியில் அடிக்கடிக்கிறது. வெயில் காலங்களில் கார்களில் செல்பவர்கள் அதிகமாக ஏசியை பயன்படுத்துவார்கள். ஏசி இல்லை என்றால் காரில் செல்லவே முடியாத நிலை இருக்கும்.

காற்றும் அனல் காற்றாக இருக்கும் என்பதால் பலர் கார்களில் செல்லும் போது ஜன்னலை மூடிக்கொண்டு ஏசியை ஆன் செய்து முழு ஸ்பீடில் வைத்துக்கொண்டு பயணிப்பார்கள். அப்பொழுது தான் இந்த வெப்பத்திற்கு இதமாக இருக்கும். என்னதான் மக்கள் அதிக காலம் கார் ஓட்டியிருந்தாலும் அவர்களுக்கு வெகு நாட்களாகத் தீராத ஒரு சந்தேகம் இருக்கிறது.

கார்ல ஏசி போட்டா மைலேஜ் குறையுமா? ஜன்னலை திறந்தா பெட்ரோலை சேமிக்க முடியுமா? தீராத குழப்பத்திற்கு தீர்வு!

கார்களில் ஏசிப் போட்டுப் பயணித்தால் காரின் மைலேஜ் குறையுமா? அதிக மைலேஜ் கிடைக்க ஏசியை ஆஃப் செய்து ஓட்ட வேண்டுமா? ஜன்னலைத் திறந்து வைத்துப் பயணித்தால் மைலேஜ் பாதிக்கும் எனச் சொல்லப்படுவது உண்மையா? இதற்குப் பல ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்காமல் குழப்பிப் போய் சுற்றி வருகின்றனர். இதற்கான விளக்கத்தைத்தான் இங்கே காணப்போகிறோம்.

முதலில் ஏசியை பயன்படுத்தினால் மைலேஜ் குறையும் எனச் சொல்லப்படுவதைப் பற்றிக் காணலாம். ஆம் அது உண்மை தான் நீங்கள் காரில் செல்லும் போது ஏசியை ஆன் செய்தால் நிச்சயம் மைலேஜ் பாதிக்கப்படும். ஏசி கம்பிரஷர் இயங்குவதற்கு இன்ஜினிலிருந்து தான் பவரை எடுக்கிறது. அதனால் இன்ஜின் பவர் காருக்கு செல்வது குறையும். இதனால் மைலேஜ் பாதிக்கப்படும் என்பது உண்மை தான்.

ஆனால் ஏசி எவ்வளவு இன்ஜின் திறனை எடுக்கிறது என்பது ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாறுபடும். வெளிப்புற வெப்ப நிலை, காற்றில் உள்ள ஈரப்பதம், காருக்குள் நீங்கள் செட் செய்திருக்கும் வெப்ப நிலை ஆகியவற்றை வைத்து எவ்வளவு இன்ஜின் திறனை பயன்படுத்துகிறது என்பது மாறும் அதற்கு ஏற்றார் போல் மைலேஜூம் மாறுபடும்.

காரில் ஏசியை போடாமல் ஜன்னல் கண்ணாடிகளைத் திறந்து வைத்து கொண்டு கார் ஓட்டினால் பெட்ரோலை மிச்சப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அடுத்தாக மக்களுக்கு எழும். இது நீங்கள் கார் ஓட்டும் இடத்தை பொருத்தத்து. நீண்ட தூரம் ஹைவேயில் வேகமாக கார் ஓட்டும் போது ஜன்னலைத் திறந்து வைத்து ஓட்டினால் நிச்சயம் அது முட்டாள் தனம் தான்.

கார்கள் வேகமாகச் செல்லும் போது ஏரேடைமிக்ஸ் மிக முக்கியமான விஷயமாக இருக்கும். இதனால் காருக்குள் காற்று வந்தால் காரின் இன்ஜின் பவர் குறைந்துவிடும். இதனால் இப்படியாக நீண்ட தூரம் வேகமாகப் பயணிக்கும் போது ஜன்னலை மூடிக்கொண்டு பயணிப்பதே சிறந்தது. ஆனால் ஊருக்குள் செல்லும் போது அப்படியல்ல

ஊருக்குள் காரை மெதுவாகத் தான் ஓட்டுவோம். அதனால் ஏரோடைனமிக்ஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த நேரத்தில் ஜன்னலைத் திறந்து வைத்துப் பயணிக்கலாம். வெயிலில் நீண்ட தூரம் செல்லும் போது ஜன்னலை மூடி வைத்திருந்தால் காருக்குள் வெப்பம் அதிகமாகிவிடும். அதனால் ஏசியை பயன்படுத்துவது தான் நல்லது.

ஊருக்குள் பயணிக்கிறீர்கள் என்றால் ஏசி தேவையில்லை. ஆனால் அது உங்கள் பயணம் ஊருக்குள் மட்டும் இருக்கும்பட்சத்தில் தான் சிறந்தது. ஒரு வேலை ஊருக்குள்ளும் பயணித்து வெளியூருக்கும் பயணத்தைத் தொடர்ந்தால் காரின் ஏசியை ஆன்/ஆஃப் என மாறி மாறி செய்வது தவறு

அதிகமாக ஏசியை ஆஃப் செய்துவிட்டால் காருக்குள் வெப்பம் அதிகமாகும். மீண்டும் ஆன் செய்யும் போது வெப்பத்தைக் குறைக்க ஏசி அதிக திறனில் இயங்க வேண்டும். இதனால் மைலேஜ் மேலும் குறையும். ஒரு முறை ஏசியை ஆன் செய்ய முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் பயணம் முடியும் போது மட்டும் ஏசியை ஆஃப் செய்யுங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 11, 2023, 12:40 [IST]
English summary
How car ac affect mileage or fuel efficiency
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+