இதையெல்லாம் மாத்துனா இவ்வளவு பணம் மிச்சமாகுமா? செலவை குறைக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் தில்லாங்கடி!
கார் தயாரிப்பின் போது சின்ன சின்ன மாற்றங்கள் மூலம் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய தொகையை மிச்சப்படுத்துகின்றனர். இதையெல்லாம் மாத்துனா இவ்வளவு பணம் மிச்சமாகுமா என உங்களை அசர வைக்கும் வகையில் பலருக்கும் தெரியாத ரகசியங்கள் இருக்கிறது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்
ஒரு கார் உருவாகிறது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பின்னால் ஏகப்பட்ட நபர்களின் உழைப்பு இருக்கிறது. கார் தயாரிப்பிலேயே பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சிறப்பான நபர்கள் வந்து ஒரு காரை தயாரிக்கின்றனர். இந்த கார் தயாரிக்கப்படும் முன்பே இந்த காரை என்ன விலைக்கு விற்பனை செய்யப்போகிறோம் என யோசித்து அந்த விலைக்குள் காருக்குள் உள்ள பொருட்களின் அடக்க விலையை கொண்டு வர வேண்டும்.

இது ஒரு மிகப்பெரிய சவாலான காரியம் தான். இதனால் குறைந்த விலையில் காரை கொடுக்க விரும்பும் நிறுவனங்கள் கார் தயாரிப்பின் போது அதன் வடிவமைப்பில் சில சிறிய சிறிய மாற்றங்களை செய்வார்கள். அந்த சிறிய மாற்றம் காருக்கான தயாரிப்பு செலவை மிகவும் குறைத்துவிடும். இந்த மாற்றம் செய்ததால் இவ்வளவு பணம் மிச்சமாகியுள்ளதா என நமக்கே ஆச்சரியமாக இருக்கும். இப்படியாக காரின் விலையை குறைப்பதற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் சில விஷயங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
இன்டிகேட்டர்
இன்று பெரும்பாலான கார்களில் ஸ்டிரிங் வீலுக்கு கீழே இருக்கும் இன்டிகேட்டர், வலது புறம் இருப்பதை பார்த்திருப்பீர்கள் சில வாகனங்களில் மட்டும் இடது புறம் இருக்கும். பொதுவாக சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் காரின் இடது பக்கம் தான் ஸ்டிரிங் இருக்கும். அதில் இண்டிகேட்டர்கள் இதுபுறம் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். அதே காரைஇந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் அதன் இன்ஜினியரிங்கை மாற்றவேண்டும். இதற்கு அதிகம் செலவாகும். அதனால் சில நிறுவனங்கள் காரின் இண்டிகேட்டரை இடதுபுறமே வைத்திருக்கின்றனர். வலது புறம் இருந்தால் அது இந்தியாவிற்காக மாற்றிமைக்கப்பட்டது, அல்லது இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட கார் என அர்த்தம்.

ஃபிக்ஷடு ஹெட்ரெஸ்ட்
கார்களில் சீட்களில் ஹெட்ரெஸ்ட்கள் வழங்கப்படுவதை பார்த்திருப்பீர்கள். விலை உயர்ந்த கார்களில் ஹெட்ரெஸ்ட்கள் அட்ஜெஸ்ட் செய்யும்படி தனியாக வழங்கப்பட்டிருக்கும். ஆனால் குறைந்த விலை கார்களில சீட் உடனேயே பொருத்தப்பட்டதுபோல இருக்கும். இதுவும் ஹெட்ரெஸ்ட் தயாரிப்பதற்கான செலவை மிச்சப்படுத்தும் முயற்சிதான். அதனால் தான் காரின் சீட்டை வடிவமைக்கும் போதே அதில் ஹெட்ரெஸ்ட் உடன் இருப்பது போல வடிவமைக்கிறார்கள்.
ஃப்யூயல் டேங்க் ஃபில்லர்!
கார்களில் பெட்ரோல் போடும் இடம் பெரும்பாலும் கார்களின் இடது பக்கம் தான் இருக்கும் சில கார்களில் மட்டும் வலது பக்கம் அதாவது டிரைவர் இருக்கும் பக்கத்திலேயே கொடுத்திருப்பார்கள். இதுவும் செலவை மிச்சப்படுத்துவதற்கான ஒரு வழி தான். இடது பக்கம் அமைத்தால் அங்கிருந்து ஃப்யூயல் டேங்கிற்கு பெட்ரோலை கடத்தி செல்ல அதிகமான பைக் செலவாகும். ஆனால் வலது பக்கம் இருந்தால் குறைவான பைப் தான் செலவாகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
காரின் சாவிகள்
பொதுவாக கார்களுக்கு இரண்டு சாவிகள் வழங்கப்படும். சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் காரின் சாவியிலேயே பல அம்சங்களை கொடுத்திருப்பார்கள். இப்படியாக கொடுக்கும் போது காரின் ஒரு சாவியில் மட்டுமே அந்த அம்சங்கள் எல்லாம் இருக்கும் காரின் இரண்டாவது சாவி சாதாரணமாக தான் இருக்கும். இதுவும் செலவை குறைப்பதற்கா முயற்சி தான். குறிப்பிட்ட வசதிகள் கொண்ட சாவி கொண்ட கார் என்பதற்காக ஒரு சாவி மட்டும் அப்படியான அம்சங்களுடன் கொடுக்கப்படும்.
இப்படியாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் நாம் கவனிக்ககூட முடியாத விஷயங்களில் எல்லாம் சிறிய சிறிய மாற்றங்களை செய்து அதன் மூலம் காருக்கான தயாரிப்பு செலவை குறைக்கின்றனர். இதன் மூலம் காரையும் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும். அந்நிறுவனத்திற்கும் லாபம் கிடைக்கும் என்பதால் இதை கார் தயாரிப்பு நிறுவனங்கள் இதை செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications








