கார் டிசைன் பண்ண இவ்வளவு வேலை பின்னாடி நடக்குதா? கேட்டாலே பிரம்மிப்பா இருக்குதே!

உலகம் முழுவதும் வாகன தயாரிப்பு தற்போது அதிக அளவில் நடக்கிறது. வாகனங்கள் விற்பனையில் மிக முக்கிய பங்கு வகிப்பது அதன் வடிவமைப்பு தான். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ஒரு வாகனத்தின் வடிவமைப்பு எப்படி நடைபெறும் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது. இதை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

இப்படியாக ஒரு வாகனத்தை தயாரிக்கும் போது முதலில் அந்த வாகனம் எந்த கேட்டரிகிரியில் வருகிறது என்பதை முடிவு செய்வார்கள். ஹேட்ச் பேக், செடான், எஸ்யூவி, எம்பிவி இப்படியாக பல முக்கிய செக்மெண்ட்களும், அதன் உட்பிரிவுடன் கூடிய செக்மெண்ட்களும் இருக்கிறது. இதில் எந்த செக்மெண்டை முடிவு செய்வார்கள். அதன் பிறகு பழைய காலங்களில் அதற்கான சேஸிஸ் அமைத்து வாகனங்களை வடிவமைக்க துவங்கிவிடுவார்கள்.

How cars are designed

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி முடியாது. இன்று ஒவ்வொரு டிசைனும் மக்களுக்கு பிடித்தது போல இருக்கிறதா மக்களுக்கு இது குறித்து விமர்சனம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் புதிய வாகனத்தின் சில வடிவமைப்பு அம்சங்களை மட்டும் எடுத்து தற்போது விற்பனையாகி வரும் காரில் அந்தஒர அம்சத்தை மட்டும் அப்டேட்டாக வெளியிட்டு சோதனைசெய்வார்கள். இப்படியாக இந்த டிசைனில் கார் வந்தால் அது சிறப்பான விற்பனையை பெறும் என அந்நிறுவனம் முடிவு செய்த பிறகு தான் டிசைனை இறுதி செய்வார்கள்.

இதற்கு குறைந்தபட்சம் 3-4 ஆண்டுகளாவது ஆகும். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் டாடா நிறுவனம் அவ்னியா காரை இன்னும் வெயியிடவில்லை. ஆனால் அதன் கான்செப்ட் மாடல்களில் உள்ள பல அம்சங்கள் தற்போது விற்பனையாகி வரும் கார்களில் கா முடிகிறது. இதனால் மக்கள் மத்தியில் டிரெண்டை பார்க்கவும் மக்கள் விருப்பங்களை தெரிந்துகொள்ளவும் இப்படியான சோதனைகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்கின்றனர்.

How cars are designed

இதில் ஏதாவது சொதப்பல் ஏற்பட்டால் உடனடியாக காரில் அந்த வடிவமைப்பையோ அம்சத்தையோ நீக்கி விடுகின்றனர். முதலில் இந்த வடிவமைப்பை துவங்கும் போது இது எந்த கேட்டகிரியில் வருகிறது. என்பதை வைத்து அந்த கேட்டகிரியில் அந்த கார் வரவேண்டும் என்றால் சில கட்டுபாடுகள் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் காரை வடிவமைப்பார்கள்.

உதாரணமாக இந்தியாவில் 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட காருக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. ஒரு வாகன தயாரிப்பு நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் காரை தயாரிக்க முடிவு செய்தால் எக்காரணத்தை கொண்டும் வாகனம் 4 மீட்டருக்கு அதிக நீளத்தில் இருக்க கூடாது. அதை மனதில் வைத்து தான் காரின் நீளத்தை முடிவு செய்வார்கள்.

How cars are designed

இந்த காரை தாங்களிடம் ஏற்கனவே உள்ள கட்டுமான தளத்தில் கட்டமைக்க முடியுமா என முதலில் யோசிப்பார்கள். ஏற்கனவே உள்ள கட்டமைப்பு தளத்திற்கு ஏற்றார் போல் இருந்தால் இந்த காரை தயாரிக்க செலவு குறைவாக இருக்கும். சில நேரங்களில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனை யுக்தியை மாற்றி கட்டமைப்பு தளத்தையே உருவாக்கும். அடுத்து அந்நிறுவனம் வெளியிடும் கார்கள் எல்லாம் இந்த தளத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும்.

உதாரணமாக மஹிந்திரா நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்குளோவ் என்ற தளத்தை உருவாக்கி கார்களை தயாரித்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நியூ.ஐக்யூ என்ற பெயரில் புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி இந்த தளத்தில் இவி கார்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னர் கார்கள் எல்லாம் பேட்டரில் வடிவமைக்கப்பட்டன. இன்று வாகனங்களை வடிவமைக்க நவீன சாஃப்ட்வேர்கள் வந்துவிட்டன. அதில் தான் கார்கள் எல்லாம் வடிவமைக்கப்படுகின்றன. இதில் பல்வேறு விஷயங்களை சாஃப்ட்வேர் மூலமே சோதனை செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களின் வடிவமைப்பில் பல்வேறு கட்டங்கள் இருக்கிறது. இது ஒரு மேற்பார்வை கருத்து தான் ஒவ்வொ நிறுவனமும் ஒவ்வொரு முறையை பின்பற்றுகிறது. கார் வடிவமைப்பு பலருக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தும் ஒரு பணி தான். இது குறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 22, 2025, 23:30 [IST]
English summary
How cars are designed know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X