பைக்குல திடீர்ன்னு மைலேஜ் குறைஞ்சுடுச்சா? இந்த பட்டன் தான் காரணமா இருக்கும்! பாதி பேருக்கு யூஸ் பண்ண தெரியல!
சிலருக்கு திடீர்ன்னு அவங்க பைக்குல மைலேஜ் குறைஞ்ச மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். வழக்கத்தை விடச் சீக்கிரமே பெட்ரோல் காலியாகிட்டதா உணருவாங்க. புதுசா பைக் வாங்குனப்ப இருந்த மைலேஜ் இப்ப இல்லன்னு நினைப்பு வரும். இது ஏன் நடக்கிறது? இது வெறும் மனப்பிராந்தியா? அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் உள்ளதா? விரிவாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் டூவீலர் ஓட்டிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் தங்களின் தினந்தோறும் செய்யும் அன்றாட பணிகளுக்கு டூவீலரை தான் அதிகம் நம்பியிருக்கின்றனர். அலுவலகங்களுக்குச் செல்வது, வேலை விஷயமாக வெளியில் செல்வது எல்லாம் டூவீலரில் தான் செய்கின்றனர். சில டூவீலரை நம்பி தான் அவர்களது வேலையையே வைத்திருக்கின்றனர்.

டெலிவரி மேன்கள், கொரியர் மேன்கள் எல்லாம் டூவீலரை நம்பி தான் தொழிலைச் செய்கின்றனர். இப்படியாகத் தினமும் பைக் ஓட்டுபவர்களுக்குப் புதிதாக பைக் வாங்கிய சில ஆண்டுகளுக்குப் பின் தன் பைக் திடீரென அதிகமாக பெட்ரோல் குடிப்பதாக உணருவார்கள். வழக்கத்தை விட அதிகமாக பெட்ரோல் செலவாகும். வழக்கத்தை விட அதிகமாகச் செலவாவதாக உணருவார்கள்.
தினமும் ரூ100க்கு பெட்ரோல் போட்டவர்கள் ரூ150 பெட்ரோல் போட வேண்டிய நிலைக்கு வருவார்கள். பைக்கின் மைலேஜ் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் முறையாக அவ்வப்போது பைக்கிற்கு சர்வீஸ் செய்வார்கள். பைக்கையும் சரியான முறையில் கையாளுவார்கள். இருந்தாலும் மைலேஜ் மட்டும் திடீரென பாதிக்கப்பட்டும். என்ன நடக்கிறது என்பதே புரியாமல் தவிப்பார்கள்.

இதற்கெல்லாம் பின்னாடி காரணமாக இருப்பது உங்கள் பைக்கில் உள்ள சோக்காக இருக்கலாம். இந்த சோக் கார்பரேட்டர் கொண்ட பைக்குகளில் மட்டும் இருக்கும். நவீன ஃப்யூயல் இன்ஜெக்டர் பைக்குகளில் இது இருக்காது. கார்பரேட்டர் என்பது பைக்கின் இன்ஜினிற்குள் காற்றையும் பெட்ரோலையும் கலந்து அனுப்பும் ஒரு கருவி. இது எவ்வளவு பெட்ரோலை அனுப்புகிறது எவ்வளவு காற்றை அனுப்புகிறது என்பதை வைத்துத் தான் பைக்கின் பவர் மற்றும் மைலேஜ் முடிவு செய்யப்படுகிறது.
இந்த கார்பரேட்டரில் இணைக்கப்பட்ட கருவி தான் சோக், இது பெரும்பாலும் குளிர் காலங்களில் அல்லது நீண்ட நாட்களாக பைக்கை எடுக்காத போது பைக்கின் இன்ஜின் உள்ள பெட்ரோல் இல்லாமல் இருக்கும் அப்பொழுது அதிகமாக பெட்ரோலை இன்ஜினிற்குள் தள்ளுவதற்கு இந்த சோக் பயன்படும். இதைப் பயன்படுத்தினால் கார்பரேட்டரில் காற்று குறைந்து பெட்ரோல் அதிகமாக உள்ளே செல்லும்.

இதனால் ஸ்டார்ட் ஆகாமலிருந்த பைக் ஸ்டார்ட் ஆகிவிடும். இந்த பயன்பாட்டிற்காகத் தான் இந்த சோக் வழங்கப்பட்டிருக்கிறது. இதை நம்மில் பலர் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். ஆனால் இதைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டால் உங்கள் பைக்கின் மைலேஜை பாதிக்கும் எமனாகக் கூட மாறிவிடும். சிலர் சோக்கை ஆன் செய்துவிட்டு பைக் ஸ்டார்ட் ஆனதும் இதை ரிவர்ஸ் செய்யாமல் சென்றுவிடுவார்கள்.
இப்படிச் செய்தால் பைக்கின் இன்ஜினிற்குள் வழக்கத்தை விட அதிகமான பெட்ரோல் செல்லும் இதனால் மைலேஜ் பாதிக்கப்படும் அதே நேரம் சிலர் சோக்கை ரிவர்ஸ் செய்யும் போது சரியாகச் செய்யாமல் அறை குறையாக விட்டுவிடுவார்கள். இதன் காரணமாகவும் பெட்ரோல் சிறிதளவு அதிகமாக இன்ஜினிற்குள் செல்லும் இதனால் மைலேஜ் குறையும். பலருக்கு இதைக் கவனிக்காமல் மைலேஜ் பற்றி மட்டும் அதிகம் கவலைப்படுவார்கள்.
அதே போல சோக் ஸ்பிரிங்கில் பிரச்சனை இருந்தாலும் இது போல சோக் மூலம் இன்ஜினிற்குள் அதிகமான பெட்ரோல் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் பைக்கை பராமரிக்கும் போது சோக் சரியாக இருக்கிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதிகமான பெட்ரோல் செலவாக உங்களுக்கு அதிகமான செலவை இழுத்துவிட்டுவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலருக்கு சோக் பயன்பாடு தெரிந்தாலும் அதை முறையாக கையாள தெரிவதில்லை. பைக் ஸ்டார்ட் ஆகாமல் இருக்கும் போது சோக்கைப் பயன்படுத்தி ஸ்டார்ட் செய்துவிட்டு மீண்டும் அதை ரிவர்ஸ் செய்யாமல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். பின்னர் அதிகமாக மைலேஜ் கிடைப்பதில்லை எனப் புகார் தெரிவிக்கின்றனர். இனி சோக்கைப் பத்திரமாகக் கையாள்வது மூலம் மைலேஜ் பாதிக்கப்படுவதைத் தவிர்த்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications









