லாரி டிரைவர்களை கேட்டு பாருங்க... ஹை-ஸ்பீடில் ஓட்டுவதை விட இதை செய்றதுதான் ரொம்ப கஷ்டம்னு சொல்வாங்க!!
பொதுவாகவே கமர்ஷியல் வாகனங்களை ஓட்டுவது என்பது மற்ற கார், வேன்களை ஓட்டுவதை காட்டிலும் கடினமானது என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஒருமுறையாவது பெரிய அளவிலான கனரக லாரி அல்லது பேருந்தை ஓட்டியவர்களுக்கு அந்த கஷ்டம் தெரியும். பொதுவாக, 4-சக்கர வாகனத்தை ஓட்டும்போது டிரைவருக்கு அதிக பிளைண்ட் ஸ்பாட் (Blind Spot) பகுதிகள் இருக்கும். அதாவது, காரில் இருந்து தொலைவில் உள்ள பகுதிகளை கூட பார்க்க முடியும், ஆனால் காருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ நெருக்கமாக இருக்கும் பகுதியை பார்க்க முடியாது. இதனை தான் டிரைவர்களால் பார்க்க முடியாத பிளைண்ட் ஸ்பாட் என்கின்றனர்.
இந்த பகுதிகளை கண்காணிப்பதற்கு இன்றைய கால மாடர்ன் கார்களில் சென்சார்கள் மற்றும் ரேடார்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், கனரக கமர்ஷியல் வாகனங்களில் நிலைமையே வேறு. கார், வேன்களை காட்டிலும் பெரிய அளவிலான கமர்ஷியல் வாகனங்களில் பிளைண்ட் ஸ்பாட் இன்னும் அதிகமாக இருக்கும் என்பது மட்டுமின்றி, லாரி, பேருந்துகளில் இன்னும் அதிகமாக சென்சார்கள், ரேடார்கள் வழங்கப்படுவது இல்லை.

இதனால், டிரைவர் சீட்டில் இருந்து கனரக வாகனத்தை சுற்றிலும் முழுமையாக பார்க்க முடிவதில்லை. இதனாலேயே கனரக வாகனங்களை ஓட்டுவது சிரமம் என்றால், அதனை விட சிரமமானது அவற்றை ரிவர்ஸில் ஓட்டுவது ஆகும். அதுவும், முழு சுமைகளுடன் ரிவர்ஸில் வருவது என்பது நீண்ட வருடங்களாக கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவமிக்க டிரைவர்களால் மட்டுமே முடியும்.
முழு சுமை உடன் ரிவர்ஸில் வரும்போது வாகனத்தின் வெளிப்பக்க மிரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். வாகனத்திற்கு உள்ளே வழங்கப்படும் மிரரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருந்தால், வாகனத்தை ரிவர்ஸில் கொண்டுவருவது மிகவும் கடினம் ஆகும். கனரக லாரிகளில் முழு சுமையை கொண்டு செல்லும்போதும், பேருந்தில் அதிக பயணிகள் உடன் செல்லும்போதும் மிரரை பயன்படுத்துவதில் மட்டுமின்றி, வாகனத்தின் பேலன்ஸ், ஹேண்ட்லிங் கண்ட்ரோல் என எல்லாமே வேறுப்படும்.

வாகனத்தின் அளவு பெரியதாகவும், கூடுதல் எடை உடனும் இருந்தால் வாகனத்தை கண்ட்ரோல் செய்வது இன்னும் கடினமானதாக இருக்கும். இத்தகைய சூழலில் கனரக வாகனத்தை ரிவர்ஸில் கொண்டுவருவதற்கு வெளிப்பக்க மிரர்கள் இரண்டையும் முழுமையாக பயன்படுத்துவது மட்டுமின்றி, வழக்கத்தை காட்டிலும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ரிவர்ஸில் வர முயற்சிக்க வேண்டும்.
உதவிக்கு ஒருவரை வழிக்காட்ட பயன்படுத்துவது இன்னும் நல்லதாக இருக்கும். வாகனத்தை மெதுவாக ஓட்ட வேண்டும் என எண்ணும்போதுதான் ஸ்டேரிங் சக்கரத்தையும், ஆக்ஸலரேட்டர் & பிரேக் பெடல்களையும் மென்மையாக அணுக முடியும். அதிக எடை கொண்ட சுமைகள் உடன் வாகனத்தை ஓட்டும்போது, பிரேக் கொடுத்ததும் வாகனத்தை நிறுத்துவதும், வாகனத்தின் திசையை உடனுக்குடன் மாற்றுவதும் கடினம் ஆகும்.

இதனால்தான், பெரிய அளவிலான லாரிகள் மற்றும் பேருந்துகளை முடிந்த வரையில் குறுகிய சாலைகளுக்கு கொண்டுவராமல், நெடுஞ்சாலைகள் & விரைவுச்சாலைகளில் ஓட்டவே பெரும்பாலான டிரைவர்கள் விரும்புகின்றனர். பிரேக் கொடுப்பது மற்றும் ஸ்டேரிங்கை திருப்புவது என இரண்டையும் ரிவர்ஸில் வரும்போது அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், முழு எடை உடன் கமர்ஷியல் வாகனங்களை ரிவர்ஸில் கொண்டுவரும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
கனரக வாகனங்களில் ரிவர்ஸில் வரும்போதுதான் நிறைய விபத்துகள் நடந்துள்ளன. குறிப்பாக, வேகமாக ரிவர்ஸில் வரும்போது குறுக்கே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. ஆதலால், முழு சுமை உடன் கனரக வாகனங்களில் ரிவர்ஸில் வரும்போது ஆட்டோமேட்டிக்காக ஒலிக்கும் எச்சரிக்கை ஒலி மட்டுமின்றி, கூடுதலாக டிரைவர்களும் சைரன் அடித்தப்படி ரிவர்ஸில் வர முயற்சிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலும் கனரக வாகனங்களில் பயணங்கள் நீண்ட தூரத்திற்கு, நீண்ட நாட்களுக்கு மேற்கொள்ளப்படுவது வழக்கம். இத்தனை நாட்களுக்கு முழு கவனத்துடன் வாகனம் ஓட்டுவது மிகவும் சவாலான காரியம் ஆகும். ஆகையால், முடிந்தவரையில் ரிவர்ஸில் வருவது, அடிக்கடி யு-டர்ன் செய்வது, வளைவுகளில் திரும்புவது போன்றவற்றை மேற்கொள்வதை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications









