பெட்ரோலுக்கு பதிலா வண்டில இதை போடுங்க! எக்கசக்க பணம் மிச்சமாகும்!
இந்தியாவில், மோட்டார் வாகனத் துறை விரைவாக மாற்று எரிபொருள் தொழிற்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு வருகிறது. இந்த மாற்றம் டூ வீலர் மற்றும் 4 வீலர் வாகனங்களுக்கு சேர்ந்து வரும் மாற்றமாக இருகு்கிறது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாட்டில் எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டிற்கு வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார். இதை பயன்படுத்துவால் நாம் எப்படி லாபம் பெற முடியும் என காணலாம் வாருங்கள்.
மாற்று எரிபொருள் என்பது அடிப்படையில் மெத்தனால் அல்லது எத்தனால் கலந்த பெட்ரோல் ஆகும். தற்போது, 20% எத்தனால் கொண்ட E20 பெட்ரோல் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் E50 க்கு மாறுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன, இதன் மூலம் எத்தனால் கலப்பு என்பது இரட்டிப்பாகும். அதாவது பெட்ரோல் போல எத்தனாலும் செயல்படும். அதனால் மாசு வெகுவாக குறையும்.

எத்தனால் அல்லது எத்தில் ஆல்கஹால் (C2H5OH) என்பது சர்க்கரை நொதித்தலிலிருந்து பெறப்படும் ஒரு பயோ எரிபொருள் ஆகும். இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டம் இந்த பயோ எரிபொருளை பெட்ரோலுடன் கலப்பது பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் அளவை குறைக்கிறது. E20 என்பது 80% பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்த கலவை ஆகும்.
E20 இல் உள்ள '20' எண் கலவையில் எத்தனாலின் சதவீதத்தைக் குறிக்கிறது. இந்த எண் அதிகரிக்கும் போது, எத்தனாலின் விகிதமும் அதிகரிக்கும். இறுதியில், எத்தனாலுக்கும் பெட்ரோலுக்கும் 50:50 விகிதத்தை அடைய வேண்டும். இது தான் இந்தியாவின் அடுத்த இலக்காக இருக்கிறது. அந்த அளவிற்கு எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்திய முக்கிய நிறுவனம் ஜியோ-பிபி ஆகும். டெல்லியில், பெட்ரோல் விலை ஏறத்தாழ ரூ.96 ஒரு லிட்டர். 80% பெட்ரோல் மற்றும் 20% எத்தனால் கொண்ட E20 பெட்ரோலுக்கு, இது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.80 ஆக மாறும்.
எத்தனாலை லிட்டர் ரூ.55 க்கு விற்கப்படுகிறது. எனவே, 20% எத்தனால் ரூ.11 ஒரு லிட்டர் செலவாகும். இந்த எண்களை இணைத்தால், E20 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.80 ஆகும், இது வழக்கமான பெட்ரோலை விட ரூ.8.20 குறைவாகும்.

மோட்டார் வாகனத் துறை பல்வேறு பிரிவுகளில் மாற்று எரிபொருள் வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களும் மாற்று எரிபொருள் தொழிற்நுட்பத்துடன் பொருந்தக்கூடிய டூவீலர்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதனால் தற்போது உள்ள வாகனங்களில் இந்த வகை எரிபொருளை பயன்படுத்தலாம்
இந்த மாற்றம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை சப்போர்ட் செய்வது மட்டுமல்லாமல், பாரம்பரியமாக பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களின் மீதான சார்பு குறைவதால் நுகர்வோருக்கு செலவு குறைந்து நன்மைகளையும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனால் கலப்பதை அதிகரிக்க அரசாங்கத்தின் முயற்சி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை ஊக்குவிப்பதற்கும் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முக்கிய முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. இதனால் அரசுக்கு மட்டுமல்ல அதை பயன்படுத்தும் நமக்கும் எரிபொருளுக்கு ஆகும் செலவு குறையும். சுற்றுசூழலுக்கு ஏற்படும் மாசு அளவும் குறையும்.


Click it and Unblock the Notifications









