ஸ்டீயரிங் வீலை எப்படி பிடித்து கார் ஓட்டினால் சேப்டி!- டிப்ஸ்

ஆம். இந்த பழக்கத்தை மாற்றவிடில் இனி எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு ஆபத்து வரலாம் என்பதே நிதர்சனமான உண்மை. ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட கார்களில் நீங்கள் சரியான இடத்தில் ஸ்டீயரிங் பிடித்து ஓட்டாவிட்டால் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடலாம்.
ஸ்டீயரிங்கில் எப்போதும் 180 டிகிரி கோணத்திலேயே பிடித்து ஓட்டுவது நலம். ஸ்டீயரிங் வீலை கடிகாரத்துடன் ஒப்பிட்டு இதை கூறினால் உங்களுக்கு தெளிவாக புரியும்.
கடிகாரத்தில் 9 மற்றும் 3 ஆகிய இடங்களில் அதாவது கைகளை 180 டிகிரி கோணத்தில் பிடித்து ஓட்ட வேண்டும். இல்லையென்றால், 8 மற்றும் 4 ஆகிய இடங்களில் கைகளை ஓட்டுவது பாதுகாப்பானது.
ஸ்டீயரிங் வீலில் 9 மற்றும் 2 ஆகிய இடங்களில் பிடித்து ஓட்டுவது ஆபத்தை விளைவிக்கலாம். ஒருவேளை, விபத்து நிகழ்ந்தால் சட்டென்று ஏர்பேக் விரியும்போது உங்களது கை மற்றும் தலையில் காயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம்.
எனவே, கைகளை சரியான கோணத்தில் பிடித்து ஓட்ட வேண்டும். மேலும்,கைகளை பின்னவும் கூடாது. ஸ்டீயரிங் வீலை மட்டும் திரும்பும் வகையில் கைகளை நகர்த்த வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களது ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும்.


Click it and Unblock the Notifications








