ஓல்டு ஸ்டாக் காரை கண்டுபிடிப்பதற்கான ட்ரிக்:பகுதி-2

பெரும்பாலான நிறுவனங்கள் 17 எழுத்துக்கள் மற்றும் எண்கள் கொண்ட வின் நம்பர் குறியீட்டை பயன்படுத்துகின்றன. ஆனால், சில நிறுவனங்கள் அதிக வின் நம்பர்களை பயன்படுத்துகின்றன.
ஆனால், மாதம் மற்றும் ஆண்டு குறியீட்டு எண் ஒன்றே என்பதால் முதல் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும், மாத, ஆண்டு குறியீட்டு எண்களை கையில் வைத்துக்கொண்டு, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வின் நம்பரை சரி பார்த்துக்கொள்ளலாம்.
மஹிந்திரா:மஹிந்திரா பயன்படுத்தும் மொத்தம் 17 எழுத்து மற்றும் எண்களில் 10வது எழுத்து வருடத்தையும், 12 வது எழுத்து மாதத்தையும் குறிக்கும். உதாரணமாக, 10 வது எழுத்து ஏ என்றும், 12 வது எழுத்து கே என்றும் ஆங்கில எழுத்துக்களில் இருந்தால் 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் தயாரிக்கப்பட்ட கார்.
செவர்லே: செவர்லே பயன்படுத்தும் மொத்தம் 17 எழுத்து மற்றும் எண்களில் 7 வது எழுத்து மாதத்தையும், 9 வது எழுத்து வருடத்தையும் குறிக்கும்.
ஹோண்டா கார்ஸ்: மொத்தம் 17 எழுத்து மற்றும் எண்களில் 9 வது எழுத்து மாதத்தையும், 10 வது ஆங்கில எழுத்து வருடத்தையும் குறிக்கும்.
வோக்ஸ்வேகன்: வோக்ஸ்வேகன் பயன்படுத்தும் முறையில் சிறிய மாற்றம் இருக்கிறது. வது வின் எழுத்து மாதத்தையும், 10 வது எழுத்து காரின் மாடல் வருடத்தையும் குறிக்கும்.(சில கார் நிறுவனங்கள் புதிய மாடல்களை ஆண்டு பெயரை குறிப்பிட்டு மாடலை அழைக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி, 2012ம் ஆண்டு மாடல் என்று குறிப்பிடப்படுகிறது. இதேபோன்று, புதிய மாடலை பிரத்யேகமாக குறிப்பிடுகின்றன). அதேவேளே, தயாரிக்கப்பட்ட ஆண்டுக்கு வரிசையில் உள்ள 5 மற்றும் 6 வது எண்களை வைத்து கண்டுபிடிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு மொத்தமுள்ள 17 எழுத்து எண்கள் கொண்ட வின் நம்பர் வரிசையில் ஐந்தாவது எண் 1 என்றும் 6வது எண் 2 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இது 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல்.
ஸ்கோடா ஆட்டோ: ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் 6வது எழுத்தை மாதத்திற்கும், 10வது எழுத்தை ஆண்டை குறிப்பதற்கும் பயன்படுத்துகிறது. வின் வரிசையில் 6வது எழுத்து சி என்றும் 10 வது எழுத்து பி ஆங்கில எழுத்தாக இருந்தால் அது 2011ம் ஆண்டு மார்ச்சில் தயாரிக்கப்பட்ட கார்.
ஃபியட்: ஃபியட் நிறுவனம் ஆண்டு குறியீட்டுக்கு இரண்டு ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்துகிறது. குழப்பி்ககொள்ள வேண்டாம். ஃபியட் நிறுவனம் 20 எழுத்துக்கள் மற்றும் எண்களை வின் நம்பராக பயன்படுத்துகிறது. வின் வரிசையில் 18 வது எழுத்தை மாதத்திற்கும், 19 மற்றும் 20வது இடத்தில் உள்ள எழுத்துக்கள் வருடத்தையும் குறிக்கும்.
ஆண்டு குறியீட்டு எண்களை கொடுத்துள்ளோம். இதை வைத்து நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளலாம். NZ என்றால் 2010ம் ஆண்டுக்கும், MZ என்று இருந்தால் 2011ம் ஆண்டுக்கும், LZ என்றால் 2012ம் ஆண்டையும் குறிக்கும்.
உதாரணத்திற்கு 18 வது இடத்தில் எச் ஆங்கில எழுத்தும், எம்இசட் என்று இருந்தால் ஆகஸ்ட் மாதம் 2011ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார் என்று தெரிந்துகொள்ளலாம்.
அடுத்த பகுதியில் மாருதி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் வின் குறியீட்டு விபரங்களை பார்க்கலாம்.
( ஆண்டு மற்றும் மாத குறியீட்டை காண முதல் பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)


Click it and Unblock the Notifications








