ஏறி உட்காந்து போயிட்டே இருக்காதீங்க! பைக்குல நிப்பாட்டாம எவ்வளவு தூரம் போகலாம்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க!
ஒரு பைக்கை எவ்வளவு நேரம் நிறுத்தாமல் ஓட்டலாம்? எவ்வளவு தூரம் வரை ஓட்ட முடியும்? தொடர்ந்து பைக் இன்ஜின் ஓடிக்கொண்டே இருந்தால் என்னவாகும்? இதுகுறித்த விரிவான விபரங்களை வரிசையாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கார்களை விட பைக்குகள் தான் அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியா மக்கள் குறுகிய தூர பயணத்திற்கும் டிராஃபிக்கில் பயணிப்பதற்கும் பைக் தான் ஏற்ற வாகனமாக இருப்பதாகக் கருதுகின்றனர். இதனால் இந்தியாவில் பைக்குகள் கார்களை விட அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகிறது. பைக்குகள் குறுகிய தூரப் பயணத்திற்குச் சிறந்தது என்றாலும் சிலர் நீண்ட தூரப் பயணத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.

பைக்குகளில் நீண்ட தூரத்திற்கு என வடிவமைக்கப்பட்ட க்ரூஸர் ரக பைக்குகள் இருக்கிறது. இது நிச்சயம் கார்களை போல நீண்ட தூரம் பயணிக்கும்படியான இன்ஜின் மற்றும் வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால் குறுகிய தூர பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட பைக்கில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? இ்ந கேள்வி பலருக்கு இருக்கிறது.
இது பயணிக்கும் ரைடர் மற்றும் பைக்கின் திறனைப் பொருத்து மாறுபடும், முதலில் பைக்கின் திறனைப் பற்றி காணலாம். இன்று குறுகிய தூரப் பயணத்திற்கு 100-150 சிசி பைக்குகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றால் அதிகபட்சம் 50 கி.மீ அல்லது 1 மணிநேர தொடர் இன்ஜின் இயக்கம் ஆகியவை தான் கணக்காக எடுக்க வேண்டும். இதில் எது முதலில் வருகிறதோ அப்பொழுது பைக்கை ஓரமாக நிறுத்தி இன்ஜினை ஆஃப் செய்ய வேண்டும். ஒரு 5 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பயணிக்கலாம்.

அதே போல 150-200 பைக்குகளாக இருந்தால் 100 கி.மீ வரை தொடர்ந்து பயணிக்கலாம். ஆனால் 100 கி.மீ பயணத்திற்குப் பிறகு ஒரு 10 நிமிடம் நிச்சயம் இன்ஜினை ஆஃப் செய்து பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும். 10 நிமிடத்திற்குப் பிறகு தாராளமாக மீண்டும் பணிக்கலாம். இப்படியாக ஒரு சிலர் ஒரே நாளில் 400-500 கி.மீ வரை பயணிக்கின்றனர். இதுவும் சாத்தியம் தான் பைக்குகளில் தாராளமாக அப்படிப் பயணிக்கலாம்.
250 சிசி அதிக திறன் கொண்ட இன்ஜின்கள் இன்னும் அதிக தூரம் தாராளமாகச் செல்லும் திறன் கொண்டவை தான் ஆனால் மனித உடலுக்கு அவ்வளவு திறன் கிடையாது. பைக்கில் செல்லும் போது ஒவ்வொரு 100 கி.மீ ஒரு முறை ஒரு சின்ன பிரேக் எடுத்துவிட்டுப் பயணித்தால் தான் பிரச்சனை இருக்காது. நீண்ட நேரம் ஒரே போசிஷனில் அமர்ந்து அமர்ந்தால் இடுப்பு, கால், முதுகு வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவ்வப்போது ரெஸ்ட் எடுத்து எடுத்துப் பயணிப்பது தான் சிறந்தது.

அதே நேரம் பைக்கையும் நீண்ட தூரம் இன்ஜினிற்கு ரெஸ்ட் கொடுக்காமல் பயணித்தால் இன்ஜின் இன்ஜின் வாழ்நாளையும் பாதிக்கும். இது மட்டுமல்ல இன்ஜின் தொடர்ந்து ஓடினால் திடீரென இன்ஜின் அதிக சூடு காரணமாக ரிப்பேர் ஆகும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு 100 கி.மீ பயணத்திற்கு ஒரு முறை ரெஸ்ட் எடுத்துவிட்டுப் பயணிப்பது தான் பெஸ்ட்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலர் இந்தியா முழுவதும் பைக்கிலேயே பயணம் செய்கின்றனர். அவர்களும் ஒவ்வொரு 100-150 கி.மீக்கு ஒரு முறை ரெஸ்ட் எடுத்த பயணிக்கின்றனர். இதனால் இந்தியா முழுவதும் கூட தொடர்ந்து பயணிக்கின்றனர். இதனால் அவ்வப்போது ரெஸ்ட் எடுத்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நீங்கள் பைக்கில் பயணிக்கலாம்.


Click it and Unblock the Notifications









