கார்களில் சன் பிலிமுக்கு தடை: நீக்குவதற்கு எவ்வளவு செலவாகும்?
வரும் 19ந் தேதி முதல் கார்களில் சன் பிலிம் எனப்படும் கலர் பேப்பர்களை ஒட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வருகிறது. தடையை மீறினால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, கார்களின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பேப்பர்களை நீக்கும்படி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். பெங்களூர் போலீசார் ஒருபடி மேலே போய் இலவசமாகவே கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பேப்பர்களை நீக்கித் தருகின்றனர்.

இந்த நிலையில், கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பேப்பர்களை நீக்குவதற்கு கார்களுக்கு தக்கவாறு ரூ.500 முதல் ரூ.1,000 வரை செலவாகும் என சென்னையிலுள்ள சன் பிலிம் ஒட்டும் ஸ்டிக்கர் கடையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒரு காரில் சன் பிலிமை நீக்குவதற்கு 2 மணி நேரம் ஆகும் என்றும் தெரிவிக்கின்றனர். தடை அமலுக்கு வரும்போது சன் பிலிமை நீக்குவதற்கான கட்டணத்தை ஸ்டிக்கர் கடையினர் உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, முன்கூட்டியே சன் பிலிமை நீக்கிக்கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








