காரில் ஓவர்டேக் செய்வது எப்படி? வழிகாட்டு முறைகள்

எனவே, கார் ஓட்டும்போது சில நடைமுறைகளை மனதில் நிறுத்தி ஓவர்டேக் செய்வது அவசியம். இதற்காக, மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய சில எளிய வழிமுறைகளை காணலாம்.
ஓவர்டேக் செய்வதற்கு முன் எதிரில் வாகனங்கள் வரவில்லை என்பதையும், வளைவுகள் இல்லாததையும் உறுதி செய்யுங்கள்.
உங்களது காருக்கு போதிய இடம் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்யுங்கள். போய்விடலாம் என்று அசட்டு நம்பிக்கை வேண்டாம்.
முன்னால் செல்லும் வாகனத்தின் வேகத்தை கணித்து நிதானமாக ஓவர்டேக் செய்யுங்கள். அதைவிட முக்கியம் உங்களது காரின் பவரை பொருத்து ஓவர்டேக் செய்யவேண்டும்.
முன்னால் செல்லும் வாகனத்தின் டிரைவருக்கு ஓவர் டேக் செய்வதை ஹாரன் அடித்தோ அல்லது ஹெட் லைட் போட்டு காட்டியோ உணர்த்தி விடுவது அவசியம்.
குறிப்பாக, இரவில் ஓவர்டேக் செய்யும்போது அவசரம் காட்டக்கூடாது. தூரத்தில் வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தால் கூட ஓவர்டேக் செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம். ஏனெனில், இரவில் எதிரில் வாகனத்தின் வேகம் மற்றும் தூரத்தை துல்லியமாக கணிப்பது சிரமம்.
ஓவர்டேக் செய்யும்போது முன்னால் செல்லும் வாகனத்துடன் போதிய இடைவெளி விட்டே செல்லுங்கள்.
மலைப்பாங்கான சாலை, நெடுஞ்சாலை என எந்த சாலையில் சென்றாலும் ஓவர்டேக் செய்யும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் சமிக்ஞைகளை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.
எதிரில் வாகனங்களை மட்டுமல்ல, ஓவர்டேக் செய்யும் போது பின்னால் வரும் வாகனங்களின் மீதும் ஒரு கண் வையுங்கள். ரியர் வியூ மிரரில் வாகனங்கள் எதுவும் பின்னால் வரவில்லை என்பதையும் உறுதி செய்வது அவசியம்.
சில சமயம் எக்ஸ்ட்ரா லாங் வெகிக்கிள் அதாவது, 13 மீட்டர் வரை நீளம் கொண்ட டிரக்குகளை ஓவர் டேக் செய்ய கூடுதல் நேரம் தேவைப்படும். எனவே, அதிக நீளம் கொண்ட வாகனங்களை ஓவர் டேக் செய்யும்போது அதிக கவனம் தேவை.
ஓவர் டேக் செய்யும்போது உடனடியாக இடதுபக்கம் வந்துவிட வேண்டாம். பின்னால் வரும் வாகனத்துக்கு போதிய இடைவெளி கிடைத்துவிட்டதை உறுதி செய்து இடது பக்கத்திற்கு வர வேண்டும்.
ஓவர்டேக் செய்யும்போது எதிரில் வாகனங்கள் வந்துவிட்டால் ஹெட்லைட் மற்றும் இண்டிகேட்டர் லைட்டுகளை போட்டு எச்சரிக்கை செய்யுங்கள்.
இதேபோன்று, ஓவர்டேக் செய்தவுடன் பின்னால் வரும் வாகனத்திற்கு வழி விட மறக்காதீர். அடுத்தடுத்த வாகனங்களை முந்தும்போதும் மிக மிக நிதானமாக செல்வது அவசியம்.
மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்தால் உங்கள் பயணம் இனிதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


Click it and Unblock the Notifications








