உருளைக்கிழங்கு ஒன்னு போதும், கார் கண்ணாடியைச் சுத்தம் பண்ண காஸ்ட்லியான பொருட்கள் பண்ணாததைக் கூட இது பண்ணும்!

நாம் தினந்தோறும் சாப்பிடப் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு, கார்களில் காஸ்ட்லியான பொருட்கள் கூடச் செய்ய முடியாத ஒரு விஷயத்தைச் செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பலருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. பலர் இந்த பிரச்சனையை உருளைக்கிழங்கை வைத்துச் சரி செய்ய முடியும் என்று தெரியாமலேயே இருக்கின்றனர்.

கார்களில் செல்லும் போது பலருக்கு கார் கண்ணாடிகளில் பனிபடரும் பிரச்சனை இருக்கும். அல்லது மழைக் காலங்களில் மழை நீர் மொத்தமாக நிற்கும் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சனை புதிய கண்ணாடிகளில் இல்லை என்றாலும் கார் வாங்கி சில ஆண்டுகள் ஆன பின்பு கார் நீண்ட நாட்களாக வெயிலில் எல்லாம் நின்று கண்ணாடியின் தன்மை குறைந்த பிறகு இந்த பிரச்சனை வரலாம்.

உருளைக்கிழங்கு ஒன்னு போதும், கார் கண்ணாடியைச் சுத்தம் பண்ண காஸ்ட்லியான பொருட்கள் பண்ணாததைக் கூட இது பண்ணும்!

இது காரின் விண்ட் ஷீல்டு கண்ணாடி மட்டுமல்ல சைடு மிரரிலும் இந்த பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சனைக்கு நம் வீட்டில் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு மூலமே ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். இப்படியாகக் கண்ணாடியில் பனி படராமல் இருக்கவும், தண்ணீர் நிற்காமல் இருக்கவும் உருளைக்கிழங்கை முதலில் பாதியாக வெட்ட வேண்டும்.

பின்னர் அதைக் கண்ணாடியில் தேய்தால் உருளைக்கிழங்கில் உள்ள வளவளப்பு கண்ணாடியில் அப்பிக்கொள்ளும். அதனால் தண்ணீர் அதில் தேங்கி நிற்பது, அல்லது பனி படர்வது போன்ற பிரச்சனை இருக்காது. பலருக்கு இந்த விஷயம் தெரியாது. கண்ணாடி இப்படி ஆனதும், பல காஸ்ட்லியான சொல்யூஷனை வாங்கி காரின் கண்ணாடியைத் துடைப்பார்கள். ஆனால் அதை எல்லாம் விட நல்ல பலனை இந்த உருளைக்கிழங்கு தந்துவிடும்.

அதே போல பனி காலங்களில் காரின் உள்ள கண்ணாடியில் துளி துளியாகத் தண்ணீர் நிற்பதைத் தவிர்க்க முந்தைய நாள் இரவே காரின் கண்ணாடியில் உட்புறமாக இந்த உருளைக்கிழங்கை வெட்டி தடவி வைத்தால் பனி படர்வதைத் தவிர்க்க முடியும். உருளைக்கிழங்கில் உள்ள சுகர் போன்ற ஒரு திரம் கண்ணாடிக்கும் அதில் பனிபடவர்தற்கும் இடையே செயல்பட்டு கண்ணாடியைப் பாதுகாக்கும்.

அதே போல மழைக் காலங்களில் இதை கார் கண்ணாடியின் வெளிப்புறமாக தேய்தால் மழை நீர் நேராகக் கண்ணாடியில் வழிந்தாலும் அதில் நிற்காமல் வழிந்து ஓடும். இதுவும் உருளைக்கிழங்கில் உள்ள ஒரு வளவளப்பு தன்மை தான் கண்ணாடியில் தண்ணீரைத் தேங்க விடாமல் இதை வழங்குகிறது. வைப்பர் வேலை செய்யாத நேரங்களில் இதை தாராளமாகச் செய்யலாம்.

இந்த உருளைக்கிழங்கை விண்ட் ஷீல்டு கண்ணாடி மட்டுமல்லாமல் சைடு மிரரிலும் தேய்துவிட்டால் மழை நேரங்களில் அதிலும் தண்ணீர் தேங்காது, அடை மழையில் சென்றாலும் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். சிலர் உருளைக்கிழங்கிற்குப் பதிலாக வெங்காயத்தையும் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஒரு விதத்தில் சிறப்பான பலனை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன : இப்படியாக உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தைப் பயன்படுத்துவது ஒரு தற்காலிக தீர்வு மட்டும் தான் நிரந்தரமாகக் காரை உரியப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு தான் சிறந்தது. காரில் விண்ட்ஷீல்டு வேலை செய்யவில்லை என்ற சூழ்நிலையில் இப்படியாகப் பயன்படுத்தலாம். மற்றபடி காரை ஒவ்வொரு முறையும் சரியாகத் துடைத்து வைத்துப் பராமரித்தாலே சிறப்பான ஃபெர்பாமென்ஸை பெற முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 24, 2023, 18:30 [IST]
English summary
How potato used to keep car window fog free
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+