கார் டயர்களில் கூட சென்சார் வந்துடுச்சுனு சொன்னா நம்புவீங்களா? நன்மை என்னானு தெரிஞ்சா எல்லாரும் வாங்க போறாங்க!
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஸ்மார்ட் டயர்கள் எனப்படும் சென்சார் பொருத்தப்பட்ட டயர்கள் காற்றழுத்தம், வெப்பநிலை மற்றும் தேய்மானம் போன்ற முக்கியமான தகவல்களை நிகழ்நேரத்தில் வழங்குகின்றன. இது, டயர் கோளாறுகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க உதவுகிறது. இந்தியாவில், இந்தத் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு தற்போதைக்கு ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது என்றாலும், அரசின் பாதுகாப்பு முயற்சிகளால் தற்போது இது பிரபலமடைந்து வருகிறது.
ஸ்மார்ட் டயர்கள் எவ்வாறு விபத்துகளைத் தடுக்கின்றன? என்றால், ஸ்மார்ட் டயர்களில் உள்ள தொழிற்நுட்பங்களால் இயங்கும் சென்சார்கள், டயரின் நிலை மற்றும் சாலை மேற்பரப்பைத் தொடர்ந்து கண்காணித்து, இந்தத் தரவை வயர்லெஸ் முறையில் கார் டாஷ்போர்டுக்கோ அல்லது காரின் உரிமையாளரின் ஸ்மார்ட்போன் செயலிக்கோ அனுப்புகின்றன.

இதில் பல முக்கிய செயல்பாடுகள் அடங்குகின்றன. அவையாவன, நிகழ்நேர கண்காணிப்பு: சென்சார்கள் டயரின் காற்று அழுத்தம் மற்றும் உட்புற வெப்பநிலை போன்ற முக்கியமான விவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதனை வாகன ஓட்டியிடம் தெரிவிப்பதன் மூலம் பாதுகாப்பான வாகன செயல்பாட்டிற்குத் துணை புரிகின்றன.
முன்கூட்டியே எச்சரிக்கை: குறைவான அல்லது அதிக காற்றழுத்தம், காற்று கசிவு மற்றும் அதிக வெப்பம் போன்ற சிக்கல்களினால் விபரீதமான நிலையை அடைவதற்கு முன்பே சென்சார்-பொதிக்கப்பட்ட டயர்கள் ஓட்டுநர்களை உடனடியாக எச்சரிக்கும். இதனால் திடீர் டயர் வெடிப்புகள் போன்ற அபாயகரமான சூழ்நிலைகள் தவிர்க்கப்படுகின்றன.

முன்கூட்டிய பராமரிப்பு: தேய்மான முறைகள் மற்றும் டயரின் ஆழத்தை கண்காணிப்பதன் மூலம், பராமரிப்பு எப்போது தேவைப்படும் என்பதை கணினி கணிக்கிறது. இது சரியான நேரத்தில் பராமரிப்பைச் செய்ய உதவுகிறது. மேலும், மேற்பார்வையாக மேற்கொள்ளப்படும் சோதனைகளில் கவனிக்கப்படாமல் போகக்கூடிய கோளாறுகளையும் இத்தகைய டயர்கள் தடுக்கின்றன.
சாலை நிலை கண்டறிதல்: மேம்பட்ட சென்சார்கள் சாலை மேற்பரப்பு நிலைகளையும் (எ.கா: ஈரமான, பனிக்கட்டி அல்லது கரடுமுரடான பகுதிகள்) கண்டறியும் திறன் கொண்டவையாக உள்ளன. இந்தத் தகவலை வாகனத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு (ABS அல்லது வைகல் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் - VSC) அல்லது விர்டியூவலாக இணைக்கப்பட்ட பிற வாகனங்களுக்கோ (V2X தொடர்பு) அனுப்புகிறது. இது வாகனத்தை ஓட்டும் இயக்கவியல் மற்றும் வேகத்தில் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட வாகனக் கட்டுப்பாடு: ஸ்மார்ட் டயர்களில் இருந்து வரும் தரவுகளை மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளுடன் (ADAS) ஒருங்கிணைக்க முடியும். இது பிரேக்கிங் திறன், நிலைத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த வாகன ஹேண்ட்லிங்கை மேம்படுத்துகிறது. குறிப்பாக ஆபத்தான சூழ்நிலைகளில் இது பெரிதும் உதவுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்பான மற்றும் சிறப்பான போக்குவரத்துக்கான ஒரு முக்கிய படியாகும். ஜே.கே. டயர் (JK Tyre) மற்றும் சியட் (CEAT) போன்ற முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் சொந்த ஸ்மார்ட் டயர் தயாரிப்புகளுடன் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளன. இந்திய அரசு "விஷன் ஜீரோ ஆக்சிடென்ட்" (Vision Zero Accident) போன்ற திட்டங்களின் கீழ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஊக்குவிக்கிறது.

வர்த்தக வாகனங்களுக்கு இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து நிறுவனங்கள் (Fleet owners) இந்தத் தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக்கொள்கின்றன. சென்சார் பதியப்பட்ட ஸ்மார்ட் டயர்களைப் பயன்படுத்தி வாகனத்தின் செயல்பாட்டை ரிமோட் மூலம் கண்காணிக்கின்றன. இது செலவுகளைக் குறைப்பதுடன், செயலிழப்புகளால் ஏற்படும் நேர விரயத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த வாகன பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









