கண்ணாடியை பாத்துட்டு இஷ்டத்துக்கு ஓவர்டேக் பண்ணாதீங்க! இந்த விஷயத்துல கவனமா இருங்க!

இந்தியாவில் சாலை விபத்து சகஜமான ஒரு விஷயமாகிவிட்டது. மிகச் சிறப்பான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டாலும் அங்கும் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் இரு வழிகளுக்கும் தனித்தனி பாதைகள் இருக்கும் பட்சத்தில் விபத்துக்கள் ஏன் நடக்கிறது என்ற கேள்வி வருகிறது. ஒரே திசையில் செல்லும் வாகனங்கள் கூட மோதிக்கொள்கின்றன.

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கிறீர்கள் ஒரு வாகனத்திற்குப் பின்னால் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது முன்பக்கம் செல்லும் வாகனத்தில் உள்ள டிரைவருக்கு நீங்கள் வருவது கண்ணாடி மூலம் மட்டும் தான் தெரியவரும் அவர் அவர் கண்ணாடி கவர் செய்யும் பகுதிக்குள் பயணித்தால் டிரைவருக்கு நீங்கள் வருவது தெரியும்.

கண்ணாடியை பாத்துட்டு இஷ்டத்துக்கு ஓவர்டேக் பண்ணாதீங்க! இந்த விஷயத்துல கவனமா இருங்க!

ஒரு வேளை நீங்கள் கண்ணாடி கவர் செய்யாத பகுதியில் பயணித்தால்? நிச்சயம் அது முன்பக்கம் போகும் வாகனத்தின் டிரைவருக்கு தெரியாது அவர் நீங்கள் வருவது தெரியாமல் லேனை மாற்ற முயற்சி செய்தால்? அவ்வளவு தான் இரு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளாக வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இப்படியாக டிரைவருக்கு தெரியாத பகுதியை பிளைட் ஸ்பாட் எனக் கூறுவார்கள். வாகனத்தின் பில்லர், டோர் இருக்கும் பகுதிகள் பிளைன்ட் ஸ்பாட்டாக கருதப்படும். இந்த பிளைன்ட் ஸ்பாட் பகுதி காருக்கு கார் ஏன் டிரைவரின் உயரம் மற்றும் சீட் போசிஷனவிற்கு தகுந்தார் போலக் கூற மாறுபடும். ஆனால் பெரும்பாலும் காரின் பின்பக்கம் பக்கவாட்டு பகுதி பெரும்பாலான கார்களுகு்கு பிளைண்ட் ஸ்பாட்டாக இருக்கிறது. இந்த பிளன்ட் ஸ்பாட்டால் ஏற்படும் விபத்துக்களை எப்படித் தடுக்க முடியும் எனக் காணலாம் வாருங்கள்.

கண்ணாடி போசிஷன்

நீங்கள் பயணத்தைத் துவங்கும் முன்பே காரின் பக்கவாட்டு கண்ணாடி மற்றும் சென்டர் கண்ணாடி ஆகியவற்றைச் சரியாக முடிந்தளவிற்கு அதிகமாகக் கவர் செய்யும்படி செட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிளைன்ட் ஸ்பாட்

ஒவ்வொரு காருக்கும், ஒவ்வொரு ஓட்டுநருக்கும் பிளைன்ட் ஸ்பாட் மாறுபடும். அதனால் நீங்கள் காரை ஸ்டார்ட் செய்ய துவங்கும் முன்பு டிரைவர் சீட்டில் அமர்ந்த பின்பு உங்களுக்கு பிளைன்ட் ஸ்பாட் எது எனத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். கார் கண்ணாடியில் எவ்வளவு தூரம் தெரிகிறது எது எல்லாம் தெரியவில்லை என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது சிறந்தது.

ஒரு நொடி காத்திருப்பு

காரில் வேகமாகச் செல்லும் போது ஒரு லேனிலிருந்த மற்றொரு லேனிற்கு மாறும் போது தான் இந்த பிளைன்ட் ஸ்பாட் பிரச்சனை காரணமாக விபத்து நடக்கிறது. அதனால் நீங்கள் காரில் லேன் மாறப்போகிறீர்கள் என்றால் சிக்னலை போட்டு ஓரிரு நொடி காத்திருந்தால் பிளைன்ட் ஸ்பாட்டில் ஏதாவது வாகனம் இருந்தால் அது உங்கள் பார்வைக்கு வந்துவிடும் இதனால் விபத்துக்கள் தவிர்க்கலாம்.

தலையைத் திருப்பு செக் செய்யுங்கள்

என்னதான் நீங்கள் காரில் கண்ணாடியைப் பார்த்து பின்னால் வரும் காரை கணித்துவிட்டாலும் ஒரு நொடி பின்னால் திரும்பி உங்கள் காருக்கு பக்கவாட்டு பகுதியில் ஏதேனும் கார் வருகிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். இதனால் ஏதாவது வாகனம் உங்கள் பிளைன்ட் ஸ்பாட்டில் இருந்தாலும் ஒரு நொடியில் நீங்கள் பார்த்துச் சுதாரித்துவிடலாம்.

தொழிற்நுட்ப பயன்பாடு

இன்று வாகனங்களில் பிளைன்ட் ஸ்பாட் அளவை குறைக்க அல்லது இல்லாமல் ஆக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சென்சார் உள்ளிட்ட பல தொழிற்நுட் அம்சங்களை பொருத்தி வருகிறது. கண்ணாடியை மட்டும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொழிற்நுட்ப அம்சங்களை உங்கள் வாகனங்களில் பொருத்துவது மூலம் இந்த பிளைன்ட் ஸ்பாட் காரணமாக நடக்கும் விபத்தைத் தவிர்க்க முடியும்.

மற்ற வாகனத்தின் பிளைட் ஸ்பாட்

உங்கள் வாகனத்திற்கு எப்படி பிளைன்ட் ஸ்பாட் இருக்கிறதோ அதே போல சாலையில் உள்ள மற்ற வாகனங்களுக்கும் பிளைன்ட் ஸ்பாட் இருக்கிறது. நீங்கள் சாலையில் செல்லும் போது மற்ற வாகனத்தின் பிளைன்ட் ஸ்பாட்டில் நீங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களைக் கவனிக்காமல் அந்த வாகன ஓட்டுநர் லேனை மாற்ற முயன்றால் உங்கள் வாகனமும் சேர்ந்து தான் விபத்தில் சிக்கும்.

டூவீலர்

இந்த பிளைன்ட் ஸ்பாட் பிரச்சனையில் அதிகம் சிக்குவது டூவீலர் தான் பெரும்பாலும் கார்கள் பெரியதாக இருப்பதால் எப்படியாவது ஸ்பாட் பகுதிக்கு வந்துவிடும். ஆனால் டூவீலர்கள் சிறியதாக இருப்பதால் நீண்ட தூரம் ஒரு காரின் பிளைன்ட் ஸ்பாட் பகுதியிலேயே பயணிக்க முடியும் இதனால் டூவீலரில் நீங்கள் சென்றாலும் கவனமாக இருங்கள், காரில் சென்றாலும் டூவீலர் ஓட்டிகளிடம் கவனமாக இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 7, 2023, 18:30 [IST]
English summary
How to avoid blind spot accidents in highways
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+