இந்த காரை வாங்க ரூ15-16 லட்சம் மிச்சம் பண்ணலாமா? எப்படி தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகங்கள் பிரபலமாகி வருகிறது. சுற்றுசூழல் காரணமாகும், செலவு குறைவு என்ற காரணத்திற்காகவும் பிரபலமாகி வருகிறது. மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்க ஊக்கப்படுத்தி வருகிறது. சமீப காலமாக எலெக்ட்ரிக் காரை வாங்க நினைப்பவர்களுக்கு எலெக்ட்ரிக் கார் காசு குறைவா? அல்லது பெட்ரோல் கார்கள் செலவு குறைவா? என்ற குழப்பம் இருக்கும். இது குறித்து வல்லுநர்கள் சொல்லும் விளக்கத்தை காணலாம் வாருங்கள்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை அதிகமாக உள்ளது. ஆனால் அதை வாங்கினால் பெட்ரோல் செலவு மிச்சமாகும் இதனால் இவி லாபம் என சிலர் சொல்கிறார்கள். இவி கார்களில் சில ஆண்டுகளில் பேட்டரி வீணாகிவிடும் மொத்தமாக கணக்கிட்டால் பெட்ரோல் லாபம் என சிலர் சொல்கிறார்கள். சிஎன்ஜி அதிக மைலேஜ் தருகிறது. விலையும் குறைவு அதனால் சிஎன்ஜி லாபம் என சிலர் சொல்கிறார்கள். உண்மையில் எது லாபம்? வல்லுநர்கள் சொல்வதை கேட்கலாம் வாருங்கள்.

Electric VS Petrol Car

அலையன்ஸ் ஃபார் எனர்ஜி எஃபிஸியன்ட் எகானமி என்ற அமைப்பு சார்பில் அன்மோல் ஜெயின் மற்றும் டாக்டர் சதாம் உசேன் ஆகியோர் நடத்திய ஆய்வில் ஆரம்பத்தில் எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் போது அது பெட்ரோல் காரை விட ரூ5-6 லட்சம் அதிகமாக இருக்கும். அல்லது சிஎன்ஜி காரை விட ரூ3-4 லட்சம அதிகமாக இருக்கும். ஆனால் நீண்ட கால பயன்பாட்டில் கதை வேறாக இருக்கும் என கூறுகின்றனர்.

இவர்கள் இதற்காக டாடா நிறுவனத்தின் டிகோர் காரை ஆய்விற்காக எடுத்துக்கொள்கின்றனர். இதில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் இவி ஆகிய 3 ஆப்ஷன்கள் உள்ளன. நீங்கள் தனி நபராக இந்த காரை இயக்குகிறீர்கள் என்றால் ஒரு நாளுக்கு 50 கி.மீ வரை பயணம் செய்வீர்கள். இதை நீங்கள் 10 ஆண்டுகள் செய்தால் 1.5 லட்சம் கி.மீ பயணம் செய்திருப்பீர்கள். இதை கணக்கிட்டால் நீங்கள் பெட்ரோல் சிஎன்ஜி காரில் செய்யும் செலவை விட இவியில் ரூ1 லட்சம் குறைவாக செலவு செய்வீர்கள் என கணித்துள்ளன்.

இதுவே கமர்ஷியல் பயன்பாட்டிற்கு நீங்கள் வாகனம் வாங்கி அதை டாக்ஸியாக பயன்படுத்தினாலும் ஒரு நாளுக்கு 180 கி.மீ பயணிக்கிறீர்கள் என்றால் 10 ஆண்டுகளில் நீங்கள் 5,40,000 கி.மீ பயணம் செய்திருப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் ரூ15-16 லட்சம் கூட மிச்சப்படுத்த முடியும். அது எப்படி 1.5 லட்சம் கி.மீக்கு 1 லட்சம் மிச்சப்படுத்தக்கூடிய இடத்தில் 5.40 கி.மீ க்கு எப்படி 15-16 லட்சம் மிச்சமாகும் என நீங்கள் கேட்கலாம்.

பெட்ரோல், சிஎன்ஜி காரை பொருத்தவரை காரை நீங்கள் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் பராமரிப்பு செலவு என்று ஒன்று வரும். இதை கணக்கிட வேண்டும். இது மட்டுமல்ல வாகனத்தில் உள்ள பல ஸ்பேர் பார்ட்ஸ்கள் இடை இடையே பழுதாகி போக வாய்ப்புள்ளது. இதை சரி செய்ய வேண்டும். இதை எல்லாம் சேர்ந்து நீங்கள் செலவு செய்ய வேண்டியது வரும். அதுவும் 5.46 லட்சம் கி.மீ பயணிக்கிறீர்கள் என்றால், ஏசி, டயர், கிளட்ச் பிளேட் என அதிக செலவு வரும் பராமரிப்புகளையும் நீங்கள் அதிக முறை செய்திருப்பீர்கள்.

ஆனால் இவிகளில் இப்படியாக ரெகுலர் பராமரிப்பு செலவு குறைவு, ஆயில் மாற்றுவது போன்ற குறைந்த செலவு பராமரிப்பு முதல் கிளட்ச், இன்ஜின் போன்ற செலவுகள் வராது. இதனால் அந்த பணம் மிச்சமாகும். 10 ஆண்டிற்கும் 1.5 லட்சம் ஒட்ட எவ்வளவு பராமரிப்பு செலவு வருமோ கிட்டத்தட்ட அதிலிருந்து சற்று கூடுதலாக தான் 4.5 லட்சம் ஓட்டும் போது செலவாகும். இதை ஒப்பிட்டு பார்த்தால் நீங்கள் 10 ஆண்டில் ரூ15-16 லட்சத்தை மிச்சப்படுத்த முடியும்.

எலெக்ட்ரிக் வாகனங்களில் தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை சார்ஜிங் தான். பெட்ரோல் வாகனங்கள் போல் ஆங்காங்கே உள்ள பங்க்களில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பயணித்து விட முடியாது.இவி கார்கள் சார்ஜ் ஏற அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதற்கான தீர்வு வந்துவிட்டால் பெட்ரோல், டீசல் கார்களை எல்லாம் மியூசியத்தில் பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகிவிட்டாலும், மக்கள் மத்தியில் சற்று தயக்கம் இருக்கிறது. இதை களைய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவி சார்ஜிங் கட்டுமானங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். சார்ஜிங் தொழிற்நுட்பங்கள் மீதான ஆய்வையும் மேம்படுத்த வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2025, 19:00 [IST]
English summary
How to calculate 10 year cost savings electric vs petrol vs cng car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+