இப்படி கணக்கு போட்டு கார் வாங்குனா செலவே ஆகாது! காசை ரொம்ப மிச்சம் பண்ணலாம்!
தற்போது புதிதாக வாகனம் வாங்கும் பலர் வாகனம் வாங்கும் போது பெட்ரோல் வாகனங்களை வாங்கலமா? சிஎன்ஜி வாகனங்களை வாங்கலாமா? அல்லது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறனர். எது லாபமாக இருக்கும் என கணக்கிடுவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இங்கு நாம் எது லாபம் என எப்படி கணக்கிடுவது என பார்க்கலாம்.
இங்கு நாம் டீசல் வாகனங்களை பற்றி காணப்போவதில்லை. டீசல் வாகனங்களின் விற்பனையும் குறைந்துவிட்டது. மாடல்களின் எண்ணிக்கையும் குறைந்தவிட்டது. மேலும் டீசல் கார்களை மத்திய அரசு விரைவில் தடை செய்யும் என்ற புரளிகளும் கிளம்பி வருவதால் மக்கள் இந்த காரை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெட்ரோல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக்கில் நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்வதற்கு முதலில் நீங்கள் உங்கள் தேவையை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தூரம் வாகனத்தை இயக்குவீர்கள்? ஒரு மாதத்திற்கு எவ்வளவு தூரம் வாகனத்தை இயக்குவீர்கள்? ஒரு நாளுக்கு எவ்வளவு தூரம் சராசரியாக காரை இயக்குவீர்கள் என கணக்கிட்டு பாருங்கள்.
முதலில் பெட்ரேல், சிஎன்ஜி கார்களை பற்றி பார்ப்போம். சிஎன்ஜி கார்கள் பெட்ரோல் கார்களை விட விலை ரூ90 ஆயிரம் வரை அதிகமாக இருக்கும். சரி இரண்டையும் 100 கி.மீ பயன்படுத்தினால் எவ்வளவு மைலேஜ் கிடைக்கும் என கணக்கிட்டால் பெட்ரோல் காரில் 100 கி.மீ பயணிக்க 6-7 லிட்டர் வரை பெட்ரோல் செலவாகும் அதாவாது ரூ600-700 வரை எரிபொருள் செலவு மட்டும் ஆகும். லிட்டருக்கு 15 கி.மீ என கணக்கிட்டுள்ளோம். சராசரியாக காரில் இவ்வளவு மைலேஜ் தான் கிடைக்கிறது. ஒருவேலை உங்கள் கார் அதிக மைலேஜ் குடுத்தால் அதற்கு ஏற்றார் போல் கணக்கிடு செய்து கொள்ளுங்கள்.

இதுவே சிஎன்ஜி கார் என எடுத்துக்கொள்வோம். இது 100 கி.மீ பயணிக்க 4-5 கிலோ வரை சிஎன்ஜி தேவைப்படும். இந்தியாவில் இயங்கும் சிஎன்ஜி கார்கள் சராசரியாக 20-25 கி.மீ வரை மைலேஜை தருகின்றன. அப்படி பார்த்தால் 100 கி.மீ பயணிக்க ரூ320 முதல் ரூ400 வரை செலவாகலாம். இது வெறும் எரிபொருள் செலவு கணக்கீடு தான். நீங்கள் வாங்க நினைக்கும் கார் அதிக மைலேஜ் தரும் என்றால் அதற்கு ஏற்றார் போல கணக்கிடு செய்து கொள்ளுங்கள்.
அடுத்தாக எலெக்ட்ரிக் காரை எடுத்துக்கெள்வோம். இன்று சராசரியாக ஒரு எலெக்ட்ரிக் காரில் 40-50 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. அதை முழுமையாக சார்ஜ் செய்ய 40-50 யூனிட் கரெண்ட் தேவைப்படும். ஒரு யூனிட்டிற்கு ரூ10 என கணக்கிட்டால் ஒரு முறை சார்ஜ் ஏற்ற ரூ400-500 வரை கரெண்ட் பில் வரும். 50 யூனிட் சார்ஜில் நீங்கள் 400 கி.மீ பயணிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அப்பொழுது 100 கி.மீ பயணிக்க சராசரியாக வெறும் ரூ125 தான் செலவாகும். கரெண்ட் பில் யூனிட்டிற்கு ரூ10 என்பது ்அதிகபட்ச டேரிஃப்ட் கணக்கீடு தான் இதை விட குறைவாக வருவதற்கு தான் வாய்ப்புள்ளது.

சரி இந்த கணக்கீடுகளை பார்த்தால் இவி கார்கள் தான் லாபமாக தோன்றும். ஆனால் காரின் விலை அதிகமாக இருக்கிறது. மேலும் இவி கார்களுக்கு பேட்டரி தேய்மான செலவுகள் அதிகமாக இருக்கலாம். இதையும் கணக்கீடு செய்ய வேண்டும் பெட்ரோல் காரை விட இவி கார்களுக்கு எவ்வளவு அதிகபணம் கொடுக்கிறீர்கள்? பெட்ரோல், சிஎன்ஜி கார்களுக்கான பராமரிப்பு செலவு என்ன இவி கார்களுக்கான பராமரிப்பு செலவு என்ன? என கணக்கிட வேண்டும்.
நீங்கள் அடிக்கடி கார் மாற்றும் நபராக இருந்தால் அந்த கார்களுக்கான ரீசேல் வேல்யூ எவ்வளவு என்பதையும் கணக்கிட வேண்டும். இப்படி கணக்கிட்டால் தான். நீங்கள் உங்களுக்கான சரியான காரை தேர்வு செய்ய முடியும். முதலில் நீங்கள் வருடத்திற்கு எவ்வளவு தூரம் பயணிக்கிறீர்கள் என கணக்கிட்டர்கள் அள்ளவா இந்த 100 கி.மீ செலவை நீங்கள் ஆண்டு தோறும் பயணிக்கும் தூரத்திற்கு கணக்கிடுங்கள் வாகனங்களுக்கான பாராமரிப்பு செலவு, வாகனம் வாங்கும் போது ஆகும் செலவு என கணக்கிட்டு பாருங்கள் உங்களுக்கான கார் எது என்பது உங்களுக்கே தெரியவரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்களுக்கு தேவையான கார் மாறப்படும். இது தான் சிறந்தது என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உங்கள் தேவையை புரிந்து அதற்கான கணக்கீடுகளை நீங்களே செய்து கெள்வது தான் சிறந்ததாக இருக்கும். வாகனம் வாங்கும் போது இந்த கணக்கீடு இல்லாமல் வாகனம் வாங்காதீர்கள்.


Click it and Unblock the Notifications









