கார் பைக்குகளில் இருப்பது போல் விமானத்தில் இருக்கும் இன்ஜின் எத்தனை சிசி தெரியுமா?

நாம் கார், பைக்குகளில் இன்ஜின் இவ்வளவு சிசி என சொல்கிறோமோ அதே போல விமானங்களில் உள்ள இன்ஜின் எத்தனை சிசி இருக்கும் என உங்களால் யூகிக்க முடிகிறதா? கார் பைக்குகளை விட விமானங்கள் அதிக வேகமாக பயணம் செய்யும் நிலையில், இந்த கேள்வி பலருக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நாம் கார் பைக்குகளில் பயணம் செய்திருப்போம், இதில் பயணம் செய்யும்போது அந்த வாகனத்தின் திறன் எவ்வளவு என்பதை குறிப்பிடுவதற்கு எத்தனை சிசி இன்ஜின் என குறிப்பிட்டு இருப்பார்கள். அதிக சிசி கொண்ட இன்ஜின் அதிக பவர்ஃபுல்லான இன்ஜினாக இருக்கும். குறைவான சிசி கொண்ட இன்ஜின் குறைந்த பவரில் இயங்கும்.

flight engine

இப்படி இருக்கையில் வானத்தில் பறக்கும் விமானம் எத்தனை சிசி இன்ஜினை கொண்டிருக்கும் என்ற கேள்வி பலருக்கும் தோன்றும் ஒரு விஷயமாக தான் இருக்கிறது. விமானங்கள் மணிக்கு அதிகமான கிலோமீட்டர்கள் பயணம் செய்யும் நிலையில், அதிக சிசி கொண்டு இன்ஜின் தான் அதில் பொருத்தப்பட்டிருக்கும் என பலரும் யோசிப்பார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் விமானத்தின் இன்ஜினை சிசி கொண்டு அளவீடு செய்ய முடியாது. பொதுவாக ஒரு இன்ஜினை சிசி கொண்டு அளவீடு செய்ய வேண்டும் என்றால் அந்த இன்ஜினில் பிஸ்டன் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் கார் பைக்குகளில் மட்டுமே இந்த பிஸ்டன் பொருத்தப்பட்ட இன்ஜின் இருக்கிறது.

விமானத்தின் இன்ஜினை அளவீடு செய்வதற்கு தனியாக மற்றொரு வழி இருக்கிறது. விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் எவ்வளவு உந்து சக்தியை ஏற்படுத்துகிறது மற்றும் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு எரிபொருளை செலவு செய்கிறது என்பதை பொறுத்து தான் அதன் திறன் என்பது அளவீடு செய்யப்படுகிறது.

விமானத்தில் பொருத்தப்படும் இன்ஜின் அந்த விமானத்தின் அழகை பொறுத்து மாறுபடும். சிறிய ரக விமானங்களில் குறைந்த சக்தி கொண்ட இன்ஜின் பொருத்தப்படும். பெரிய விமானங்களில் அதிக சக்தி கொண்ட இன்ஜின் பொருத்தப்படும் முதலில் நாம் பிரைவேட் ஜெட் விமானங்களை பற்றி சற்று காண்போம்.

flight engine

பிரைவேட் ஜெட் விமானங்களிலேயே சிறிய ரக விமானம் பெரிய ரக விமானம் என இரண்டு வகைகளாக இருக்கிறது. இதில் சிறிய ரக விமானங்கள் எல்லாம் மணிக்கு 1100 முதல் 1900 லிட்டர் அளவிலான எரிபொருளை செலவு செய்யும் இன்ஜினை கொண்டு இருக்கும். பெரிய ரக ஜெட் விமானங்கள் ஒரு மணிக்கு 2000 முதல் 3400 லிட்டர் அளவிலான எரிபொருளை செலவு செய்யும் இன்ஜினை கொண்டதாக இருக்கும்.

இதுபோக மிக சிறிய ரக பிரைவேட் ஜெட் விமானங்கள் பயன்பாட்டில் இருக்கிற.து ஆனால் இது மிகக் குறுகிய தூரம் மட்டுமே பயணம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் அடுத்தடுத்த நகரங்களுக்கு பயணம் செய்யவோ அல்லது ஒரே நகரத்திற்குள் பயணம் செய்து மீண்டும் திரும்ப வருவதற்கோ இது பயன்படும்.

மிகச் சிறிய ரக விமானம் ஒரு மணி நேரத்திற்கு 500 லிட்டர் வரை எரிபொருளை செலவு செய்கிறது. 2 மணி நேரம் மட்டுமே இந்த விமானத்தில் தொடர்ந்து பறக்க முடியும். இந்த விமானத்தில் உள்ள எரிபொருள் கொள்ளளவு டேங்கில் 1000 லிட்டர் எரிபொருள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும் இப்படியாக இந்த விமானம் இந்த ஆயிரம் லிட்டர் எரிபொருளைக் கொண்டு 1000 முதல் 1200 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும். அப்படி என்றால் லிட்டருக்கு 1 கிலோமீட்டர் மைலேஜ் என கணக்கிட்டுக் கொள்ளலாம்.

மீடியம் ரக விமானங்கள் மணிக்கு ஆயிரம் லிட்டர் பெட்ரோலை செலவு செய்யும். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கே 4800 கிலோ மீட்டர் வரை இந்த விமானங்களால் பயணம் செய்து விட முடியும். அப்படிப் பார்த்தால் ஒரு லிட்டருக்கு நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது என நாம் கணக்கீடு கொள்ளலாம்.

பெரிய ரக விமானமும் இதே போல மணிக்கு 2000 லிட்டர் எரிபொருளை செலவு செய்யும் ஆனால் அதே நேரம் 8000 முதல் 9000 கிலோமீட்டர் வரை மட்டுமே இந்த விமானங்களும் பயணம் செய்யும் மீடியம் ரக விமானங்களை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட அதே மைலேஜ் தான் பெரிய ரக விமானங்களும் தரும் என்றாலும் ஒரே நேரத்தில் அதிக எடையை சுமந்து செல்லும் திறன் இந்த விமானங்களுக்கு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் என்பது அது எவ்வளவு எரிபொருளை செலவு செய்கிறது எவ்வளவு தூரம் பயணம் செய்கிறது என்பதை பொறுத்துதான் முடிவு செய்யப்படுகிறது. கார் பைக்குகளில் நாம் சிசி அளவீடு செய்வதுவது போல் விமான இன்ஜினில் நாம் சிசி அளவீடை குறிப்பிட முடியாது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2024, 14:59 [IST]
English summary
How to calculate the power of the flight engine
மேலும்... #planes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+