சம்மர் முடியப்போகுது மழைக்காலம் வரதுக்குள்ள உங்க கார்ல இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க!

தமிழகத்தில் கோடைக் காலம் முடிவுக்கு வருகிறது. இனி பருவமழை காலத்தை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறோம். பருவமழை துவங்குவதற்குச் சற்று கால தாமதமாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பருவமழைக்கு நம் கார்களை எப்படி தயார் செய்வது எனக் காணலாம் வாருங்கள்.

கோடைக் காலத்தில் நாம் கார்களை அதிகம் பயன்படுத்தியிருப்போம். பள்ளி விடுமுறையால் சுற்றுலா செல்வது, காரில் பயணிக்கும் போது அதிகமாக ஏசியை பயன்படுத்துவது எனப் பல விதமான பயன்பாடுகள் காரில் கோடைக் காலத்தில் இருந்திருக்கும். இந்த கோடையைக் கடந்து பருவமழை காலத்திற்குச் செல்லும் போது நம் காரையும் அதற்குத் தகுந்தார் போலத் தயார் செய்ய வேண்டும். இப்படி என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனக் காணலாம் வாருங்கள்.

after summer car care tips

பிரேக்குகள்: கோடைக் காலத்தில் நாம் அதிகம் கார்களை பயன்படுத்தியதால் அதில் முக்கியமாக பிரேக்குகள் தேய்மானமாகியிருக்கும். இதனால் பிரேக் லைனிங், டிரம்ஸ் ரோட்டார், மற்றும் பிரேக் பேடுகளை இந்த நேரத்தில் செக் செய்து கொள்ள வேண்டும், ஏதாவது லூசாக இருக்கிறதா? அதிக தேய்மானத்தால் எதையாவது மாற்ற வேண்டுமா என்பதை செக் செய்து கொள்ள வேண்டும்.

லைட்டுகள்: கோடைக் காலத்தில் இரவு நேரத்தில் வெளியில் வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால் இரவு நேரம் அதிகம் பயணித்திருப்போம். இதனால் லைட்டுகளை அதிகம் பயன்படுத்தியிருப்போம். தற்போது மழை நேரம் வருவதால் லைட்டுகள் மி முக்கியம். இதனால் இந்த லைட்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை ஒரு முறை செக் செய்து கொள்ள வேண்டும்.

after summer car care tips

வைப்பர்கள்: கோடைக் காலத்தில் மழை இருக்காது. இதனால் வைப்பர்களை பயன்படுத்தாமலேயே வைத்திருப்போம். ஆனால் வரப்போவது மழைக் காலம் என்பதால் நீங்கள் உங்கள் வைப்பர்கள் சரியாக வேலை செய்கிறதா என சரியாக செக் செய்து கொள்வது நல்லது. தேவைப்பட்டால் புதிய வைப்பார்களை மாற்றிக்கொள்ளலாம்.

டயர்களை மாற்றிக்கொள்ளுங்கள்: பொதுவாக குறிப்பிட்ட கால இடைவெளியில் கார் டயர்களை இடமாற்றிக்கொள்வது கார் டயரின் உழைப்பை அதிகரிக்கும். இதை பருவ நிலை மாற்றத்தின் போது செய்வது சிறப்பான விஷயம் நீங்கள் உங்கள் காரின் பின்பக்க டயர்களை முன்பக்கத்திலும், முன்பக்க டயரை பின்பக்கத்திலும் வல பக்க டயரை இட பக்கத்திலும் இட பக்க டயரை வல பக்கத்திலும் இடமாற்றி போட்டுக்கொள்ளுங்கள்.

after summer car care tips

பேட்டரி செக்கப்: உங்கள் பேட்டரியை அவ்வப்போது செக் செய்து கொள்வது சிறந்தது. அதன்படி இந்த செக்கப்பில் பேட்டரியை சுற்றி தூசி ஏதாவது இருக்கிறதா, பேட்டரியில் பொருத்தப்பட்ட வயர்கள் டைட்டாக இருக்கிறதா என ஒரு முறைக்கு இரு முறை செக் செய்து கொள்ளுங்கள்.

ஏசி செக்கப்: கோடை காலத்தில் அதிகமாக ஏசியை பயன்படுத்திவிட்டோம். மழை காலத்தில் ஏசி தேவைப்படாது என நினைத்து விடாதீர்கள். அதிகமாக மழை பெய்யும் போது ஜன்னல்களை அடைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அப்பொழுது காரின் ஏசியை ஆன் செய்ய வேண்டும். அப்பொழுது தான் காருக்குள் அதிக வெப்பம் ஏற்படாது. இதனால் ஏசியையும் செக் செய்து கொள்ளுங்கள்.

இன்ஜின் ஆயில் மற்றும் ஃப்ளூயிட்ஸ்: உங்கள் காரின் இன்ஜின் ஆயிலை அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டும். அதே நேரம் இன்ஜின் கூலண்ட், பவர் ஸ்டிரியரிங் ஃப்ளூயிட், பிரேக் ஃப்ளூயிட், கியர் ஃப்ளூயிட், விண்ட் ஷீல்டு டிடர்ஜெண்ட் ஆகியவற்றை செக் செய்து கொள்ளுங்கள். ஏதாவது ரிஃபில் செய்ய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் காரை அவ்வப்போது சரியாக பராமரித்தால் தான் காரின் ஆயுள் அதிகமாக இருக்கும். இதனால் குறிப்பிட்ட இடைவெளியில் காரை பராமரிப்பு செய்யுங்கள். தற்போது சிறிய செலவை செய்ய யோசித்தால் இது பிற்காலத்தில் பெரிய செலவை இழுத்துவிட்டுவிடும். இதை மனதில் வைத்து பணியை தொடருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 6, 2023, 9:33 [IST]
English summary
How to care your car at the end of summer
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X