மழை வரதுக்கு முன்னாடி உங்க வண்டி டயர்ல இதெல்லாம் பண்ணீடுங்க! இல்லேன்னா மொத்தமா செலவு வச்சிடும்!

தற்போது தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்து அடுத்து பருவநிலை மாற்றம் அடைந்து மழை காலம் துவங்க உள்ளது. இந்நிலையில் நம் வாகனங்களை மழை காலத்திற்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டும். மழை காலங்களில் வாகனங்களின் டயரை பராமரிப்பது மிகவும் முக்கியம்.

மழைக்காலங்களில் சாலைகள் ஈரமாக இருக்கும் உங்கள் வாகன டயரை நீங்கள் சரியாக பராமரிக்கவில்லை என்றால் உங்கள் வாகனம் விபத்தில் சிக்ககூட வாய்ப்புகள் இருக்கிறது. மழை காலத்துக்கு ஏற்றவாறு உங்கள் டயரை பராமரிப்பது எப்படி? எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் வராமல் பாதுகாப்பது எப்படி? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

tyre care before monsoon

டயர் திரெட்டிங்: ஒரு டயரின் கிரிப் என்பது அதன் த்ரெட்டிங்கில் தான் இருக்கிறது. டயர் ஓட ஓட திரெட்டிங் தேய்மானம் ஆகும். 1.6 மிமீ குறைவான அளவு டயரில் திரெட்டிங் இருந்தால் அது ஆபத்தானது. மழைக்காலங்களில் சறுக்கி விட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் உங்கள் வாகனத்தின் டயரில் உள்ள திரெட்டிங் அளவை செக் செய்து கொள்ளுங்கள். மழை காலங்களில் நீங்கள் விபத்தில் சிக்காமல் இந்த திரெட்டிங் தான் உங்களை பாதுகாக்கும்.

டயர் பிரஷர்: மழைக்காலங்களில் டயரில் உள்ள காற்றின் அழுத்தம் குறைய வாய்ப்பிருக்கிறது. குறைவான காற்றழுத்தம் கொண்ட டயரை பயன்படுத்தினால் அது விரைவில் கிழிந்து பஞ்சராக வாய்ப்புள்ளது. அதே நேரம் டயர் பிரஷரை அதிகமாகவும் வைக்க கூடாது. அதிகமாக வைத்தால் ரோடு உடனான காண்டாக்ட் குறையும். இதனால் கிரிப் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் சரியான டிரையர் பிரஷரை பராமரிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஈரமான ரோடுகளிலும் நல்ல கிரிப் கிடைக்கும்.

tyre care before monsoon

மழை நேர டிரைவிங்: தற்போது மழை காலம் துவங்க உள்ளதால் நீங்கள் பயணிக்கும் போது அடிக்கடி மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இப்படி நீங்கள் மழையில் பயணிக்கும் போது வேகமாக பயணிக்காமல் 20- 25 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் பயணம் செய்யுங்கள்.

மழை நேரங்களில் வேகமாக செல்லும் போது சாலை மழைநீர் நிறைந்த குழிகள் இருக்கும், இதில் கார் டயர் இறங்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் மழை நேரத்தில் வேகமாக சென்றால் கண்ட்ரோலை இழக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் மழை நேரங்களில் மெதுவாக பயணிப்பது சிறப்பாகும்.

tyre care before monsoon

டயர் மாற்றம்: கார் வைத்திருப்பவர்கள் தங்கள் நான்கு டயர்களையும் அவ்வப்போது மாற்றி மாற்றி போட்டுக் கொள்வது டயரின் வாழ்நாள்களை அதிகரிக்கும். இதை பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றினால் சிறப்பாக இருக்கும் இதனால் தற்போது கோடையிலிருந்து மழை காலம் வருவதால் இதை பயன்படுத்தி நீங்கள் காரின் பெயரை மாற்றி போட்டுக் கொள்ளவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து : காரை முறையாக அவ்வப்போது பராமரித்தால் அது உங்களுக்கு நீண்ட கால உழைப்பை தரும். அதே நேரம் திடீரென அதிகமான செலவுகளை இழுத்துவிடாது. தற்போது சிறிய சிறிய பராமரிப்புகளை நீங்கள் செய்யாமல் விட்டால் கார் ஒரு நாள் ரிப்பேர் ஆகி நடு ரோட்டில் நிற்கும் அல்லது உங்களுக்கு பெரிய செலவை இழுத்துவிடும். இதை கவனித்தில் கொண்டு அவ்வப்போது காரை பராமரித்துக்கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 10, 2023, 11:55 [IST]
English summary
How to care your vehicle tyre before monsoon starts
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X