மெக்கானிக்கே தேவையில்லை! இன்ஜின் ஆயிலை நீங்களே பைசா செலவில்லாமல் மாற்றலாம்!

மெக்கானிக்கிடம் செல்லாமல் உங்கள் வீட்டிலேயே உங்கள் கார் மற்றும் பைக்கிற்கான இன்ஜின் ஆயிலை நீங்களே ஒரு பைசா எக்ஸ்டரா செலவில்லாமல் மாற்றிக்கொள்ள முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு வாகனத்திற்கு இன்ஜின் ஆயில் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இன்ஜின் ஆயில் இல்லை என்றால் ஒட்டு மொத்த இன்ஜினுமே கெட்டு போய் விடும். சரியான நேரத்தில் இன்ஜின் ஆயிலை மாற்றுவது இன்ஜினிற்கான வாழ்நாளை நட்டிக்கும். ஆனால் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று இன்ஜின் ஆயிலை மாற்றுவது என்பது பலருக்கு சந்தேகேத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. அவர்கள் இன்ஜின் ஆயிலை மாற்றுகிறார்களா இல்லையா? தவறான இன்ஜின் ஆயிலை பயன்படுத்தி விடக்கூடாது என பல அச்சங்கள் இருக்கிறது.

இதற்கான காரின் இன்ஜின் ஆயிலை மாற்றுவதற்கு நமக்கு நம்பிக்கையான ஒரு மெக்கானிக் அல்லது நம் கண்முன்னே இன்ஜின் ஆயிலை மாற்றும் ஒரு மெக்கானிக்கிடம் கார்/பைக்கை கொண்டு சென்று இன்ஜின் ஆயிலை மாற்றுவோம். ஆனால் நாம் வாகனத்திற்கு இன்ஜின் ஆயிலை மாற்ற தனியாக ஒரு ஆள் எல்லாம் தேவையே இல்லை. நீங்கள் வீட்டிலேயே இன்ஜின் ஆயிலை மாற்றிவிட முடியும். அதை எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் விரிவாக காணப்போகிறோம்.

கார்/பைக்கின் இன்ஜின் ஆயிலை வீட்டிலேயே மாற்றுவதற்கு முன் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இன்ஜின் சற்று சூடாக இருக்க வேண்டும்.அதனால் இன்ஜின் ஆயில் மாற்றும் முன்பு சில நிமிடங்கள் ஆன் செய்து இன்ஜினை ஓட விட்டால் இன்ஜின் ஆயில் ஃப்ளோ அதிகமாக இருக்கும். அதற்காக இன்ஜின் ஓடிக்கொண்டிருக்கும்போதே மாற்ற முயற்சிக்காதீர்கள். சில நிமிடங்கள் ஆன் செய்து வைத்துவிட்டு பின்னர் ஆஃப் செய்துவிட்டு இன்ஜின் ஆயில் மாற்றும் செயலை துவங்கவும்,

இன்ஜின் ஆயிலை மாற்றும் முன்பு இன்ஜினின் ஆயில் ஃபில்டர் மற்றும் டிரைன் பிளக் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும், பொதுவாக வாகனம் வாங்கும் போது வழங்கப்பட்டிருக்கும் மேனுவலிலேயே இந்த தகவல் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். பொதுவாக இன்ஜினின் அடிப்பகுதியில் ஆயில் ஃபில்டர் இருக்கும். ஆயில் டேங்கின் கீழ் பகுதியில் டிரைன் பிளக் இருக்கும். இந்த இரண்டும் உங்கள் வாகனத்தில் எங்கு இருக்கிறது என்பதை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே இருக்கும் ஆயிலை வெளியேற்றும் போது ஆயில் தரையில் சிந்தாமல் இருக்க டிரைன் பிளக்கிற்கு கீழே ஒரு பாத்திரத்தை வைத்துக்கொள்ளுங்கள்.அதில் ஏற்கனவே உள்ள ஆயில் கலெக்ட் ஆகிவிடும். நீங்கள் இதை வைத்த பின்பு இன்ஜின் ஆஃப் செய்ய்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்த பின்பு டிரைன் பிளக்கை கழட்டி விடவும் டிரைன் பிளக் கழட்டப்பட்டவுடன் வாகனத்தில் இருக்கும் பழைய இன்ஜின் ஆயில் வெளியேற துவங்கிவிடும்.

டிரைன் பிளக் டைட்டாக இருந்தால் ஸ்க்ரூ டிரைவர் கொண்டு அதை கழட்டி விட முயற்சி செய்யுங்கள். அதன் பின்னர் ஆயில் ஃபில்டரையும் அகற்றிவிடுங்கள். அப்பொழுது தான் முழுமையாக இன்ஜின் ஆயில் முழுவதும் வெளியேறும். பழைய ஆயில் எல்லாம் வெளியேறி நீங்கள் கீழே வைத்திருக்கும் பாத்திரத்திற்கு வந்து சேர சில நிமிடங்கள் வரை ஆகலாம். அதற்காக காத்திருங்கள், அது எல்லாம் வெளியேறி பின்பு டிரைன் பிளக் மற்றும் ஆயில் ஃபில்டர்களை மீண்டும் மாட்டிவிடுங்கள்.

திரும்ப மாட்டும் போது அதிகமாக டைட் செய்துவிட வேண்டாம். இது ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்திவிடும். நார்மலான டைட்டில் அதை மூடினால் போதும், அதே போல ஆயில் ஃபில்டர்களையும் மாற்றிவிடுங்கள். இதன் பின்பு ஆயிலை உள்ள செலுத்தும் நாப் எங்கிருக்கிறது என பார்த்து அதை திறந்து கொள்ளுங்கள். அதில் சுத்தமான ஃபனல் மூலம் இன்ஜின் ஆயிலை ஊற்றி நிரப்ப வேண்டும். உங்கள் வாகனத்திற்கு எவ்வளவு அளவில் இன்ஜின் ஆயில் ஊற்ற வேண்டும் என உங்கள் காரின் மேனுவலில் வழங்கப்பட்டிருக்கும். அதே அளவில் ஊற்றுங்கள்.

அதில் குறிப்பிடப்பட்ட அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஊற்ற வேண்டாம், இது வாகனத்தின் இன்ஜினிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சரியான அளவில் இன்ஜின் ஆயில் அளவை பராமரியுங்கள். இதன் அளவை சரி செய்ய காரின் இன்ஜின் ஆயில் இன்டிகேட்டர் ஸ்டிக் இருக்கிறது. அதை வைத்து செக் செய்து கொள்ளுங்கள். குறைவான இருந்தால் சரியான அளவு வரும் வரை இன்ஜின் ஆயிலை ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் இன்ஜின் ஆயில் ஊற்றும் நாபை மூடிவிடுங்கள். இதிலும் அதிக டைட் வைக்க வேண்டாம். பின்னர் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்பதை மனதில் கொண்டு நார்மல் டைட்டை மட்டும் வையுங்கள்.

இன்ஜின் ஆயிலை மற்றும் போது நிச்சயம் கார் வாங்கும்போது வழங்கிய யூஸர் மேனுவலை வாசித்துக்கொள்ளுங்கள். யூசர் மேனுவலை வாசிக்கவில்லை என்றால் ஏதாவது தவறு நடக்க வாய்ப்புள்ளது. இதை மட்டும் சரியாக செய்துவிட்டால் போதும் மெக்கானிக்கே தேவையில்லை நீங்களே உங்கள் வீட்டிலேயே உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயிலை மாற்றிவிடலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 14, 2022, 16:46 [IST]
English summary
How to change engine oil by yourself
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+