இது தான் சரியான டைம்! வெறும் ரூ100 செலவுல இதை செஞ்சா போதும் பெரிய செலவு வராம தப்பிக்கலாம்!

மழைக்காலங்களில் காரில் உள்ள வைப்பர் அதிகம் பயன்படும். இதனால் இப்பொழுதே உங்கள் காரில் உள்ள வைப்பர்களை செக் செய்து கொள்வது நல்லது. அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை இப்பொழுதே நீங்களே வீட்டிலிருந்தபடியே மாற்றிக் கொள்ளலாம். மெக்கானிக்கிடம் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

கோடைக் காலம் முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் துவங்கி விட்டது. மக்கள் பலர் மழையில் நனையாமல் செல்ல தங்கள் டூ வீலரை விட கார்களில் செல்லவே விரும்புகின்றனர். மழை நேரங்களில் நாம் கார்களை பயணிக்கும் போது வைப்பரின் தேவை அதிகமாக இருக்கும்.

Wiper Blade Maintenance

கோடைக் காலங்களில் நாம் பெரும்பாலும் வைப்பர்களை பயன்படுத்தாமல் வைத்திருப்போம். ஆனால் தற்போது மழைக் காலம் வந்துவிட்டதால் இதை அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் வைப்பர்களை பராமரிக்காமல் வைத்திருந்தால் அது நமக்கு விண்ட் ஸ்கிரீனில் பெரிய ஸ்கிராட்சைகளை ஏற்படுத்தி பெரும் செலவு இழுத்து விட்டு விடும்.

அதைத் தவிர்க்க நாம் இந்த நேரத்தில் சரியாக வைப்பர்களை பராமரிக்க வேண்டும். இதற்காக நீங்கள் மெக்கானிக்கிடம் சென்று அதிகமாகச் செலவு செய்ய வேண்டிய தேவை எல்லாம் இல்லை. நீங்கள் வீட்டிலேயே இதைச் சரி சரி செய்து கொள்ளலாம். நீங்கள் இதற்காக முதலில் செய்ய வேண்டியது உங்கள் காரின் வைப்பர் குறித்த தகவல்களை உங்கள் காரின் மேனுவல் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Wiper Blade Maintenance

அதன்பின்பு உங்கள் காரின் வைப்பரை சர்வீஸ் பொசிஷனுக்கு முதலில் மாற்ற வேண்டும். சர்வீஸ் பொசிஷனிற்கு மாற்றிய பின்பு வைப்பரில் இருக்கும் முதல் பிரச்சனை அதன் பிளேடு தான். உங்கள் காரில் வைப்பரின் உள்ள பிளேடுகள் எந்த சேதாரமும் இல்லாமல் தரமாக இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.

அது தரமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு ஈரத் துணியை வைத்து வைப்பரை நன்கு துடைத்துவிட்டு மீண்டும் பைப்ரை அதன் பொசிஷனிற்கு மாற்றிவிடலாம், வேறு வேலைகள் எதுவும் இல்லை. ஆனால் அது சேதமாகி இருந்தால் அந்த வைப்பர் பிளேடை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும்.

ஆன்லைனில் ரூ100 முதல் ரூ500 வரை பல்வேறு தரத்திலும் வகையிலும் வைப்பர் பிளேடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. உங்கள் காருக்கு ஏற்ற வைப்பர் பிளேடு கொடுத்த தகவல்களை மேனுவல் மூலம் தெரிந்து கொண்டு அந்த பிளேடை நீங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

பின்னர் வைப்பரில் இந்த பிளேடுகளை பிடித்துக் கொள்ளும் ஹூக்கு ஒன்று இருக்கும் அதை ரிலீஸ் செய்தால் சுலபமாக வைபர் பிளேடை அகற்றி விடலாம். பின்னர் புதிய பிளேடை அதில் சொருகி முழுவதும் செட் ஆனவுடன் மீண்டும் இந்த ஹூக்கை லாக் பொசிஷனுக்கு மாற்றிவிட வேண்டும்.

இதைச் செய்து விட்டாலே போதும் உங்கள் வைப்பர் புதிதாக செட் ஆகி விடும் மீண்டும் வைப்பரை இரண்டு ஸ்கிரீனில் படும்படி பொசிஷனை மாற்றி ஒருமுறை வைப்பரை போட்டு செக் செய்து கொள்ளுங்கள். உங்கள் வைப்பரில் சிறிய சிறிய கல் அல்லது மணல் துகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வைப்பதில் இது போன்ற ஏதாவது இருந்தால் இது காரின் கண்ணாடியில் ஸ்கிராட்சைகளை உண்டாக்கி விடும் பின்னர் அந்த ஸ்கிராட்சைகளை நீக்க நீங்க அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். அவ்வப்போது காரின் வைப்பர்களை பராமரித்து கொண்டாலே போதும் பெரிய அளவில் செலவு வருவதை தவிர்க்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் பயன்படுத்தும் பலருக்கு இந்த வைபர் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இதனால் வைப்பரை பராமரிக்க தவறி விடுகின்றனர். இப்படி நீண்ட நாட்களாக பராமரிப்பில்லாமல் இருக்கும் வைப்பர் ஒரு கட்டத்தில் காரின் விண்ட் ஸ்கிரீனில் ஸ்கிராட்சை ஏற்படுத்திவிடுகிறது. இது பெரும் செலவு இழுத்து விடுகிறது. இதை தவிர்க்க மேலே சொன்னபடி வைப்பரை பராமரிப்பது தான் சிறந்த வழி.

More from DriveSpark

Article Published On: Monday, June 19, 2023, 15:23 [IST]
English summary
How to change wiper blade on your car diy technique
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+