பழைய பெட்ரோல் கார் வாங்கப் போகிறீர்களா? அது E20-க்கு ஏற்றதா? - இந்த 7 விஷயங்களை மறக்காம செக் பண்ணுங்க!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதனால், பயன்படுத்தப்பட்ட (Used) பெட்ரோல் கார் வாங்கும்போது மைலேஜ், விலை, சர்வீஸ் ஹிஸ்டரி மட்டும் பார்த்து முடிவு செய்துவிடக் கூடாது. அந்த கார் E20 பெட்ரோலுக்கு இணக்கமானதா என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்கள் வாங்குபவர்களுக்கு இது மிகவும் முக்கியமான சரிபார்க்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.

புதிய தலைமுறை பெட்ரோல் கார்கள் பெரும்பாலும் E20 எரிபொருளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல் E20க்கு இணக்கமான பெட்ரோல் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், E10 பெட்ரோலை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்ட சில பழைய பெட்ரோல் மாடல்களில் நீண்ட கால பயன்பாட்டில் மைலேஜ், எரிபொருள் அமைப்பு பாகங்களில் பழுது, தேய்மான போன்ற விஷயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதனால், பழைய கார் வாங்கும் முன் சில எளிய விஷயங்களை சரிபார்த்துவிட்டால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

Used Car

1. Owner's Manual-ஐ பார்க்க மறக்காதீர்கள்

ஒரு காரின் E20 இணக்கத்தன்மையை தெரிந்துகொள்ள மிகவும் எளிய வழி அதன் உரிமையாளர் கையேட்டைப் பார்ப்பதுதான். அதில் E20 Compatible, E20 Fuel அல்லது எத்தனை சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை வைத்து எளிதாக முடிவு செய்துகொள்ளலாம்.

2. Fuel Lid-ல் என்ன எழுதப்பட்டுள்ளது?

பல புதிய கார் மாடல்களில் பெட்ரோல் டேங்க் மூடியில் E20 அல்லது அதற்கு இணையான குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும்போது இதையும் ஒரு முறை கவனித்துப் பாருங்கள். சில வினாடிகளில் தெரிந்துகொள்ளக்கூடிய தகவல் இது.

3. தயாரிப்பு ஆண்டு மட்டும் போதாது

2023-க்கு பிறகு வந்த கார்தானே... கண்டிப்பாக E20 Compatible இருக்கும், என்று பலர் நினைக்கிறார்கள். தயாரிப்பு காலத்திற்கும், விற்பனைக்கும் இடைவெளி அதிகம் இருந்தாலும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பு ஆண்டு மட்டும் வைத்து இறுதி முடிவுக்கு வரக்கூடாது. அதே மாடலின் வெவ்வேறு தயாரிப்பு காலங்களில் தொழில்நுட்ப மாற்றங்கள் இருக்கலாம். எனவே, இதனை சரிபார்த்து E20க்கு இணக்கமான மாடல்தான் என்பதை சரிபார்த்து வாங்குவது அவசியம்.

4. நிறுவனத்திடமே உறுதி செய்துகொள்ளுங்கள்

சந்தேகம் இருந்தால், அந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் Customer Care, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலரை தொடர்புகொள்வது சிறந்தது. Chassis Number அல்லது VIN Number மூலம் கூட சில நிறுவனங்கள் வாகனத்தின் E20 இணக்கத்தன்மையை உறுதி செய்து தருகின்றன.

5. சர்வீஸ் வரலாற்றை கவனியுங்கள்

பழைய கார்களில் எரிபொருள் செல்லும் ஹோஸ் குழாய், ரப்பர் சீல், எரிபொருள் பம்ப் மற்றும் இன்ஜெக்டர் போன்ற பாகங்கள் எப்போது மாற்றப்பட்டன என்பதை சர்வீஸ் பதிவுகள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். வாகனம் முறையாக பராமரிக்கப்பட்டிருந்தால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

6. டெஸ்ட் டிரைவ் மிகவும் முக்கியம்

வாகனம் சீராக ஸ்டார்ட் ஆகிறதா, எஞ்சின் நடுக்கம் இருக்கிறதா, வேகம் எடுக்க தாமதம் எடுக்கிறதா, பெட்ரோல் வாசனை வருகிறதா, எஞ்சின் வார்னிங் லைட் எரிகிறதா போன்றவற்றை டெஸ்ட் டிரைவிலேயே கவனிக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தாலே E20 காரணம் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், வாங்கும் முன் அவற்றை பரிசோதித்துவிடுவது நல்லது.

7. விற்பனையாளர் சொல்வதை மட்டும் நம்பாதீர்கள்

"இந்த கார் E20 Compatible சார்" என்று கூறினாலே போதாது. அதற்கான ஆதாரத்தை கேட்டறியுங்கள். Owner's Manual, அதிகாரப்பூர்வ சர்வீஸ் பதிவு அல்லது நிறுவனத்தின் உறுதிப்படுத்தல் இருந்தால் மட்டுமே முழு நம்பிக்கை பெறலாம்.

பழைய கார் வாங்குபவர்கள் ஏன் இதை கவனிக்க வேண்டும்?

E20-க்கு இணக்கமாக தயாரிக்கப்பட்ட புதிய கார்கள் குறித்து பெரிய கவலை தேவையில்லை. ஆனால், E10 காலத்தில் உருவாக்கப்பட்ட சில பழைய பெட்ரோல் வாகனங்களில் நீண்ட கால பயன்பாட்டில் மைலேஜில் சிறிய மாற்றம் அல்லது எரிபொருள் அமைப்பில் உள்ள ரப்பர் ஹோஸ், சீல்கள் போன்ற பாகங்களில் கூடுதல் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பல தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. அதனால், வாங்கும் முன்பே இதை உறுதி செய்துகொள்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் கார் வாங்கும்போது பெரும்பாலானவர்கள் விலை, மைலேஜ், ஓட்டிய கிலோமீட்டர், இன்சூரன்ஸ், சர்வீஸ் ஹிஸ்டரி ஆகியவற்றை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆனால், இனி அந்த பட்டியலில் E20 இணக்கத்தன்மையையும் சேர்த்துக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. சில நிமிடங்கள் செலவழித்து இதை சரிபார்ப்பது, எதிர்காலத்தில் தேவையற்ற சந்தேகங்களையும் பராமரிப்பு செலவுகளையும் குறைக்க உதவும்.

Article Published On: Monday, July 27, 2026, 11:43 [IST]
English summary
How to check e20 compatible used petrol car before buying
மேலும்... #fuel #cars #used car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out