விபத்தில் சிக்கிய காரை கண்டுபிடிப்பது எப்படி? செகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறவங்களுக்கு செம டிப்ஸ்!

நீங்கள் செகண்ட் ஹேண்டில் கார் வாங்க போகிறீர்கள் என முடிவு செய்துவிட்டால் அப்பொழுது விபத்தில் சிக்கிய காரை வாங்கி ஏமாறாமல் இருப்பது எப்படி எனவும், விபத்தில் சிக்கிய காரை எப்படிக் கண்டுபிடிப்பது எனவும் இங்கே வழங்கியுள்ளோம் காணுங்கள்.

இந்தியா ஆட்டோமொபைல் விற்பனைக்கு மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவில் அவர்களது கார்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் கார், பைக் வாகன விற்பனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எப்படி இந்தியாவில் புதிய கார்கள் விற்பனையாகிறதோ அதே அளவிற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் மறு விற்பனையும் அதிகமாக நடக்கிறது.

விபத்தில் சிக்கிய காரை கண்டுபிடிப்பது எப்படி? செகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறவங்களுக்கு செம டிப்ஸ்!

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான மார்கெட்டும் மிகவும் பெரியது. நாம் புதிதாக கார் வாங்கும் போது கார் எப்படி இருக்கிறது. கலர், இன்ஜின் திறன், மைலேஜ் உள்ளிட்ட ப விபரங்களை வைத்துத் தேர்வு செய்து விடுவோம். ஆனால் பயன்படுத்தப்பட்ட கார்களை தேர்வு செய்வது அவ்வளவு எளிமை கிடையாது. பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் போது எக்கச்சக்கமான விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் நாம் ஏமாந்து போக வாய்ப்பு இருக்கிறது.

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டில் கார்களை வாங்கி சிக்கலில் மாட்டியவர்கள் பலர் இருக்கின்றனர். கடத்தல் கார், விபத்தில் சிக்கிய கார், உதிரி பாகங்கள் டேமேஜ் ஆன கார் என ஏகப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் மார்கெட்டில் இருக்கிறது. இதை ஏமாற்றி விற்பனை செய்யும் செயலும் மார்கெட்டில் நடக்கிறது. இப்படியாக ஒரு விபத்தில் சிக்கிய கார் மார்கெட்டில் இருக்கிறது என்றால் அதை வாங்கி நாம் ஏமாறாமல் இருக்க, ஒரு கார் விபத்தில் சிக்கியதா இல்லை என்பதை எப்படிக் கண்டறிவது எனக் காணலாம்.

சர்வீஸ் ரெக்கார்டு

ஒரு புதிய கார் வாங்கு ஒரு சில ஆண்டுகளே ஆன நிலையில் ஒரு கார் பயன்படுத்தப்பட்ட கார்கள் மார்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது என்றால் அந்த காருக்கு பெரும்பாலும் சர்வீஸ் ரெக்கார்டு சரியாக இருக்கும். இதைப் பார்த்தாலே தெரிந்து விடும் எந்தெந்த உதிரிப் பாகங்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை வைத்து அந்த உதிரி பாகங்களை மாற்றியதற்கான காரணத்தை விசாரித்தால் அந்த கார் விபத்தில் சிக்கிய விபரம் தெரிய வர வாய்ப்பு இருக்கிறது.

விண்ட் ஷீல்டு

ஒரு பெரிய விபத்து நடந்தால் காரில் அதிகமாகப் பாதிக்கப்படுவது காரின் விண்ட் ஷீல்டு தான். கார் மோதிய அதிர்வில் காரின் கண்ணாடிகளில் கிராக் இருக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது. விபத்தில் சிக்கிய காரை டேமேஜை சரி செய்துவிட்டு உங்களை ஏமாற்றி விற்பனை செய்ய முயன்றால் அவர்கள் இந்த இடத்தில் மாற்றிக்கொள்வார்கள். கண்ணாடியில் கீரல் விழுகிறதென்றால் 99 சதவீதம் விபத்து தான் காரணமாக இருக்கும் அதனால் கார் கண்ணாடியில் கீரல் இருக்கம் காரை செகண்ட் ஹேண்டாக வாங்குவதைத் தவிர்க்கலாம். அல்லது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம்.

பம்பர்

ஒரு கார் விபத்தில் சிக்கினால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பம்பர் பகுதி தான். ஆனால் விபத்தில் சிக்கிய காரை சரி செய்து விற்பனை செய்யும் முடிவில் இருக்கும் நபர் காரின் பம்பரை சரி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு, அதனால் காரின் பம்பரில் உராய்வு போன்ற தடங்கள் இருந்தால் அதை பார்க்கும் போதே அது
என்ன விதமான, உராய்வு என்பது தெரிந்துவிடும். அதே உராய்வு காரின் பாடி பகுதியில்இல்லாமல் இருந்தால் காரை அவர்கள் உங்களை ஏமாற்றி விற்பனை செய்ய முயற்சி செய்கிறார்கள் என அர்த்தம்.

இன்சூரன்ஸ்

ஒரு கார் விபத்தில் சிக்கியிருந்தால் பலர் அந்த காருக்காக அவர்கள் பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அந்த காருக்கான இன்சூரன்ஸை கிளம்ப் செய்திருப்பார்கள். அதில் கார் விபத்தில் சிக்கியிருந்தால் என்ன விபத்து எப்படிப்பட்ட சேதாரம் ஏற்பட்டது என்ற தகவல்கள். இதனால் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து காரின் இன்சூரன்ஸ் கிளம்ப் ஹிஸ்டரியை கேட்டால் அதன் மூலமும் கார் விபத்தில் சிக்கியுள்ளதா இல்லையா என்பதை ஒரளவிற்கு தெரிந்து கொள்ளலாம்.

கதவு இடுக்குகள்

காரின் முன்பக்கம் சேதம் ஆகாமல் சில நேரம் காரின் பக்கவாட்டு பகுதி விபத்தில் சிக்கியிருக்கும். இப்படியான நேரங்களில் காரில் உள்ள டெண்ட்களை சரி செய்து உங்களிடம் விற்பனை செய்ய முயற்சி செய்வார்கள். இதை டெஸ்ட் செய்ய காரின் கதவு இடுக்கு பகுதிகளைப் பார்த்தால் தெரியும் ஃபேக்டரி பிட்டிங்கில் வரும் போது இடைவெளியே இல்லாமல் இருக்கும். விபத்து ஏற்பட்டுச் சரி செய்யப்பட்டிருந்தால் கதவுகளின் இடையே சிறிய இடைவெளி இருக்கும். இப்படி இருந்தாலும் கார் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது என அர்த்தம்.

பெயிண்ட்

ஒரு விபத்து நடந்து உதிரிப் பாகங்களைச் சரி செய்தாலும் பெயிண்ட்டை சரி செய்வது என்பது மிகவும் சிரமமான காரின் ஃபேக்டரி ஃபினீஷிங் கொண்ட பெயிண்ட்கள் தான் காரில் அனைத்து பகுதியிலும் இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள் ஒரு பக்கம் மட்டும் காரின் பெயிண்ட் வித்தியாசப்படுகிறதா என்பதையும் செக் செய்யுங்கள் பெயிண்டில் வித்தியாசம் இருந்தால் தனியாக பெயிண்ட் அடிக்க வேண்டிய தேவை கார் விபத்தில் சிக்கியிருந்தால் மட்டுமே ஏற்படும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, December 26, 2022, 18:11 [IST]
English summary
How to check the accident history of the used car
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+