புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

புதிய கார் வாங்கும்போது இன்டீரியரை எப்படி தேர்வு செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

புதிய கார் வாங்கும் ஒவ்வொருவரும் நிறைய யோசிப்பார்கள். இறுதி முடிவை எடுப்பதற்கு முன் காரின் விலை, மைலேஜ், டிசைன், வசதிகள் உள்பட பல்வேறு அம்சங்களை அவர்கள் பரிசீலனை செய்வார்கள். எனினும் இன்டீரியர் பற்றி யாரும் பெரிதாக கவலைப்படுவது கிடையாது. ஆனால் இன்டீரியருக்கும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விலை, மைலேஜ், டிசைன், வசதிகள் ஆகியவை அதிக முக்கியத்துவம் குறித்து பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அதே அளவு முக்கியத்துவத்தை இன்டீரியருக்கும் வழங்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஏனெனில் உங்கள் பயணத்தின்போது நீங்கள் பெரும்பாலான நேரத்தை காரின் இன்டீரியரில்தான் செலவிட போகிறீர்கள்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே நீங்கள் வாங்கும் காரின் இன்டீரியர் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பது அவசியம். சிறப்பான இன்டீரியர் கொண்ட காரை எப்படி தேர்வு செய்வது? என்பது தொடர்பான எளிமையான டிப்ஸ்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் புதிய கார் வாங்கும்போது உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சௌகரியம்

டிரைவர் இருக்கை, பயணிகள் இருக்கை என அனைத்து இருக்கைகளையும் சோதித்து பாருங்கள். இருக்கைகளில் பயன்படுத்தப்பட்டு மெட்டீரியல், பொஷிஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் சோதித்து பார்க்க வேண்டும். நீங்கள் தொலைதூர பயணங்களை செய்யும்போது, ஏதாவது அசௌகரியம் ஏற்படுமா? என்பதை இதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

போதுமான அளவிற்கு ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் உள்ளதா? தொடை, இடுப்பு ஆகிய பகுதிகளுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறதா? என்பதையும் பரிசோதித்து பாருங்கள். டிரைவர் இருக்கை மற்றும் ஸ்டீயரிங் வீல் அட்ஜெஸ்ட்மெண்ட்டையும் நீங்கள் முக்கியமாக பரிசோதித்து பார்க்க வேண்டும். ஹீட்டட் சீட் (Heated Seat), மசாஜ் வசதிகள் உள்ளதா? என்பதையும் பாருங்கள்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் மசாஜ் வசதி கொண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும் கார்களின் விலை அதிகமாக இருக்கலாம். எனவே உங்கள் பட்ஜெட்டை பொறுத்து முடிவு செய்யுங்கள். அதேபோல் ஏசி-யின் செயல்திறனையும் பரிசோதித்து பாருங்கள். இந்தியாவில் கோடை காலங்களில் நிலவும் வெப்ப நிலைக்கு ஏசி மிகவும் அவசியம்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக வெளியில் இருக்கும் வெப்ப நிலையை விட காரின் இன்டீரியருக்குள் அதிக வெப்ப நிலை இருக்கும். எனவே காரின் இன்டீரியர் வேகமாக சூடேறி விடும். அப்போது ஏசி சிறப்பாக இல்லாவிட்டால், பயணத்தின்போது நீங்கள் அதிக அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக கோடை காலங்களில் ஏசி இல்லாத பயணத்தை நினைத்து பார்ப்பதே கடினமான விஷயம். அதேபோல் இன்டீரியர் விசாலமாகவும், காற்றோட்டமாகவும் உள்ளதா? என்பதையும் பார்த்து கொள்ளுங்கள்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பூட் ஸ்பேஸ்

காரின் பூட் ஸ்பேஸ் எவ்வளவு என்பதை முக்கியமாக பாருங்கள். பின்னர் அதனுடன் மற்ற கார்களையும் ஒப்பிட்டு முடிவு செய்யுங்கள். பூட் ஸ்பேஸ் அதிகமாக இருந்தால், நீங்கள் அதிக லக்கேஜை கொண்டு செல்ல முடியும். எனவே உங்கள் பயணங்களை எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதை பொறுத்து முடிவு செய்யுங்கள். இருக்கைகளை மடக்கி வைத்து கொள்ளும் வசதி உள்ளதா? அப்படி மடக்கி வைத்து கொள்வதன் மூலம் பூட் ஸ்பேஸை எவ்வளவு அதிகரிக்க முடியும்? என்பதையெல்லாம் பாருங்கள்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஏறி, இறங்க சௌகரியமாக உள்ளதா?

குடும்பத்திற்காக புதிய கார் வாங்கும்போது, முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளையும் கவனத்தில் கொள்வது அவசியம். குறிப்பாக அவர்கள் ஏறி, இறங்க சௌகரியமாக உள்ளதா? கதவுகளை அவர்களால் எளிமையாக கையாள முடிகிறதா? என்பதையெல்லாம் பாருங்கள். ஒரு சில கார்களில் கதவுகளை கையாள்வது அவர்களுக்கு சிக்கலான விஷயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவர் அல்லது தெரிந்தவர்கள் உதவினால் மட்டுமே அவர்களால் கதவுகளை திறக்க முடியும். எனவே கதவுகளை கையாள்வது எளிமையாக உள்ளதா? என்பதை பார்ப்பதும் முக்கியம்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

தொலை தூர பயணங்களுக்கு ஏற்றதா?

ஒரு காரின் இன்டீரியர் தொலை தூர பயணங்களுக்கு ஏற்றதாகவும், ரிலாக்ஸை வழங்குவதாகவும், பாதுகாப்பானதாகவும், சௌகரியமானதாகவும் இருக்க வேண்டும். செல்போன் போன்ற உபகரணங்களை சார்ஜ் செய்வதற்கு முறையான யூஎஸ்பி சாக்கெட்கள் உள்ளதா? என்பதையும் பாருங்கள். உயர்தரமான மியூசிக் சிஸ்டம் தொலை தூர பயணங்களின்போது உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

புதுசா கார் வாங்கறப்ப இன்டீரியரில் எதையெல்லாம் கவனிக்கனும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆர்ம்ரெஸ்ட்கள், கப் ஹோல்டர்கள் ஆகியவற்றையும் பார்த்து கொள்ளுங்கள். இன்டீரியரில் நல்ல ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பது மிகவும் முக்கியம். காரின் கதவுகள் மற்றும் இருக்கைகளில் கூட ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நீங்கள் கவனத்தில் கொண்டால், உங்கள் பயணம் குறுகியதோ அல்லது நீண்டதோ எதுவாயினும் சிறப்பாக இருக்கும்.

Most Read Articles

English summary
How to choose a car interior useful tips
Story first published: Sunday, January 2, 2022, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X