கார் டயர் தானேனு அசால்ட்டா கடந்து போகிறோம்... மைலேஜில் இருந்து பாதுகாப்பு வரை எல்லாமே அதில்தான் இருக்கு!

இந்திய சாலைகளுக்கு ஏற்ற உகந்த டயர்களைத் (Tyres) தேர்ந்தெடுப்பது சவாலானது. ஏனெனில், இங்குள்ள பெரும்பாலான சாலைகள் சீரற்றவை, பல்வேறு மேற்பரப்புகளைக் கொண்டவை. உங்களது காரின் செயல்பாடு, பாதுகாப்பிற்கு சரியான டயர்களை தேர்வு செய்வது மிக முக்கியம். ஆகையால், காருக்கான டயர்களை தேர்வு செய்யும்போது கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய அம்சங்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

முதலில், உங்கள் காரின் சக்கரங்களுக்கு ஏற்ற அளவில் டயர்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். காரின் சக்கரங்கள் எத்தகைய உலோகத்தினால் ஆனவை, அவற்றில் எந்த மாதிரியான, எந்த அளவுள்ள டயர்களை பொருத்த வேண்டும் என்பதை காருடன் கார் உற்பத்தி நிறுவனம் வழங்கிய புத்தகத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

right car tyres for indian roads

சில கார்களில் வெளிப்பக்க கதவு ஃப்ரேமில் கூட அதனை குறிப்பிட்டு இருப்பர். டயரின் அகலம், விகிதம், விளிம்பு விட்டம் ஆகியவை கார் உற்பத்தி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். தவறான அளவுள்ள டயர்கள் காரில் பயண சவுகரியத்தையும், பாதுகாப்பையும் பாதிக்கும்.

அடுத்ததாக, டயர் வகையை கவனிக்க வேண்டும். ரேடியல் (Radial) டயர்கள் தான் இந்தியாவில் பெரும்பாலும் கார்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவை மென்மையான ஓட்டத்தையும் சிறந்த மைலேஜையும் தருகின்றன. இவை தவிர, ஆல்-சீசன் (All-Season) டயர்கள், கோடைகால டயர்கள், குளிர்கால டயர்கள் எனப் பல வகைகள் உள்ளன.

right car tyres for indian roads

இந்திய காலநிலைக்கு ஆல்-சீசன் டயர்கள் பொருத்தமானவை. ஏனெனில் அவை பல்வேறு வெப்பநிலைகளில் செயல்படும் திறன் கொண்டவை. மேலும், அவை மழை மற்றும் பனி மிகுந்த சாலைகளிலும் காரை ஓட்டுவதற்கு கூடுதல் கண்ட்ரோலை வழங்கும். அந்தந்த சீசனுக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்த விரும்புகிறீர்கள் எனில், அதற்கேற்ப கோடைகால மற்றும் குளிர்கால டயர்கள் என தனித்தனியாக உள்ளன.

அடுத்தது, டயரின் ட்ரெட் பேட்டர்னை (Tread Pattern) சரியானதாக பார்த்து தேர்வு செய்வது முக்கியம். ஏனெனில், டயரின் டிரெட் கூட காரின் செயல்திறனை நிர்ணயிக்கும் காரணிகளுள் ஒன்றாக உள்ளது. ஈரமான சாலைகளில் சிறந்த பிடிமானத்தை உறுதி செய்ய, ட்ரெட் ஆழமாகவும், நீரை வெளியேற்றக் கூடிய பள்ளங்களுடனும் இருப்பது அவசியம்.

மழைக்காலங்களில் சாலைகளில் நீர் தேங்குவதால், நல்ல பிடிமானமுள்ள டயர்கள் கார் வழுக்குவதைத் தடுக்கும். சமச்சீரான ட்ரெட் பேட்டர்னை கொண்ட டயர்கள் கார் இயங்கும்போது குறைவான சத்தத்தை எழுப்பக் கூடியதாகவும், பயன்படுத்த பயன்படுத்த சீரான தேய்மானத்தை வழங்கக் கூடியதாகவும் இருக்கும். டயரில் தேய்மானங்கள் சமச்சீரற்ற முறையில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அதிகம் உருவாகுவது டயர் வெடிப்பு போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

right car tyres for indian roads

இவற்றுடன், டயரின் ஆயுள் மற்றும் கார் மைலேஜையும் கருத்தில் கொள்ள வேண்டும். டயரின் "ட்ரெட்வேர் இண்டெக்ஸ்" (Treadwear Index) அதன் ஆயுளைக் குறிக்கும். அதிக ட்ரெட்வேர் இண்டெக்ஸ் கொண்ட டயர்கள் நீண்ட காலம் உழைக்கும் என அர்த்தமாகும். அதே சமயம், டயரின் வெப்ப எதிர்ப்புத் திறன் (Temperature Resistance) மற்றும் இழுவைத் திறன் (Traction) ஆகியவற்றையும் ட்ரெட்வேர் இண்டெக்ஸில் குறிப்பிடுகின்றனர்.

இந்த குறியீடுகள் டயரின் பக்கவாட்டில் சுருக்கமாக எண்கள்/ எழுத்துகளாக குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை தெரிந்துக் கொள்வதன் மூலம், காரின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமின்றி, காரில் அதிக மைலேஜையும் பெற முடியும். ஏனெனில், கார் சிறந்த மைலேஜை வழங்குவதில், டயர்களின் பங்களிப்பும் முக்கியமானது ஆகும்.

இறுதியாக, டயரின் உற்பத்தி தேதியையும் சரிபார்க்க வேண்டும். டயர்கள் காலப்போக்கில் சேதமடையக் கூடியவை. பழைய டயர்கள் பாதுகாப்பற்றவை. ஆறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான டயர்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எனவே, புதிய டயர்களை வாங்கும் போது உற்பத்தி தேதி சமீபத்தியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் மட்டுமின்றி, எந்தவொரு வாகனமும் தரையுடன் நேரடியாக தொடர்பு கொள்வது டயர்கள் மூலமாக தான். அதாவது, பல்வேறான நமது இந்திய காலச்சூழல்களை நேரடியாக எதிர்கொள்வது டயர்களே ஆகும். ஆகையால், மேற்கூறப்பட்ட அம்சங்களை மனதில் கொண்டு சரியான டயரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாகவும், சவுகரியமானதாகவும் மாற்றும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 15, 2025, 23:59 [IST]
English summary
How to choose the right tires for indian roads check all details here
மேலும்... #car tips #car tyre
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X