உசுர கொடுத்து சம்பாதிக்கிற பணமெல்லாம் கார் இஎம்ஐக்கே போகுதா? இப்படி பண்ணுங்க இஎம்ஐ பிரச்சனையே வராது!

இன்று புதிதாக கார் வாங்கும் பலர் தங்கள் பட்ஜெட்டை மீறி காரை வாங்கி அதனால் கடன் ஏற்பட்டுக் கஷ்டப்படுகின்றனர். உங்கள் வருமானத்திற்கு ஏற்ற தரமான காரை எப்படித் தேர்வு செய்வது என்பதைத் தான் இங்கே வழங்கியுள்ளோம். தெளிவாக இதைப் பற்றிக் காணலாம் வாருங்கள்.

ஒரு காலத்தில் கார் என்பது பெரிய பெரிய பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் வாகனமாக இருந்தது. ஒரு ஊரில் ஒன்று இரண்டு வீட்டில் மட்டும் தான் கார் வைத்திருப்பார்கள். ஆனால் இன்று அப்படியல்ல. மிடில் கிளாஸ் மக்களும் கார் வாங்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார்கள். இன்று கார் சிட்டியில் வாழும் ஒருவருக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதனால் கார்களின் விற்பனையும் ஆண்டிற்கு ஆண்டு அதிகமாகிக்கொண்டே வருகிறது.

முன்பெல்லாம் அதிக பணம் இருந்தால் தான் கார் வாங்க முடியும் என்ற நிலைமை கார்களுக்கு லோன் வழங்கும் முறை வந்த பின்பு மாறிவிட்டது. இன்று பெரும்பாலான மக்கள் லோன் மூலமே காரை வாங்குகின்றனர். லோன் போட்டு காரை வாங்கும் பலர் முறையாகக் கணக்கிடாமல் தங்கள் காரை வாங்கி அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க அல்லது அதற்கு இஎம்ஐ கட்ட முடியாமல் காரை விற்பனை செய்து நஷ்டமடைகின்றனர்.

இப்படியாக மாத சம்பளக்காரர் ஒருவர் தனக்குத் தகுதியான காரை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதை தான் இந்த பதிவில் காணப்போகிறோம். நீங்கள் கார் வாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால் மார்கெட்டில் உங்களுக்குப் பிடித்த கார் எது அதை வாங்க எவ்வளவு லோன் வாங்க வேண்டும்,எவ்வளவு முன்பணம் கட்ட வேண்டும் என யோசிக்காதீர்கள். காரை தேர்வு செய்யும் முன்பு உங்கள் பட்ஜெட்டை முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் காரை மட்டும் தேர்வு செய்யுங்கள்.

அதற்கு முன் உங்கள் பட்ஜெட்டை முடிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு எளிமையான வழி உங்கள் ஆண்டு வருமானம் எவ்வளவு என கணக்கிட்டு அதில் பாதியை உங்கள் காருக்கான பட்ஜெட்டாக வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் ஆண்டிற்கு ரூ12 லட்சம் சம்பளம் வாங்கினால் ரூ6 லட்சத்தை உங்கள் காருக்கான பட்ஜெட்டாக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே நீங்கள் 24 லட்சம் சம்பளம் வாங்கினால் ரூ12 லட்சத்தை உங்கள் காருக்கான பட்ஜெட்டாக வைத்துக்கொள்ளுங்கள்.

காருக்கான பட்ஜெட்டை தேர்வு செய்தவுடன் இவ்வளவு பணமும் உங்கள் வங்கிக் கணக்கில் இல்லை. நீங்கள் லோன் மூலம் காரை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் பரவாயில்லை அதுவும் நல்ல தேர்வு தான். ஆனால் லோன் மூலம் வாங்கும் போது நீங்கள் 20-4-10 என்ற விதியை கட்டாயம் கடைப்பிடியுங்கள். இப்படிச் செய்தால் தான். அது உங்கள் வாழ்க்கைக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமலும் அதே நேரம் நீங்கள் கார் இஎம்ஐ கட்டுவதற்குக் கடன் வாங்கவோ அல்லது காரை விற்கும் நிலையோ ஏற்படாமல் இருக்கும்.

20-4-10 விதி என்றால் காருக்கான மொத்த பட்ஜெட்டில் 20 சதவீதத்தை நீங்கள் டவுண் பேமெண்டாக செலுத்திவிடுங்கள். மீதியுள்ள 80 சதவீதத்திற்கு மட்டும் கடன் வாங்குங்கள், இது தான் 20 என்பதைக் குறிக்கிறது. அடுத்த 4 என்பது மீதம் உள்ள 80 சதவீத பணத்தை வட்டியுடன் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கும்படியான இஎம்ஐ திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். 4ஆண்டிற்கு மேல் சென்றால் வட்டி அதிகமாகிவிடும். இதனால் காருக்கான நீங்கள் செய்யும் செலவும் அதிகமாகிவிடும்.

அதே போலக் கடைசியாக உள்ள 10 என்பது நீங்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐயை குறிக்கிறது. உங்கள் மாத வருமானத்தில் 10 சதவீதம் மட்டுமே காருக்கான இஎம்ஐயாக செலுத்த வேண்டும். அதாவது நீங்கள் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவராக இருந்தால் மாதம் ரூ10 ஆயிரத்தை இஎம்ஐயாக செலுத்தும் அளவிற்கான காரை தேர்வு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் பெரும்பாலானோருக்கு இஎம்ஐ செலுத்துவதில் பிரச்சனை ஏற்படவில்லை. அவர்கள் 4 ஆண்டுகளில் இஎம்ஐயை முழுமையாகச் செலுத்திவிடுகின்றனர்.

இப்படிப் பார்க்கும் போது ரூ6 லட்சத்திற்குள் மார்கெட்டில் மாருதி வேகன் ஆர், ஆல்டோ, ரெனால்ட் க்விட், என ஏராளமான கார்கள் இருக்கின்றன. இது ஆண்டிற்கு ரூ10 -12 லட்சம் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற கார். அடுத்ததாக ரூ10 லட்சத்திற்குள் டாடா நெக்ஸான், மாருதி பலேனோ, மாருதி பிரெஸ்ஸா, டாடா பஞ்ச் ஆகிய கார்கள் இருக்கிறது. இது ஆண்டிற்கு ரூ20-24 லட்சம் சம்பளம் வாங்குபவர்களுக்கான கார். நீங்கள் எந்த காரை வாங்க விரும்புகிறீர்கள் கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, December 19, 2022, 12:13 [IST]
English summary
How to choose your car according to your budget find the math here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+