கார் ஹெட்லைட்டை டூத் பேஸ்டை வைத்து சுத்தம் பண்ணலாமா? எப்படி பண்ணனும்?
இன்று பலர் கார்களின் ஹெட்லைட்டை வெறும் டூத் பேஸ்டை வைத்து சுத்தம் செய்யலாம் எனப் பேசியும் செய்தும் வரும் வருகின்றனர். உண்மையில் கார்களில் ஹெட்லைட்டை நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் டூத் பேஸ்டை வைத்து சுத்தம் செய்ய முடியுமா? இதனால் ஏதாவது நன்மை உண்டாகுமா? அல்லது இதற்கு ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா? வாருங்கள் விரிவாகக் காணலாம்.
ஒரு காருக்கு ஹெட்லைட் என்பது மிகவும் முக்கியம். இரவு நேரப் பயணம் ஹெட்லைட் இல்லாமல் சாத்தியமே இல்லை. இரவு நேரத்தில் ஒரு வாகனத்தில் ஹெட்லைட் சரியாகவேலைசெய்யவில்லை என்றால் அந்த வாகனம் ரோட்டிற்கு செல்லும் போது அது விபத்தில் சிக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் வாகனம் ரோட்டிற்கு வரும் போது ஹெட்லைட் மிகவும் அவசியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஹெட்லைட்டை முறையாகப் பராமரிக்க வேண்டியது. அவசியம்.

நீங்கள் ஹெட்லைட்டை சரியாக பராமரிக்கவில்லை என்றால் கார் வாங்கிய புதிதில் பிரகாசமாக இருந்த லைட் நாளடைவில் மங்கிப்போவதைக் காண முடியும். இதற்குக் காரணம் ஹெட்லைட்டில் பவர் குறைந்துவிட்டதாகப் பலர் கருதுவார்கள். ஆனால் உண்மை ஹைலைட்டின் முன்பு உள்ள கண்ணாடியில் அழுக்கு அடைந்தது தான் முக்கியமான காரணமாக இருக்கும். இதனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை இதைச் சுத்தம் செய்ய வேண்டும்.
நீங்கள் என்னதான் முறையாகக் காரை வாட்டர் சர்வீஸ் செய்தாலும் ஹெட்லைட்டில் உள்ள கண்ணாடியில் அழுக்கு படிவது அந்த நேரத்தில் போகாது. முதலில் ஹெட்லைட் முன் உள்ள கண்ணாடியில் அழுக்கு படிய முக்கியமான காரணம் வெளிக்காற்றில் அதிகமாக எக்ஸ்போஸ் ஆவதால் தான். குறிப்பாக காரின் ஹெட்லைட் கண்ணாடி நாளடைவில் மஞ்சள் நிறமாக மாறி வருவதை நீங்கள் பார்க்க முடியும். இப்படியாக மஞ்சளாக மாறுவதற்குக் காரணம் சூரியன் தான்.
ஹெட்லைட்கள் நேரடியாகச் சூரிய வெளிச்சத்தில் படும்போது சூரிய வெப்பத்திற்கும் ஹெட்லைட் உள்ள இருக்கும் ரிஃப்லெக்டர் அந்த ஓளியை மீண்டும் உள்ளிருந்து வெளியே ரிஃப்லெக்ட் செய்வதாலும் இதற்கு இடையே இருக்கும் கண்ணாடி அதிகமாக ஆக்ஸிடைஷைனிற்கு ஆளாகிறது. இதனால் தான் ஹெட்லைட் கண்ணாடி மஞ்சள் நிறத்தில் ஆகிறது. இது போக தூசு அழுக்கு எல்லாம் சேர்ந்து ஹெட்லைட்டை மங்கிப்போக வைக்கிறது.
இப்படியாக மங்கிப்போன ஹைட்லைட்டை சுத்தப்படுத்தி மீண்டும் பளீச் என மாற்ற மார்கெட்டில் பல பொருட்கள் இருந்தாலும் இன்று டிரெண்டில் இருப்பது டூத் பேஸ்ட் தான். சமூகவலைத்தளங்களில் பல வீடியோக்களில் கண்ணாடி உள்ளிட்ட பொருட்களைச் சுத்தம் செய்ய டூத் பேஸ்டை பயன்படுத்துகின்றனர். இதன் ரிசல்ட் சிறப்பாக இருப்பதால் இதைப் பலர் காரின் ஹெட்லைட்டிற்கும் பயன்படுத்துகின்றனர். இது சரியான விஷயம் தானா என்று கேட்டால் இதில் தவறு ஒன்று இல்லை என்பதே உண்மையான பதில்.
நீங்கள் தாராளமாக காரின் ஹெட்லைட் கண்ணாடியின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்ய டூத் பேஸ்டை பயன்படுத்தலாம். டூத் பேஸ்டில் பற்களைச் சுத்தம் செய்ய ஹைட்ரஜன் பெராக்ஸைடு இருக்கிறது. இது தான் கார் ஹெட்லைட், கண்ணாடி போன்ற பொருட்களையும் சுத்தப்படுத்த உதவுகிறது. சரி இனி டூத் பேஸ்டை பயன்படுத்தி காரின் ஹைட்லைட்டை எப்படி சுத்தப்படுத்துவது எனக் காணலாம்.
முதலில் டூத்பேஸ்டை வைத்து காரின் ஹெட்லைட்டை சுத்தப்படுத்துவதற்கு முன்பு ஹெட்லைட்டை தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவ வேண்டும். இல்லை என்றால் அதில் இருக்கும் அழுக்கு மற்றும் சிறு சிறு கற்கலால் ஹெட்லைட்டில் ஸ்கிராட்ச்கள் ஏற்படும். இதனால் முதலில் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் காய விடுங்கள். அதன் பின்னர் தான் டூத் பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும்.
முதலில் நடுவில் கொஞ்சம் டூத் பேஸ்டை வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஹெட்லைட் கண்ணாடி முழுவதும் பரப்பி விட வேண்டும். அதன்பின்னர் ஒரு மைக்ரோ ஃபைபர் துணியை எடுத்து அந்த டூத் பேஸ்டை அழுத்தி வட்ட வடிவில் சுற்றித் தேய்க்க வேண்டும். உங்களுக்கு போதுமான அளவு தேய்த்துவிட்டு அதன் அழுக்குகள் எல்லாம் போய்விட்டதாக நீங்கள் திருப்தியடைந்தபின்பு மீண்டும் சுத்தமான தண்ணீரை வைத்து ஹெட்லைட்டை துடைத்துவிட்டால் வேலை ஓவர்.
இதைச் செய்த பின்பு ஹெட்லைட் முன்பைவிட பளீச் என இருக்கும். இதனால் இரவு நேரங்களில்
நீங்கள் பயப்படாமல் பயணம் செய்ய முடியாது. இப்படியாக ஹெட்லைட்டை பேஸ்ட் வைத்துத் துடைக்கும் முன்பு ஹெட்லைட்டில் ஏதாவது கீரல் அல்லது உடைப்பு ஏதாவது இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். அது இருந்தால் டூத் பேஸ்ட் வைத்து சுத்தம் செய்ய வேண்டாம். அது உங்கள் கை விரலைக் குத்தி கிழித்துவிட வாய்ப்பு இருக்கிறது.
இப்படியாக டூத் பேஸ்டை வைத்து சுத்தம் செய்த பின்பு மார்கெட்டில் சூரிய வெப்பத்தால் ஹெட்லைட் கண்ணாடி பாதிக்கப்படாதபடி இருக்க யூவி ரெஸ்டன்ட் சீலர் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி சுத்தமான கண்ணாடியில் பூசினால் கார்கண்ணாடி இன்னும் சில மாதங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். இப்படியாக நீங்கள் காரை டூத் பேஸ்டை வைத்து சுத்தம் செய்துள்ளீர்கள்? இதைக்குறித்த உங்கள் அனுபவத்தை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








